Bible Lamp

ஜோன் ஓவன்
[திருச்சபை வரலாற்றில் பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தவாத கால திருச்சபை எழுப்புதலுக்குப் பிறகு பதினேழாம் நூற்றாண்டு பெற்றுத்தந்த பெருமகன்களே பியூரிட்டன் பிதாக்களாகும் (Puritan Fathers). இங்கிலாந்தில் அரச ஆதரவாளராக இருந்து செயல்பட்ட ஆங்கிலேயத் திருச்சபை (Church of England) வேதத்தின் அதிகாரத்தை மட்டும் மதித்து நடக்காமல் அதற்குப் புறம்பான போதனைகளைப் பின்பற்றும்படி வற்புறுத்தியதால் அதனை எதிர்த்து நின்று பெருந்துன்பங்களுக்கு முகம் கொடுத்தவர்களே பியூரிட்டன் பிதாக்கள். திருச்சபையைத் தூய்மையாக வேத அடிப்படையில் மட்டுமே நடத்தவேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தி வாழ்ந்துகாட்டிப் போதனை செய்ததால் பியூரிட்டன்கள் (தூய்மைவாதிகள்) என்ற பெயரில் மற்றவர்களால் அழைக்கப்பட்டனர். ஆங்கிலேயத் திருச்சபை ஒரு ஜெப நூலை வெளியிட்டு அதிலிருப்பவைகளை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதால் அதை எதிர்த்த பியூரிட்டன்களும் ஏனையோரும் ஒத்துழையாவாதிகள் (Non-Conformist) என்ற பெயரிலும் அழைக்கப்பட்டனர். ஜெப நூலைப் பின்பற்றி ஆங்கிலேயத் திருச்சபையின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட மறுத்ததால் இவர்கள் மீது அரசினதும் ஆங்கிலேயத் திருச்சபையினதும் கொடுமைகள் அதிகரித்து 2000க்கும் அதிகமான போதகர்கள் ஆங்கிலேயத் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டதுடன் அநேகமானோர் நாட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டனர். இன்னும் அதிகமானவர்கள் உயிரிழக்கவும் நேரிட்டது. இதெல்லாம் வேதத்தை விசுவாசித்துப் பின்பற்றியதற்கு அவர்கள் கொடுத்த விலை.

இந்தப் பியூரிட்டன்களின் காலப்பகுதியில் வாழ்ந்து கர்த்தருக்குப் பணியாற்றி திருச்சபையை அலங்கரித்த பெருமகனே ஜோன் ஓவன். அவர் மகா ஞானி. இறையியலறிஞர்களுக்கெல்லாம் மேலான அறிஞர். எழுத்தில் சிறந்தவர். தலை சிறந்த, எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கக்கூடிய வேதப் பொக்கிஷங்களை எழுத்தில் நமக்குத் தந்தவர். அவையெல்லாம் ஆங்கிலத்தில் இன்றும் பதிப்பில் இருந்து வருகின்றன. அவர் கருணையும், ஆத்தும பாரமும் கொண்ட போதகர். அதையே அவர் தன் ஊழியத்திலெல்லாம் சிறந்ததாகக் கருதினார். பிரசங்கம் செய்வதில் அவருக்கு இணையில்லை. தனக்கென ஒரு தனி முறையைக் கைக்கொண்டு ஆவியில் நிறைந்து அவர் பிரசங்கித்தார். கிராமத்து சபைகளிலிருந்து நாட்டின் பாராளுமன்றம்வரை அவருடைய பிரசங்க சிறப்பின் மேன்மை பரவியிருந்தது. ஒலிவர் குரோம்வெல் அவரைத் தனக்கு சாப்ளினாக விவரமறியாமல் வற்புறுத்தி நியமிக்கவில்லை. இத்தனைக்கும் மத்தியில் ஓவன் மிகவும் தாழ்மையானவர். தன்னைப் பற்றிப் பெருமை பாராட்டிக்கொள்ளாமல் தன் தலைவரான கிறிஸ்துவின் மகிமையை அனைத்திலும் நாடியவர்.

ஜோன் ஓவன் எத்தகைய மனிதர் என்பதையும், அவருடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் சிறப்பையும், ஊழியத்தின் மேன்மையையும் ஆங்கிலத்தில் அவரைப் பற்றி வாசித்திராவர்களுக்கு வசதியாக இந்த ஆக்கத்தில் விளக்கியிருக்கிறார் ஜெரமி வோக்கர். ஓவன் எழுதிய நூல்களின் தலைப்புகளை தமிழில் மாற்றாமல் அப்படியே ஆங்கிலத்தில் தந்திருக்கிறோம். இந்த ஆக்கம் ஓவனின் சிறப்பை நீங்கள் அறிந்துகொண்டு அவருக்காக கர்த்தருக்கு நன்றி சொல்லவும், தொடர்ந்து அவர் எழுதியவற்றை வாசிக்கவும் உங்களைத் தூண்டுமானால் அதுவே இந்த ஆக்கத்திற்கு கிடைத்த சிறப்பாக இருக்கும். அதையும்விட ஓவன் விசுவாசித்த தேவனை நீங்கள் விசுவாசித்து, அவர் ஆத்மார்த்தமாகப் பின்பற்றிய சத்தியங்களுக்காக வாழவும், துன்பங்களைத் தாங்கவும், உழைக்கவும், ஏன் உயிரையும்கூடக் கொடுக்க உங்களைத் தூண்டுமானால் அதைவிடப் பெரிதாக இந்த ஆக்கத்தின் மூலம் நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது.]

ஒரு கிறிஸ்தவன் எப்படி வாழ வேண்டும் என்று தன்னுடைய வாழ்க்கையின் மூலம் உதாரணமாக விளங்கிய ஜோன் ஓவன் நம்முடைய கவனத்திற்கு உரியவர். அநேக விதங்களில் அவர் தான் வாழ்ந்த காலத்துக்கு மிகவும் தேவையான மனிதராக இருந்தாலும் வேறு சில விதங்களில் தன் காலத்தையும் மிஞ்சிய மனிதராக இருந்தார். இருந்தபோதும் கிருபையின் கனிகளாக அவர் கொண்டிருந்த அநேக குணாதிசயங்களும், வாழப் பயன்படுத்திய விதிமுறைகளும் எக்காலத்துக்கும் உரியவை. நேர்மையானவராகவும், உழைப்பாளியாகவும், கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து காட்டிய சிறந்த கிறிஸ்தவ மனிதர் என்ற முறையில் ஓவன் நம்முடைய கவனத்திற்கு உரியவராகிறார்.

ஒரு சிறந்த இறையியல் அறிஞர் என்ற முறையிலும் ஓவன் நம் கவனத்துக்குரியவராகிறார். விண்மண்டலத்தில் பளீரெனக் கண்சிமிட்டிக் காட்சியளிக்கும் அநேக நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஜொலிக்கும் நட்சத்திரங்களில் ஒன்றாக ஜோன் ஓவன் விளங்குகிறார். ஒரு சில விஷயங்களில் சமகாலத்து அறிஞர்கள் அவரைவிட சிறப்பானவர்களாக இருந்திருந்தாலும், கர்த்தரின் வேதத்தில் அவர் கொண்டிருந்த ஆழமான அறிவு, இணக்கமான ஈடுபாடு என்பவற்றைப் பொறுத்தவரையில் அவர் காலத்தில் அவருக்கு இணையானவர்கள் இருக்கவில்லை.

அழிவில்லாத படைப்புகளைத் தந்த படைப்பாளி என்ற அடிப்படையிலும் ஓவன் நம் கவனத்துக்குரியவராகிறார். ஆங்கிலம் பேசப்படும் தேசங்களில் அநேக சீர்திருத்த கிறிஸ்தவர்கள் ஓவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அவருடைய நூல்களில் ஒன்றையாவது வைத்திருப்பார்கள். ஆனால், அவருடைய நூல்கள் பல இடங்களில் வாசிக்கப்படாது தூசி படர்ந்து காணப்படுகின்றன. சம காலத்து மக்களுக்கு அக்கறையெடுத்து பெரிய நூல்களை வாசிக்கப் பொறுமையில்லை; கவனத்தோடு ஆராய்ந்து படிப்பதில் அக்கறையில்லை; விடாமுயற்சியோடு பல பக்கங்களை வாசிக்கவும் அவர்களுக்கு மனதில்லை. ஓவனின் எழுத்துக்களும், நூல்களும் ஒரு பெரும் சிக்கலான பழத்தோட்டத்தைப் போன்றவை. அவற்றில் பழ அறுவடை செய்வதென்பது இலகுவான காரியமல்ல. ஒவ்வொரு மரத்திலும் தொகையான பழங்கள் இருக்கின்றன. ஓவனின் நூல்களில் பல ஆங்கிலத்தில் பல்வேறு பதிப்புகளில் வாசகர்களின் வாசிப்புத் திறனுக்கும், தேவைக்கும் ஏற்ற முறையில் இலகுவான ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றன. ஓவனின் எழுத்துக்களைப் படிக்க ஆரம்பித்திருப்பவர்கள் மேலும் மேலும் அவருடைய எழுத்துக்களோடு பரிச்சயப்பட்டு அவரை அறிந்துகொள்ளும்படி அவை வசதியளிக்கின்றன. இருந்தபோதும் ஓவனின் எழுத்துக்களில் ஆர்வமும், அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளும் திறனும் உள்ளவர்கள் அவருடைய ஆக்கங்களை மூலத்தில் வாசிப்பது நன்மை பயக்கும். விஷயமேயில்லாத இக்காலத்தவர்களின் எழுத்துக்களோடு ஒப்பிடும்போது ஓவன் ஆங்காங்கு தந்திருக்கும் சாதாரண குறிப்புக்கள்கூட மிகவும் ஆழமானவையாகவும், சத்தானவையாகவும் இருக்கின்றன.

ஓவனுடைய ஆற்றலையும், பெருமையையும் படம்பிடித்துக் காட்ட முயலும் நான் ஓவனின் எழுத்துக்களில் பாண்டித்தியம் பெற்றவனல்ல. ஓவனுடைய வாழ்க்கையைப் பற்றிய இந்த ஆக்கத்தில் ஓவனைப் பற்றிய புதிய ஆராய்ச்சிகளின் பலன்கள் எதையும் நான் வெளியிடவில்லை; அத்தோடு அவருடைய எழுத்துக்களின் சிறப்பை அறிவிப்பதில் தேர்ந்தவனாகவும் என்னைக் காட்டிக்கொள்ளவில்லை. ஓவனுடைய எழுத்துக்கள் என்னைத் தாழ்மைப்படுத்தி என்னுடைய ஞானக்குறைவையே வெளிப்படுத்துகின்றன. இந்த ஆக்கத்தை எழுதுகிறபோது ஓவனிடமிருந்து கற்றுக் கொள்ளுகிற எண்ணத்தோடேயே அதை ஆரம்பிக்கிறேன். அதுமட்டுமல்லாமல் இந்த ஆக்கம் நீண்டுவிடக்கூடாதென்பதற்காக ஓவனுடைய ஆக்கங்களில் இருந்து ஒரு சில நேரடிக் குறிப்புகளை மட்டுமே இதில் தந்திருக்கிறேன். இந்த ஆக்கம் ஓவனுடைய எழுத்துக்களை நீங்களே நேரடியாக வாங்கி வாசித்து அவை தரும் பெரும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள உதவட்டும்.

ஓவனின் வாழ்க்கை

ஜோன் ஓவன் 1615ல் ஹென்றி ஓவனின் (Henry Owen) இரண்டாவது மகனாகப் பிறந்தார். ஹென்றி ஓவன் ஸ்டெட்ஹாம்டனில் (Stadhampton) இருந்த ஆக்ஸ்போர்ட்ஷயர் (Oxfordshire) கிராமத்தில் “ஒத்துழையாவாத” ஆங்கிலிக்கன் குருவாக (Non-Conformist Anglican Vicar) இருந்தார். (1662ம் ஆண்டில் ஆங்கிலிக்கன் திருச்சபையில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பாக ஆங்கிலிக்கன் திருச்சபை பயன்படுத்திய ஜெபநூலில் கொடுக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளை ரோமன் கத்தோலிக்க மதப்போதனைகளை சார்ந்ததாகக் கருதி எதிர்த்து நின்ற ஆங்கிலிக்கன் குருமார்களே “ஒத்துழையாவாதிகள்” என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்.) ஓவனுடைய முன்னோர்கள் பிரிட்டனின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஓவனின் தந்தை அவருடைய குடும்பத்தின் பதினைந்து பிள்ளைகளில் இளையவராக இருந்தார். ஓவனின் தாயின் குடும்பக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பிள்ளைப் பருவத்தில் ஆரம்பப்படிப்பை வீட்டில் இருந்தே பெற்றுக்கொண்ட ஓவன் பின்பு எட்வர்ட் சில்வஸ்டர் (Edward Sylvester) என்பவரிடம் ஆக்ஸ்போர்டில் ஒரு சிறப்பு வாய்ந்த தனியார் கல்லூரியில் கல்வி பெறும்படி அனுப்பிவைக்கப்பட்டார்.

ஓவன் சிறுவயதிலேயே கல்வியில் மிகவும் திறமை வாய்ந்தவராக இருந்து தன்னுடைய ஆசிரியர் அதற்கு மேல் கற்றுக்கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் பதினைந்தோ அல்லது பதினேழோ வயதுள்ளவர்களே அனுமதி பெறும் பல்கலைக்கழகத்துக்கு தன்னுடைய பன்னிரெண்டாம் வயதில் சேர்ந்தார். சேர்ந்த நாளில் இருந்தே மிகவும் ஊக்கமாகவும் கடுமையாகவும் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். வெகுவிரைவிலேயே நான்கு மணிநேரம் மட்டுமே உறங்குவதற்கு தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டார் ஓவன். இந்தப் பழக்கம் சில வருடங்களுக்கு அவருடைய வாழ்வில் தொடர்ந்தது. அதுமட்டுமல்லாமல் படிக்கும் நேரத்தைத் தவிர்ந்த நேரங்களில் இளைப்பாறுவதற்காக சில விளையாட்டுகளையும், உடற்பயிற்சி முறைகளையும் தனக்கு வசதியாக ஏற்படுத்திக் கொண்டார். இசை கற்றுக்கொள்வதிலும் ஓவன் ஈடுபட்டிருந்தார்.

இங்கே ஓவனுடைய வாழ்க்கையில் இருந்து இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலில், இளம் வயதில் தான் இழந்த சரீர நலனைப் பெற்றுக்கொள்வதற்கு தன்னுடைய கல்வி அனைத்தையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக ஓவன் பிற்காலத்தில் கூறியிருந்தார். தான் இந்த விஷயத்தில் தவறிழைத்திருந்ததை ஓவனே உணர்ந்து ஒத்துக் கொண்டிருந்தார். இரண்டாவதாக, பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் மனிதர்களுக்கு முன்பும், சபையிலும் உயர் பதவிகளை அடையும் உலக ஆசை மட்டுமே ஓவனிடத்தில் இருந்தது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய இறுதிக் காலங்களிலேயே ஓவன் முதன் முறையாக கர்த்தரைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். இக்காலத்தில் அவருடைய இருதயத்தில் கர்த்தர் எத்தகைய சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கிரியை செய்ய ஆரம்பித்தார் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியவில்லை. வீட்டில் அவர் பெற்றுக்கொண்டிருந்த ஆரம்பக் கல்வி இதற்கு துணைபோயிருந்திருக்குமா? பக்திமான்களாக இருந்த அவருடைய ஆக்ஸ்போர்ட் ஆசிரியர்களும், விரிவுரையாளர்களும் இதற்குக் காரணமாக இருந்திருப்பார்களா? படித்துக்கொண்டிருந்த காலங்களில் அவர் கற்றுக்கொண்ட சத்தியங்களைப் பரிசுத்த ஆவியானவர் அவருடைய இருதயத்தில் பதிய வைத்து வல்லமையாகக் கிரியை செய்திருப்பாரா? அக்காலத்தில் சபை வாழ்க்கையும், மதவாழ்க்கையும் பொது மக்கள் மத்தியில் முக்கிய இடம் பெற்றிருந்தது. மத, சபை சம்பந்தமான விவாதங்களும், தர்க்கங்களும் அவரைக் கர்த்தரைப் பற்றி சிந்திக்க வைத்திருக்குமா? இல்லாவிட்டால் சமகாலத்து கிறிஸ்தவ ஜாம்பவான்கள் அவரைக் கிறிஸ்துவிடம் அறிமுகப்படுத்தி வைத்திருப்பார்களா?

நாமிருக்கும் இடத்தில் இருந்து கர்த்தர் எந்த வகையில் ஓவனின் இருதயத்தில் செயல்பட்டிருந்திருப்பார் என்பதை நாம் விளக்குவது கஷ்டம். ஆனால், 1637ம் ஆண்டில் வில்லியம் லோட் (William Laud) ஆக்ஸ்போர்டில் தலைவராக இருந்தபோது ஓவன் ஏற்கனவே கிறிஸ்தவ நம்பிக்கைகளையும், வாழ்க்கை விதிகளையும் தனக்குள் வளர்த்துக் கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த லோட் ரோமன் கத்தோலிக்க மத வழக்கங்களை அங்கே அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அவற்றைப் பின்பற்ற மறுப்பவர்களைப் பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்கப் போவதாக பயமுறுத்திக் கொண்டிருந்தார். 1632ல் ஓவன் கலைப் பட்டதாரியாகவும் (Bachelor of Arts) 1635ல் முதுகலைப் பட்டதாரியாகவும் (Master of Arts) அங்கீகரிக்கப்பட்டார். அதே வருடம் அவர் அடுத்த ஏழு வருடங்களுக்கான Bachelor of Divinity பட்டப்படிப்பை ஆரம்பித்தார். ஏற்கனவே அவர் உதவிக்காரராக (Deacon) நியமிக்கப்பட்டிருந்தார். இருந்தபோதும், பல்கலைக்கழகத் தலைவரின் கட்டளைகளை மனச்சாட்சியோடு ஏற்றுக்கொள்ள முடியாததால் தன்னுடைய இருபத்தோராவது வயதில் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகினார்.

ஆரம்ப வயதில் வீட்டில் கற்றுக்கொண்ட வாழ்க்கை விதிகளின்படி நடந்து ஓவன் உலக ஆசைகளுக்கு தன் வாழ்க்கையில் இடமில்லை என்பதை இச்செய்கை மூலம் நிரூபித்தார். அதுவரை அவருடைய பல்கலைக்கழகப் படிப்புக்கு உதவி வந்த அவருடைய செல்வந்தரான வேல்ஸில் இருந்த உறவினருக்கு ஓவனின் செய்கை ஆத்திரத்தை எழுப்பியது. இந்நடவடிக்கை மூலம் சுவிசேஷத்தின் எதிரிகளுக்குத் தன்னை யார் என்பதையும் ஓவன் இணங்காட்டிக் கொண்டார். இதன் மூலம் ஓவன் அதிக இழப்பை விருப்பத்தோடு இருகரம் நீட்டி ஏற்றுக்கொண்டார்.

ஆக்ஸ்போர்ட்ஷயரின் எஸ்கொட் (Ascot) என்ற பகுதியில் வாழ்ந்த சர் ரொபட் டோர்மர் (Sir Robert Dormer) என்பவரின் குடும்ப ஆசிரியராகவும், சாப்ளினாகவும் ஓவன் நியமனமானார். அதன் பிறகு அவர் பேர்க்ஷயர் (Berkshire) கவுன்டியில் வாழ்ந்த ஹர்லியைச் சேர்ந்த லோர்ட் லவ்லேஸ் (Lord Lovelace) என்பவருக்கு சாப்ளினாக சேர்ந்தார். 1642ம் ஆண்டு உள் நாட்டு யுத்தம் ஆரம்பமாகும்வரை இந்த நியமனங்கள் ஓவனுக்கு வாழ்வூதியமளித்தன. அரச குடும்ப ஆதரவாளராக இருந்த லவ்லேஸின் குடும்பத்தை விட்டு விலகி இலண்டனுக்கு பயணமானார் ஓவன். இக்காலத்தில் அரசாதரவாளரும், செல்வந்தராகவும் இருந்ததோடு ஆக்ஸ்போர்டில் படித்தபோது ஓவனுக்கு பணஉதவி செய்துவந்த உறவினர் ஓவனோடிருந்த தொடர்புகளை அடியோடு துண்டித்துக்கொண்டார்.

ஆக்ஸ்போர்டில் இருந்த இறுதிக் காலங்களில் ஓவனை ஆத்மீகம் தொடர்பான ஒருவித மனச்சோர்வு பாதித்திருந்தது. அது இறுதிவரை அவரைவிட்டு முற்றாக விலகவில்லை. இதற்கு நோயும், வேலைப்பளுவும் கூட காரணங்களாக இருந்தபோதும் அவருடைய ஆத்துமாவின் நிலையைப் பற்றி அவருக்கு இருந்த ஆதங்கமே இதற்கு முக்கிய காரணம்.

இக்காலத்தில் தன் வாழ்க்கையில் ஓவனுக்கு பூரண சமாதானம் இருக்கவில்லை. அது ஏன் என்பதை நிர்ணயிப்பதும் கடினம். அவருடைய உள்ளத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த போராட்டங்களை அவரெழுதிய The Forgiveness of Sin, An Exposition of the 130th Psalm ஆகிய நூல்கள் விளக்குவதாக சிலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இதையும்விட மேலாக கர்த்தர் ஒரு மனிதனுக்கு விதித்திருக்கும், அவன் இலக்காகக் கொண்டிருக்கும் பணியில் அவன் பயன்படும்படியாக இத்தகைய உளப் போராட்டங்கள் அம்மனிதனின் குணாதிசயங்களை வரைமுறைப்படுத்தி அமைக்கின்றன என்று சொல்லலாம். இதை மார்டின் லூதர், ஸ்பர்ஜன் ஆகியோரிலும் நாம் காணலாம். ஏன், அப்போஸ்தலன் பவுலின் வாழ்க்கையிலும் காணலாம்.

ஒருநாள் அல்டர்மன்பரியில் (Aldermanbury) செயின்ட் மேரி திருச்சபையில் அன்றைய பிரசங்கிகளில் பிரபல்யமானவராக இருந்த டாக்டர் எட்மன்ட் கெலமியின் (Dr. Edmund Calamy) பிரசங்கத்தைக் கேட்பதற்காக ஓவன் சென்றார். டாக்டர் கெலமிக்குப் பதில் முன்பின் தெரியாத ஒரு நபர் பிரசங்க மேடைக்கு பேசுவதற்கு வந்தபோது ஓவனுக்கு சலிப்புத் தட்டியது. தன்னோடு வந்திருந்த நண்பன் இன்னொரு சபைக்கு பிரசங்கம் கேட்கப் போவோம் என்று சொன்னபோது சரீர அசதியின் காரணமாக அதன்படி நடக்க ஓவனுக்கு மனதிருக்கவில்லை. பிரசங்க மேடைக்கு வந்த புதிய பிரசங்கி ஜெபம் செய்த பிறகு தான் பிரசங்கிக்கப் போகும் வசனமாக மத்தேயு 8:26ஐ அறிவித்தார். “அற்ப விசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள்” என்பதே அந்த வசனம். அதைக் கேட்டவுடன் ஓவன் அந்த வசனத்தின் மூலம் தன்னோடு பேசும்படிக் கர்த்தரிடம் உடனேயே ஜெபித்துக் கேட்க ஆரம்பித்தார். பிரசங்கி பிரசங்கத்தில் ஓவனின் சந்தேகங்கள், பயங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தொட்டு அலச ஆரம்பித்தார். பிரசங்கம் முடிவுற்றபோது ஓவனுக்கு கிறிஸ்துவில் கர்த்தரின் அன்பு பற்றிய புதிய நம்பிக்கையும், கர்த்தரின் நிலைத்திருக்கும் சமாதானமும் கிட்டியது. பின்னால் எத்தனையோ முயற்சிகள் செய்தும் அன்று பிரசங்கித்த அந்தப் பிரசங்கி பற்றிய விபரங்களை ஒருபோதும் ஓவனால் பெற்றுக்கொள்ள முடியாமல் போயிற்று. இந்த முறையில் அறிமுகமற்றவர்களைப் பயன்படுத்தி பரலோக ஜீவியத்துக்கு ஆத்துமாக்களை அழைத்துக் கொள்ளும் பணியைக் கர்த்தர் அன்று முதல் தடவையாக செய்யவில்லை. இதே முறையிலேயே பெரல், ஜோன் கல்வின், ஸ்பர்ஜன் போன்றோரையும் கர்த்தர் மனந்திரும்புதலை அடையும்படிச் செய்தார்.

சரீரத்திலும், மனதிலும், உணர்விலும், ஆத்மாவிலும் அதுவரை அனுபவித்த போராட்டங்களில் இருந்து விடுபட்டு 1642ம் ஆண்டு ஆரம்பத்தில் எழுத்துலகில் பாதம் பதித்து நடக்க ஆரம்பித்தார் ஓவன். அவ்வருடமே The Display of Arminianism என்ற அவருடைய நூல் வெளியானது. அதில் தான் கல்வி பயின்றபோது ஆக்ஸ்போர்டில் தலைவராக இருந்த ஆர்ச்பிஷப் லோடின் ரோமன் கத்தோலிக்க, ஆர்மீனிய, பெலேஜியனிசப் போதனைகளைத் தோலுரித்துக் காட்டியிருந்தார் ஓவன். ஓவனின் முதல் நூலில் குறைகளில்லாமல் இருக்கவில்லை. அது வாசிப்பதற்கு இலகுவானதாக இல்லாமலிருந்தாலும் முற்றும் வேதபோதனைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது.

அதன்பிறகு ஓவன் எஸ்செக்ஸில் (Essex) இருந்த போர்ட்ஹாம் (Fordham) என்ற இடத்தில் சிறிய சபைக்கு போதகராக நியமிக்கப்பட்டதற்கு இந்த நூலும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதே வருடம் ஓவன் மேரி ரூக் (Mary Rooke) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தின் மூலம் அவர்களுக்கு அமைதியான தாம்பத்திய வாழ்க்கை அமைந்ததோடு, பதினொரு குழந்தைகளும் பிறந்திருந்தன என்பதைத் தவிர வேறு விபரங்களை அறிய முடியவில்லை. அந்தக் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை மட்டுமே வாலிப வயதை அடைந்தது. அந்தப் பெண்ணும் திருமணத்திற்குப் பிறகு தாம்பத்திய வாழ்க்கையில் அமைதியின்றி வாலிப வயதிலேயே மரிக்க நேர்ந்தது.

ஓவனின் போதக ஊழிய முறை பியூரிட்டன்களுக்கே உரித்தான போதனை முறையை ஒத்து அமைந்திருந்தது: வீடு வீடாகப் போய் வினா விடைப் போதனையளிப்பதும், சத்துள்ள பிரசங்கங்களை அளிப்பதையுமே ஓவன் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

1643ல் ஓவன் The Duties of Pastor and People Distinguished என்ற நூலையும் இரண்டு சிறு வினாவிடைப் போதனை நூல்களையும் வெளியிட்டார். இவற்றின் மூலம் சமூகத்தின் சகல பகுதியினரோடும் அறிவுபூர்வமாக தொடர்புகொள்ளும் ஓவனின் திறமை வெளிப்பட்டது. நல்ல படிப்பாளியான ஒருவரால் இலகுவாக மக்களைக் குழப்பிவிட முடியும். அதைவிட கடுமையானது தன்னுடைய பேச்சைக் கேட்கும் சமூகத்தின் சகல பகுதியினரும் அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளச் செய்வது. தான் எழுதியவற்றை வாசிக்கும் மக்களை அடைய ஓவன் தனக்கேயுரிய சிறப்பான எழுத்து நடையைக் கையாண்டார்.

ஓவனின் மதிப்பு சிறிது சிறிதாக வளர ஆரம்பித்து அவருக்கு முப்பத்தி இரண்டு வயதாயிருக்கும்போது 1646ம் ஆண்டு 29ம் நாள், மாத உபவாசத்தின்போது அவருக்கு பாராளுமன்றத்தில் பிரசங்கமளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று அப்போஸ். 16:9ம் வசனத்தில் இருந்து அவர் பிரசங்கமளித்தார். அன்று அவரளித்த பிரசங்கம் அவருக்கிருந்த பிரசங்கத் திறமையை வெளிப்படுத்தியது. கிறிஸ்தவ போதனைகளைப் பெற்றுக் கொண்டிராத நாட்டின் பகுதிகளுக்குச் சென்று அத்தகைய போதனைகளை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியபோது அவருடைய பேச்சில் சுவிசேஷ வைராக்கியம் வெளிப்பட்டது.

இதற்குப்பிறகு போர்ட்ஹாமில் (Fordham) அவருடைய பணி ஒரு முடிவுக்கு வந்தது. ஆங்கிலிக்கன் திருச்சபை பின்பற்றி வந்த போதக நியமிப்பு வழிமுறைக்கு அவர் பலியானார். உடனடியாகவே அவருக்கு கொக்கஸ்ஹோல் என்ற இடத்திலிருந்து அழைப்பு வந்தது. அங்கிருந்த சபையை அதுவரை விசுவாசமிக்க ஊழியர்கள் கவனித்து வந்திருந்தனர். அங்கே ஓவன் நல்ல அத்திவாரத்தோடு தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தார். சபை 2000 பேருடைய விசுவாசமுள்ளவர்களைக் கொண்டு வளர்ந்தது.

(இனியும் வரும்)

நம்மினத்திற்கு இன்று தேவை நல்ல தலைவர்கள்
ஆவிக்குரிய நல்ல தலைவர்களை திருச்சபைகளில் எப்படி உருவாக்குவது என்பதை ஆராயுமுன்பு தமிழினத்து கிறிஸ்தவ உலகில் காணப்படும் நல்ல சபைத் தலைமைத்துவப் பஞ்சத்திற்கான காரணங்களை எண்ணிப் பார்ப்பது இந்தப் பஞ்சத்தை நீக்க நாமிருக்கும் திருச்சபைகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு துணையாக இருக்கும். எந்தவொரு டாக்டரும் நோயாளிக்குரிய வியாதியை முறையாக அறிந்து கொள்ளாமல் மருந்து கொடுக்க மாட்டார். அதேபோல் எல்லாவித ஆத்மீகக் குறைபாடுகளுக்கும் உரிய காரணங்களை சரிவர அறிந்துகொள்ளாமல் அவற்றின் நிவர்த்திக்கான வழிகளை அறிந்துகொள்ள முடியாது. எனவே, நல்ல சபைத் தலைவர்கள் உருவாகத் தடையாக நம்மத்தியில் இருந்துவரும் மூன்று காரணிகளைப் பற்றி சிந்திப்பது நல்லது.

1. நல்ல கிறிஸ்தவ தலைவர்கள் தோன்ற முடியாமல் இருப்பதற்கு நம்மினத்தில் காணப்படும் ‘கிறிஸ்தவம்’ ஒரு முக்கிய காரணம்.

கடந்த இருபது ஆண்டுகளாக தமிழினத்துக் கிறிஸ்தவத்தைப் பற்றி நான் பேசுகிற இடங்களிலும், என்னுடைய எழுத்துக்களிலும் அதிகமாகவே சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறேன். இதை ஏதோ குறை கூறுவதை மட்டும் தொழிலாகக் கொண்டு நான் செய்து வருகின்ற ஒரு காரியமாக சிலர் எண்ணிவிடலாம். அதுவல்ல உண்மை. தமிழினத்தில் பிறந்து வளர்ந்து கிறிஸ்துவை ஆண்டவராக விசுவாசித்து திருச்சபையில் வாழ்ந்து வளர்ந்து ஊழியத்தில் இருபத்தியேழு வருடங்கள் இருந்து வருகின்ற அனுபவத்தில் பார்த்தது, படித்தது அத்தனையினதும் பலனாகவே என்னுடைய கருத்துக்கள் இருக்கின்றன. இவற்றை உதறிவிட்டு நல்ல திருச்சபை தலைமைத்துவத்தை வளர்ப்பது என்பது என்னைப் பொறுத்தவரையில் நிச்சயம் வெற்றிதரப் போகிற முயற்சியாக இருக்கப் போவதில்லை. குறைகூற வேண்டுமென்பதற்காக சொல்லப்படுகின்ற குறைகளாக நான் விளக்கப் போகின்றவைகளைப் பார்க்காமல் இந்தக் குறைகளைப் போக்கிக் கொள்ளுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் ஏன் சிந்திக்கக் கூடாது? “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற நல் மொழியை நாம் கேட்டதில்லையா? உண்மையிலேயே நம்மினத்துக் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியில் நமக்கு வைராக்கியம் இருக்குமானால் குறைகளை எவர் சுட்டிக்காட்டினாலும், அவை எங்கிருந்து வந்தாலும், ஆத்தும விருத்தியைக் காரணமாகக் கொண்டு சொல்லப்படும் குறைகளாக அவை இருக்குமானால் அவற்றின் நிவர்த்திக்காக முயற்சி எடுக்கிறவன்தான் உண்மையான கிறிஸ்தவன்.

தமிழினத்தில் கிறிஸ்தவம் எப்போதோ அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட போதிலும் இன்றும் அது பெருமளவுக்கு சுவிசேஷ வல்லமையற்றதாக, இறையியல் போதனைகளற்றதாக, ஆத்மீக ஜீவனற்றதாகவே இருந்து வருகின்றது என்பது நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்ற குறைபாடு. பெருமளவுக்கு தொடர்ந்தும் இன்று சுவிசேஷப் பணிகள் எப்படியாவது ஆத்துமாக்களைக் கிறிஸ்துவை நம்ப வைத்து ஞானஸ்நானம் எடுக்க வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனவே தவிர மெய்யான மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் சுவிசேஷப் பணி மூலம் அடைகின்றவர்களை அடையாளம் காண்பதில் அக்கறை காட்டுவதில்லை. இதனால் ஞானஸ்நானம் எடுத்திருக்கும் அநேகர் ஆத்மீக ஜீவனில்லாமல், பெயரளவில் ‘கிறிஸ்தவர்களாக’ பல்லாயிரக்கணக்கில் தமிழினத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும், கடற்கரைகளிலும், முகாம்களிலும் தொகையானவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதாக வருகின்ற செய்திகளை நாம் வாசிக்கின்றோமே தவிர அவர்கள் எப்படி, எந்தத் திருச்சபைகளில் இணைக்கப்பட்டு, போதகக் கண்காணிப்பையும் (Pastoral oversight), ஒழுங்குக் கட்டுப்பாட்டையும் (Biblical discipline) தொடர்ச்சியாகப் பெற்றுவருகிறார்கள் என்பதையும், ஆத்தும விருத்தியிலும், பரிசுத்தத்திலும் எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் ஒருபோதும் வாசிக்க முடிவதில்லை. சுவிசேஷம் சொல்லுவதையும், ஞானஸ்நானம் கொடுப்பதையும் மட்டுமே கிறிஸ்தவ ஊழியமாகக் கொண்டு வேதம் போதிக்கும் முறையான திருச்சபை வாழ்க்கையை நிராகரிக்கின்ற, வேதத்தில் காணப்படாத ஒரு நவீன ‘கிறிஸ்தவம்’ நம்மினத்தில் ஆல்போல் வளர்ந்திருக்கிறது.

வேதத்தில் காணமுடியாத இந்தக் கிறிஸ்தவம் வேதம் போதிக்கும் பத்துக் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்ட பரிசுத்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வேதத்தில் நாம் வாசிக்கின்ற, ஒருவருக்கொருவர் கணக்குக் கொடுத்தும், போதகர்களுக்குக் கணக்குக் கொடுத்தும் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ வேண்டிய திருச்சபை வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வேதம் விளக்குகின்ற தெளிவான திருச்சபை அமைப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சக கிறிஸ்தவர்களுக்கு கணக்குக் கொடுத்து வாழும் வழக்கத்தைக் கொண்டிராதவர்கள் அந்த வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்ற ஆண்டவருக்குக் கணக்குக் கொடுத்து வாழ்வதை வழக்கமாகக் கொண்டிருக்க மாட்டார்கள். இத்தகைய வேத ஒழுங்கற்று, வேதப் பரிசுத்தத்தை நாடாது, வேத அதிகாரத்துக்கு உட்படாது கிறிஸ்தவம் என்ற பெயரில் இருந்து வரும் போலி ஆத்மீக அமைப்பில் மெய்யான வேதபூர்வமான தலைமைத்துவம் உருவாவதற்கோ அதன் வளர்ச்சிக்கோ இடமிருக்காது. இதன் காரணமாகவே இன்றைக்கு தமிழினத்து கிறிஸ்தவத்தில் எந்த சபையிலும், எந்த அமைப்பிலும் தலைமை வகிப்பவர்களைக் குறித்த சந்தேகம் ஆத்துமாக்களுக்கு இருப்பதோடு, தலைமைத்துவம் ஜீவனற்றதாகவும், ஆத்தும வலிமையற்றதாகவும் இருந்து வருகிறது. சமீபத்தில் “இந்தியன் எக்ஸ்பிரெஸ்” (Indian Express) செய்திப் பத்திரிகையில் பதினெட்டு வருடங்களில் 1040 கோடிப் பணத்தை சேகரித்துள்ள ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தைப் பற்றிய செய்தி விபரமாகத் தரப்பட்டிருந்தது. கிறிஸ்தவப் பணிகளுக்கு பணம் அவசியமான போதிலும் இந்தளவுக்கு கிறிஸ்துவை அறியாத நாட்டு மக்களும் கேள்வி எழுப்பும் அளவுக்கு கிறிஸ்தவ நிறுவனங்கள் பணத்தைச் சேகரிக்கத்தான் வேண்டுமா? பணத்தைக் கிறிஸ்தவத்தோடு நேரடித் தொடர்பில்லாத விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டுமா? என்ற கேள்விகளை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. கிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்தபோது நமக்கு இலக்கணம் வகுத்துக் காட்டித் தந்த தாழ்மையையும், எளிமையான வாழ்க்கை முறையையும், அப்போஸ்தலர்கள் தங்கள் வாழ்க்கை மூலம் நமக்கு காட்டித் தரும் எளிமையையும் இன்று கிறிஸ்தவ அமைப்புக்களில் தலைமை வகிப்பவர்களிடம் காணமுடியவில்லை.

இதற்காக கிறிஸ்தவ தலைவர்களெல்லோரும் தங்களுடைய தாழ்மையை வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காக குடிசைகளில் வாழும்படி நான் எதிர்பார்க்கவில்லை; மலைவாசிகளைப் போல கோவனத்தை மட்டும் அணிந்து வெறும் உடம்போடு திரியும்படி சொல்ல வரவில்லை. ஆடம்பரமும், சொகுசு வாழ்க்கையும் அவர்களுக்கு நிச்சயம் தேவையற்றது; அநாவசியமானது. அதற்காக அவர்கள் அழைக்கப்படவில்லை. இந்த வகையிலான தலைமைக்கும், வாழ்க்கைக்கும் காரணம் அவர்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்தில் காணப்படும் குறைபாடுதான். வேத அடிப்படையில் மெய்யான மனந்திரும்புதலோடும், விசுவாசத்தோடும் கிறிஸ்தவம் அமைந்திருந்தால் மட்டுமே அதில் ஜீவனையும், ஆத்மீக வல்லமையையும், ஆடம்பரமற்ற தாழ்மையையும், நம்பகத் தன்மையையும் பார்க்க முடியும். இன்று நம்மினத்தில் பரவலாகக் காணப்படும் கிறிஸ்தவம் சந்தேகத்தை எழுப்புகின்ற ‘கிறிஸ்தவமாக’, ஆயிரம் கேள்விகளைக் கிறிஸ்தவர்கள் கேட்கும்படிச் செய்கின்ற ‘கிறிஸ்தவமாக’, வேற்று மதத்தினரும் முகத்தைச் சுளிக்கின்ற ‘கிறிஸ்தவமாக’ இருந்து வருகின்றது. இயேசு காட்டித் தந்த வாழ்க்கையைக் கொண்ட தலைமையை இதில் எப்படிப் பார்க்க முடியும்? வளர்க்க முடியும்?

2. நல்ல கிறிஸ்தவ தலைவர்கள் தோன்ற முடியாமல் இருப்பதற்கு நம் சமுதாயத்தின் கலாச்சாரமும், வளர்ப்பு முறையும் ஒரு காரணம்.

இதுவரை நம்மினத்தில் பரவலாகக் காணப்படும் கிறிஸ்தவத்தைப் பற்றியும், அதன் பாதிப்பால் ஏற்பட்டிருக்கின்ற தலைமைத்துவப் பிரச்சனைகளையும் பார்த்தோம். அதைத் தவிர நம்மினத்து கலாச்சாரப் பாதிப்புகளையும், நாம் வளர்க்கப்படுகின்ற, வளர்ந்து வருகின்ற முறைகளையும் சிறிது ஆராய வேண்டியது அவசியம். ஏனெனில், இவையெல்லாம் நம் விசுவாசத்தையும், விசுவாச வாழ்க்கையையும் நிச்சயம் பாதிக்கின்ற அம்சங்கள். கிறிஸ்தவ வாழ்க்கையை நாம் மனிதர்களேயில்லாத காட்டில் தனிமையில் வாழ்வதில்லை. சமுதாயத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். சமுதாயத்தின் எண்ணப்பாடுகளும், பழக்க வழக்கங்களும், பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வாழ்க்கை முறைகளும், கலாச்சாரமும் நம்முடைய விசுவாசத்திலும், வாழ்க்கை முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அதைத் தவிர்க்க முடியாது.

தமிழினத்தில் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய ஓர் உண்மை இருக்கிறது. நம்மினத்துப் பண்பாடு இந்து மதத்தினால் அதிக தாக்கத்தை அடைந்திருக்கிறது. இன்னொருவிதத்தில் கூறப்போனால் இந்து மதத்தையும், நம்மினத்துப் பண்பாட்டையும் பிரித்துப் பார்ப்பது சுலபமல்ல. அந்தளவுக்கு இந்து மதமும், நமது பண்பாடும் ஒன்றரக் கலந்து காணப்படுகின்றன. நம்மினத்துப் பண்பாட்டில் இந்து மதத்தின் நேரடிப்பாதிப்பில்லாத பழக்க வழக்கங்கள் நிச்சயம் இருக்கின்றன. கிறிஸ்தவ விசுவாசிகள் அவற்றை எந்தவித மனக்குழப்பமும், சந்தேகமும் இல்லாமல் பின்பற்றலாம். ஆனால், நாம் பின்பற்றக் கூடிய, கிறிஸ்தவ வாழ்க்கைக்கு முரண்படாத நம்மினத்துப் பண்பாடுகள் யாவை என்பதை அத்தனை சுலபமாகத் தீர்மானித்துவிட முடியாது. ஒவ்வொன்றையும் நாம் வேத அடிப்படையில் சிந்தித்து ஆராய்ந்து பார்த்துப் பின்பற்றவோ அல்லது தள்ளி வைக்கவோ வேண்டும். ஆரம்பத்தில் நம்மினத்தில் பணியாற்றிய மிஷனரிகள் நமது பண்பாட்டைப் பற்றிய ஞானமில்லாததால் பல விஷயங்களைக் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பின்பற்றும்படி விட்டுவிட்டார்கள். அவர்களைக் குறை சொல்லுவதற்காக இதை நான் சொல்லவில்லை. வேற்று நாட்டவர்கள் இலகுவாக புரிந்துகொள்ளும்படியான பண்பாடல்ல நம்மினத்துப் பண்பாடு. வேற்று நாட்டு மிஷனரிகளுக்கு நமது பண்பாடு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். அதில் எதைத் தொடலாம், தொடக்கூடாது என்று அவர்கள் நிச்சயம் குழம்பிப் போயிருப்பார்கள். அதனால், அதில் அவர்கள் கைவைக்க விரும்பவில்லை. இதன் காரணமாக அநேக கிறிஸ்தவர்கள் நமது பண்பாட்டில் இரண்டறக் கலந்திருக்கும் இந்துப் பண்பாட்டை இன்றும் விடாமல், அறியாமையினால் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். சாதி, குலம் என்பதொல்லாம் இந்து மதத்தில் இருக்கும் வழக்கம். சாதியில்லாமல் இந்து மதமில்லை; இந்து மதமில்லாமல் சாதி உயிர் வாழ முடியாது. ஆனால், இன்றைக்கும் கிறிஸ்தவ சமுதாயத்தில் சாதி, குலம், தராதரம் பார்க்கும் வழக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. சாதி, குலம், தராதரம் பார்ப்பது தவறு என்று தட்டிக் கேட்பவர்களை மேலை நாட்டுக் கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிற சாதிப்பித்துப் பிடித்த போதகர்கள் நம்மத்தியில் இருக்கிறார்கள். பண்பாட்டின் பெயரில் சாதி அடிப்படையில் அமைக்கப்பட்ட சபைகளும் கூட நம் சமுதாயத்தில் இருக்கின்றன.

திருச்சபைகளில் எதிர்காலத்துக்கான நல்ல தலைவர்களை வளர்ப்பதற்கு பண்பாடு மட்டும் குறுக்கீடாக இருக்கவில்லை; நம்மினத்துக் குடும்ப வாழ்க்கையும், வளர்ப்பு முறையும்கூடத் தடையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் நல்லது இருந்தாலும் பாதகமானதும் கலந்து காணப்படுகின்றது. கிறிஸ்தவரான மகனுக்கும் அல்லது மகளுக்கும் கிறிஸ்தவர்களல்லாத பெற்றோர்கள் மணமுடித்து வைக்கும்போது கிறிஸ்தவ வழிமுறைகளைப் பின்பற்றி கிறிஸ்தவ மாப்பிள்ளையையோ, மணப்பெண்ணையோ தேடப் போவதில்லை. மகன் மெய்க் கிறிஸ்தவனாக இருந்து அவனுக்கு பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருக்கும் பெற்றோர்கள் இருந்தால் மகனுக்கு அவனுக்குத் தகுந்த ஆத்மீக வாழ்வில் சிறப்புடன் இருக்கும் மணப்பெண்ணை அந்தப் பெற்றோர்கள் தேடப்போவதில்லை. மெய்க்கிறிஸ்தவர்களாக இருக்கும் மகனோ, மகளோ மெய்க்கிறிஸ்தவர்களாக இருக்கும், தங்களுடைய வாழ்க்கைக்குத் துணையானவர்கள் என்று கருதுகின்ற துணைகளை சபையிலோ சபைக்கு வெளியிலோ தேடிக்கொண்டால் அதற்குப் பெற்றோர்களும், போதகர்களுமே தடையாக இருந்து விடுவார்கள். ஆகவே, திருமணமாகாத மெய்க் கிறிஸ்தவர்கள் வேத இலக்கணங்களைக் கொண்ட, தகுந்த வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள முடியாமல், பெற்றோர்களின் வற்புறுத்தலாலும், சபை சரியான வழியில் வழிநடத்தாததாலும், தகுதியற்ற, ஆத்மீக ஜீவனற்ற துணைகளைத் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்க நேரிடுகிறது. கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கையின் ஆரம்பத்திற்கே இது பேராபத்தானது என்ற உணர்வே தமிழினத்தில் இன்று அநேகருக்கு இல்லை. வயதுக்கு வந்துவிட்டால் எப்படியாவது, எதைச் செய்தாவது திருமணம் செய்துவிட வேண்டும் என்ற உலகப் பிரகாரமான எண்ணம் மட்டுமே எல்லோரிலும் ஆட்சி செய்கிறது.

ஆத்மீகத்தில் ஒருவன் சிறந்திருந்தாலும், அவன் பெற்றோரின் கட்டுப்பாட்டினால் தகுதியற்ற, ஆத்மீக ஜீவனில்லாத ஒருத்தியைத் திருமணம் செய்திருந்தால் அவனுக்கு எத்தனை ஆவிக்குரிய தகுதிகள் இருந்தாலும் சபைத் தலைவனாக வளர்வதற்கு வாய்ப்பில்லை. சபைத் தலைவர்களுக்குரிய இலக்கணங்களை விபரிக்கும் 1 தீமோத்தேயு 3, தீத்து வேதப் பகுதிகள் விசுவாசத்தில் சிறந்த மனைவியைக் கொண்டிருப்பவனாகவும், குடும்பத்தை நன்றாக நடத்துபவனாகவும் சபைத் தலைவன் (போதகர்கள், உதவிக்காரர்கள்) இருக்க வேண்டும் என்று போதிக்கின்றன. விசுவாசத்தில் சிறந்த மனைவிகளைக் கொண்டிராதவர்களும், குடும்பத்தை சிறப்பாக நடத்தாதவர்களும் சபைத் தலைமைக்கு அருகதையற்றவர்கள் என்பதை வேதம் வெளிப்படையாகப் போதிக்கின்றது. இந்த விஷயங்களில் சபை மக்களுக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டாதவர்கள் சபைத் தலைமைக்கு பொறுத்தமானவர்களல்ல. ஆகவே, நம்மினத்தில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் குடும்ப வாழ்க்கை முறையும், திருமணம் முடிக்கும் வழக்கங்களும் திருச்சபைக்குத் தேவையான தலைவர்களை உருவாக்கப் பெருந்தடையாகத் தொடர்ந்திருந்து வருகின்றன.

நம்மினத்தில் குடும்பம் நடத்துவதில் காணப்படும் இன்னொரு தவறான வழக்கத்தையும் கவனிக்க வேண்டும். பிள்ளைகளின் திருமண விஷயத்தில் பெற்றோர்கள் தீர்மானங்களை எடுப்பது மட்டுமல்லாமல் பிள்ளைகள் தலைக்கு மேல் வளர்ந்த பின்னும் அவர்களுடைய வாழ்க்கையில் தீர்மானங்களை எடுக்கும் வழக்கத்தையும் பெற்றோர்களே கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு சில கிறிஸ்தவ குடும்பங்கள் விதிவிலக்காக இருக்கலாம். பெரு நகரங்களில் வாழ்கின்ற கிறிஸ்தவ குடும்பங்களும் விதிவிலக்காக இருக்கலாம். நான் பரவலாக எங்கும் நடந்துவரும் வழக்கத்தையே விளக்குகிறேன். வளர்ந்து பெரியவனாகி 26-28 வயதில் வேலையில் இருக்கும் மகன்கூட சம்பளத்தைப் பெற்றோர்களிடம் அப்படியே கொடுத்துவிடுவதில் இருந்து வாழ்க்கையில் சகல தீர்மானங்களையும் பெற்றோர்களே எடுக்கும்படி விட்டுவிடுகிறான். இது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், வேதம் போதிக்கும் பிள்ளை வளர்ப்பின்படி இதைவிடவும் மோசமானதொன்றுமில்லை. உண்மையில் வளர்ந்து வேலையில் இருக்கும் ஒரு நல்ல கிறிஸ்தவ வாலிபன் இப்படி வாழ்க்கையில் சகல விஷயங்களையும் பெற்றோர்கள் கையில் விட்டுவிட்டால் அவன் வீட்டுப்பிள்ளையாய், தவறாக வளர்ந்தவனாக, வாழ்க்கையில் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கத் தெரியாதவனாக, தீர்மானங்களை எடுக்கப் பயந்தவனாக, துணிவில்லாதவனாக தனியாகக் குடும்பம் நடத்தி மனைவி பிள்ளைகளை, எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுத்து வளர்க்கத் தெரியாதவனாகவே வளர்ந்திருப்பான். அவன் ஆவிக்குரியவனாக இருந்து வேறு தகுதிகளைக் கொண்டிருந்தபோதும் திருச்சபையில் தலைவனாக இருக்கத் தகுதியில்லாதவனாக இருப்பான். அவனுக்கு சுயமாக வேதம் போதிக்கும் தீர்மானங்களை மட்டும் எடுத்து ஆத்துமாக்களை ஆண்டவரின் வழியில் வழிநடத்தக் கூடிய தைரியம் இருக்காது. சுயமாக சிந்திக்கத் தெரியாதவனாக, மற்றவர்களுடைய பேச்சைக் கேட்டு நடந்துவிடக்கூடியவனாக இருப்பான். இதற்கெல்லாம் நம் சமுதாயத்தின் பிள்ளை வளர்ப்பு முறையே காரணம். ஏதோ, வளர்ந்து, திருமணமாகி பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட பிறகு மட்டுமே தங்களுடைய பிள்ளைகளுக்கு சுயமாக சிந்திக்கும் தகுதி வரும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பதுபோல் பெற்றோர்கள் நம்மினத்தில் நடந்து வருகிறார்கள். அதுவும் கிறிஸ்தவ பெற்றோர்களும்கூட இந்தவிதமாகவே நடந்து வருகிறார்கள். வேத போதனையின்படி வளர்த்து தன்னம்பிக்கையோடு சிந்தித்து செயல்படும்படியாக அவர்கள் பிள்ளைகளை வளர்ப்பதில்லை. தங்களுடைய பேச்சைக் கேட்டு வளர வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருந்து எந்தக் காரியங்களில் நம் பேச்சைக் கேட்க வேண்டும், எந்தக் காரியங்களில் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைகளையெல்லாம் சொல்லிப் பிள்ளைகளை வளர்ப்பதில்லை. இதன் காரணமாக நம்மினத்து கிறிஸ்தவ வாலிபர்களுக்கு தன்னம்பிக்கை (Self belief) குறைவாக இருக்கிறது. அநேகர் தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) கொண்டவர்களாக இருக்கிறார்கள். எதையும் சாதிக்க முடியும் என்ற விடா முயற்சி அவர்களில் அருகிக் காணப்படுகிறது. ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதற்குரிய வரம்பின் அடிப்படையில் சிந்தித்து அதைப் பொறுப்போடு நிறைவேற்றுகிற பொறுப்புணர்வும், தன்னம்பிக்கையும் இல்லாமலிருக்கிறது. கொடுத்த பணியைக் கணக்குக் கொடுத்து (Accountability) நிறைவேற்றும் வழக்கத்தை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். சொந்த வாழ்க்கையில் ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்து (Disciplined personal life) வரம்போடு வாழ்வது அவர்களுக்கு தெரியாமலிருக்கிறது. இந்த முறையில் பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட ஆண்கள் திருமணமான பின் அதிகமாக மனைவியின் சொல்லுக்கு அடங்கி வாழ்கிறவர்களாகவும் இருந்துவிடுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் பெற்றோர்களின் சொல்லைக் கேட்டுக் கேட்டே வாழ்ந்து பழகிவிட்ட அவர்களுக்கு மனைவியை வழிநடத்திச் செல்லத் தெரியாதிருக்கிறது. இன்றைக்கும் இருபத்தி ஐந்து வயதாகியும், தூங்குவதற்கும் ஆறுதலுக்கும் தாயின் மடியைத் தேடுகிற வாலிபர்களை நாம் காண்பதில்லையா?

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி, வேலை செய்ய ஆரம்பித்தவுடன் சுயமாக சிந்தித்து வேதபூர்வமான தீர்மானங்களை எடுத்து தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்பா சொன்னார், அம்மா சொன்னார், மாமா சொன்னார் என்று கையில் எடுத்த கலப்பையைப் பாதியில் விட்டுவிட்டுப் போய்விடக்கூடிய தன்னம்பிக்கையற்ற, சுயமாய் சிந்திக்க முடியாதவர்கள் சபைத் தலைமைக்கு பொறுத்தமானவர்களில்லை. இருபத்தி நான்கு வயதைத் தாண்டிய, கிறிஸ்தவ வாலிபர்கள் வேதத்திற்கு பணிந்து, சுயமாக சிந்தித்து தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையில் வாழ்ந்து வந்தால் அவர்கள் இருக்கின்ற சபை அவர்களை வைத்து என்ன செய்ய முடியும்? அவர்களை நம்பி எந்தப் பொறுப்பைக் கொடுக்க முடியும்? அவர்களைத் திருத்தாத வரையும், சுயமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்களாக அவர்களை மாற்றாத வரையும் எதிர்காலத்துக்குரிய நல்ல தலைவர்களாக அவர்களை வளர்க்க முடியாது. கிறிஸ்தவர்களல்லாத பெற்றோர்களைக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ வாலிபர்களும், பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருந்து வேத வாழ்க்கை நடத்தாத பெற்றோர்களைக் கொண்டிருக்கும் வாலிபர்களும் இப்போதே இவற்றைப் பற்றி சிந்தித்து செயல்பட ஆரம்பிப்பது நல்லது. கிறிஸ்தவப் பெற்றோர்களும் பிள்ளைகளை வளர்க்கும்போது, அவர்கள் பத்துப் பன்னிரெண்டு வயதைத் தாண்டுகிறபோது வேதபூர்வமாக சுயமாக சிந்திக்கக்கூடியவர்களாக இருக்கும்படி அவர்களுக்கு வழிகாட்டி வளர்க்க வேண்டும்.

நம்மினத்தில் இருக்கும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையும் கிறிஸ்தவ வேத போதனைகளுக்கு முரணானது. திருமணமான கணவனும், மனைவியும் தங்களுடைய குடும்பத்தைக் கர்த்தரின் வழியில் நடத்த வேண்டுமானால் கூட்டுக்குடும்ப முறை உதவாது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையில் பிறர் தலையீட்டுக்கு வழிவகுத்து, வேதபூர்வமான பிள்ளை வளர்ப்புக்கும் வழியில்லாமல் செய்துவிடும். இது வேதம் அறியாத, கர்த்தர் ஏற்படுத்தாத ஒரு முறை. “மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு ஏற்படுத்துவேன்” (ஆதி. 2:18) என்று சொன்ன தேவனாகிய கர்த்தர் அவன் தனிமையில் இருக்காதபடி ஒரு கூட்டுக்குடும்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. அவனில் இருந்து உருவாக்கிய மனைவியை மட்டுமே கொடுத்தார். அத்தோடு, அவர்கள் பிறர் தலையீடின்றிக் குடும்பம் நடத்துவதற்கு இசைவாக “இதனிமித்தம் புருஷன் தன் தகப்பனையும், தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்” (ஆதி 2:24) என்றார் கர்த்தர். இந்தப் பகுதியைக் கிறிஸ்தவர்கள் மிகக் கவனமாக வாசிக்க வேண்டும். இங்கே ‘இதனிமித்தம்’ என்ற வார்த்தையின் மூலம் கர்த்தர், ஏன் கணவனும், மனைவியும் பெற்றோர்களை விட்டுப் பிரிந்து தனிக்குடித்தனம் நடத்த வேண்டும் என்பதற்கான காரணத்தைச் சொல்கிறார். அதாவது, மனுஷனில் இருந்து மனுஷி உருவாக்கப்பட்டதாலும், அவனுடைய மாம்சத்தின் மாம்சமுமாய் அவள் இருப்பதாலும், அவர்கள் இருவரும் இசைவாய், ஒரே மாம்சமாய், இணை பிரியாதபடி, சரீர மற்றும் ஆத்தும உறவுக்கு எந்தப் பங்கமும் வந்துவிடாதபடி பவுல் எபேசியர் 5ம் அதிகாரத்தில் விளக்கியிருக்கின்ற (எபேசி. 5:22-33) குடும்பம் பற்றிய கர்த்தரின் சித்தத்தைக் குடும்ப வாழ்க்கையில் பின்பற்றி வாழ வேண்டுமானால் அதற்குத் தனிக்குடித்தனத்தைத் தவிர வேறு வழியில்லை என்பதைக் கர்த்தர் உணர்த்துகிறார். கூட்டுக் குடும்ப வாழ்க்கை அதைக் குலைத்துவிடக்கூடியதாய்த்தான் இருக்கும். இது என்னுடைய கருத்தல்ல, என் சித்ததில் உருவான சிந்தனையல்ல, மேல் நாட்டுக் கலாச்சாரப் பாதிப்பால் வரும் ஆலோசனையல்ல, கர்த்தரின் நாவில் இருந்து புறப்பட்டிருக்கும் சத்திய விளக்கம். பொருளாதாரக் காரணங்களுக்காகவும், போலிப்பண்பாட்டிற்கு அடிமைப்பட்டிருப்பதாலும் கர்த்தரின் வார்த்தையை ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்து நடந்துகொள்ளாமல் போகிற கிறிஸ்தவ கணவனும், மனைவியும் குடும்ப வாழ்க்கையில் கர்த்தர் மட்டுமே கொடுக்கக்கூடிய சமாதானத்தையும், இனிமையையும், அன்பையும், ஆத்தும விருத்தியையும் ஒருக்காலும் அடைய முடியாது.

இதுவரை நாம் பார்த்த உதாரணங்கள் நம்மினத்தில் காணப்படும், கர்த்தரின் வார்த்தைகளுக்கு முரணான சில பண்பாட்டம்சங்களாக இருந்து சபைத் தலைமைக்குரிய, வேத இலக்கணங்களைக் கொண்ட நல்ல தலைவர்கள் உருவாவதற்குத் தடையாக இருந்து வருகின்றன. இத்தகைய தவறான பண்பாட்டு முறைகளும், வாழ்க்கை முறைகளும் வேதரீதியில் திருத்தப்படாவிட்டால் திருச்சபைத் தலைமைக்கு வருகிறவர்கள் கிறிஸ்துவின் பெயரில் போலி வாழ்க்கை வாழ்ந்து ஆத்துமாக்களும் போலி வாழ்க்கை வாழ்ந்து வருவதற்கே துணையாக இருந்து வருவார்கள்.

3. நல்ல கிறிஸ்தவ தலைவர்கள் உருவாக முடியாமல் இருப்பதற்கு வேதம் விளக்குகிறபடியான திருச்சபை அமைப்பு நம் சமுதாயத்தில் அருகிக் காணப்படுவதும் ஒரு காரணம்.

இதுபற்றி நம் வாசகர்கள் அதிக தடவைகள் இந்தப் பத்திரிகையில் வாசித்திருப்பார்கள். இருந்தாலும் இந்த ஆக்கத்தோடு அது தொடர்புடையதாக இருப்பதால் சுருக்கமாகவும், தெளிவாகவும் இந்தக் குறைபாட்டைப் பற்றி மறுபடியும் எழுத விரும்புகிறேன். திருச்சபைகள் நம்மினத்தில் இருக்கத்தான் செய்கின்றன. பலவிதமான திருச்சபைப் பிரிவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. பாரம்பரியத் திருச்சபைப் பிரிவுகள் என்று மட்டுமில்லாமல், சுயாதீனத் திருச்சபைகளும் இயங்கி வருகின்றன. ஆனால், இவையெல்லாம் வேதம் விளக்குகின்ற ஆவிக்குரிய ஆத்மீகத்தையும், அமைப்பு முறையையும் கொண்டிராமல் வேதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னிச்சையாக செயல்பட்டு வரும் நிலையைத்தான் நான் சரியல்ல என்கிறேன். இதற்கு ஒருசில திருச்சபைகள் விதிவிலக்காக இருக்கலாம். திருச்சபைக்குத் தலைவர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. கிறிஸ்து தன்னுடைய திருச்சபையை இந்த உலகத்தில் தான் தெரிவு செய்யும் மனிதர்களைக் கொண்டு நிறுவும்போது அவர்கள் அந்தத் திருச்சபைகளைத் தன்னுடைய வார்த்தையை மட்டுமே பின்பற்றி நிறுவ வேண்டும் என்றும், திருச்சபை சம்பந்தமான சகல விஷயங்களையும் வேத போதனைகளின்படியே செயல்படுத்த வேண்டும் என்றும் தெளிவாக சொல்லியிருக்கிறார். இன்றைக்கு சபை நிறுவுவதில் இருந்து சபை சம்பந்தமான அத்தனை விஷயங்களிலும் வேதவழிகளைப் பின்பற்றாமல் தமிழினத்தில் திருச்சபைகளும், ஊழியங்களும் இயங்கி வருகின்றன.

திருச்சபை பற்றி வேதம் தரும் போதனைகளை ஆராய்ந்து பார்ப்போமானால் அது திருச்சபையைப் பற்றிய பின்வரும் உண்மைகளைப் போதிக்கின்றது: (1) திருச்சபை தன்னைத் தானே ஆளுகின்ற ஓர் உள்ளூர் அமைப்பு. அதாவது, திருச்சபைக்குத் தலைவராக இருக்கும் கிறிஸ்து அமைக்கப்படுகின்ற ஒவ்வொரு உள்ளூர் திருச்சபையும் வெளியார் தலையீடின்றி வேத சத்தியங்களின் வழிப்படி தன்னைத் தானே ஆள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அந்த முறையில் ஒவ்வொரு திருச்சபையும் தன்னைத் தானே ஆளுவதற்கு அதற்குத் தேவையான இன்றியமையாத அம்சங்கள் காணப்பட்டால் மட்டுமே அது ஆளும் தகுதியுள்ள திருச்சபையாக கிறிஸ்துவைப் பொறுத்தவரையில் இருக்க முடியும். அப்படித் தேவையான அம்சங்கள் யாவை? (அ) அது முறையாக ஆராய்ந்து பார்த்து ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட விசுவாசிகளைக் கொண்ட அங்கத்தவ முறையையும் (Clearly defined baptized membership), சபை ஒழுங்குக் கட்டுப்பாட்டோடு ஒருவருக்கொருவர் கணக்குக் கொடுத்து இயங்கி வருவதற்கு அவசியமான திருச்சபை சட்ட விதிகளையும் (Constitutionally functioning disciplined accountable church practice) கொண்டிருக்க வேண்டும். மெய் விசுவாசத்தைக் கொண்டிருந்து இவ்வேதவிதிகளுக்குப் பணிகிறவர்களுக்கு மட்டுமே சபை அங்கத்தவராகும் உரிமை உண்டு. (ஆ) அதனை வழி நடத்தும்படியாக, வேதபூர்வமாக அங்கத்தவர்களால் தெரிவு செய்து நியமிக்கப்பட்ட தகுதியுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட போதகர்களும், உதவிக்காரர்களும் இருக்க வேண்டும் (Biblically recognized accountable Elders and Deacons to rule the Church). இவர்களும் ஒருவருக்கொருவர் கணக்குக் கொடுத்து வாழ்ந்து சபையை வேத அடிப்படையில் வழிநடத்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள். (இத்தகைய நிலையை அடையாத சபைகள் அத்தகைய தகுதிகளைக் கொண்ட சபைகளின் மேற்பார்வையில், அது தன்னைத் தானே ஆளும் நிலையை அடையும் வரையில் இயங்கி வர வேண்டும்.) இது வேதம் தெளிவாக விளக்கும் திருச்சபை அமைப்பு முறை. இதை அப்போஸ்தலர் நடபடிகளும், புதிய ஏற்பாட்டின் ஏனைய நூல்களும் தெளிவாக, சந்தேகமற விளக்குகின்றன. இந்த அம்சங்களைக் கொண்டிராத திருச்சபை என்ற பெயரில் இயங்கி வரும் நிறுவனங்களையும், தன்னிச்சையாக செயல்பட்டு வரும் குழுக்களையும், கூடி வரும் கூட்டங்களையும் திருச்சபைகளாக வர்ணிக்க முடியாது. அப்படி வர்ணிப்பதற்கு கர்த்தரின் வேதம் இடம் தரவில்லை. வேதம் விளக்குகின்ற முறையில் அமைக்கப்பட்டு பக்திவிருத்தியோடும், இருதய சுத்தத்தோடும், ஆத்தும பாரத்தோடும் இயங்கி வரும் சபைகளை இன்று பார்க்க முடியாமலிருப்பது எதிர்காலத்தில் நல்ல கிறிஸ்தவ தலைவர்கள் தோன்றுவதற்கு பெரும் பாதகமாக இருந்து வருகிறது. சபைத் தலைவர்கள் சபைகளில் இருந்து தோன்றியிருப்பதாகத்தான் வேதம் விளக்குகிறது. வேதத்தைப் பின்பற்றி இயங்கும் நல்ல சபைகள் இல்லாவிட்டால் நல்ல தலைவர்கள் உருவாவதற்கு வழியேது?

திருச்சபை சம்பந்தமாக வேதம் விளக்குகின்ற சத்தியங்கள் தெரியாமலும், தெரிந்தும் அதன்படி நடந்தால் தன்னுடைய சுயநல நோக்கங்கள் நிறைவேறாது என்ற எண்ணப்போக்காலும் ஆண்டாண்டு காலமாக தமிழினத்தில் கிறிஸ்தவ ஊழியம் என்ற பெயரில் தனி மனிதர்களினதும், திருச்சபைப் பிரிவுகளினதும் செயல்கள் இருந்து வருகின்றன. இதன் காரணமாக வேத சத்தியங்களை அறியாமலும், நடைமுறை வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்தி வாழ்ந்து தீர்மானங்கள் எடுக்கும் வழிகளை அறியாமலும் வாலிபர்கள் வளர்ந்து வருகிறார்கள். வழி காட்டுவதற்கு நல்ல சபைகளோ, சபைத் தலைவர்களோ இல்லாததால் இவர்கள் ஆர்வக்கோளாறின் காரணமாகவும், அறியாமையின் காரணமாகவும் யார் மூலமோ, எங்கேயோ சுவிசேஷத்தைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசித்த உடனேயே ஊழியம் செய்யவும் புறப்பட்டு விடுகிறார்கள். இப்படிப் புறப்பட்டு ஊழியம் செய்து வருகின்ற ஆயிரக்கணக்கானவர்களால் தமிழினம் நிரம்பி வழிகின்றது. இவர்களுக்கு வேதம் எதிர்பார்க்கும் ஆத்மீக முதிர்ச்சியோ, வேத அறிவோ, ஆத்மீக அனுபவமோ, உலக அனுபவமோ மற்றவர்களால் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டிய சபைத் தலைவர்களுக்கான இலக்கணங்களோ இல்லாமலிருக்கிறது. இயேசு கிறிஸ்துவை நான் நேசிக்கிறேன் என்று கூறி அவரில் வைக்கும் அன்புக்கும் அவருடைய வார்த்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததுபோல் இவர்கள் நடந்து வருகிறார்கள். இதன் காரணமாக தெளிந்த விசுவாசமும், சத்தியத்தைத் தெளிவாக அறிந்திருப்பதனால் மட்டுமே வரக்கூடிய சத்திய வாஞ்சையும், சத்தியத்திற்காக மட்டுமே போராடுகின்ற உறுதிப்பாடும், சத்தியத்தின் வழிகளில் மட்டுமே நடக்கின்ற இருதயமும் இல்லாது தானே சூட்டிக் கொண்ட ‘ஊழியன்’ என்ற பெயர் மட்டுமே இருக்க வேண்டிய ஒரே ஊழியத்தகுதியாகக் கருதி ஆத்மீக வல்லமையற்ற அநேகர் தமிழினத்துக் கிறிஸ்தவர்களின் தலைவர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். “ஆத்துமாக்களின் ஆத்மீக வளர்ச்சி அவர்களுடைய தலைவர்களுடையதைவிட ஒருபோதும் உயர்ந்துவிட முடியாது” என்று எவரோ சொன்ன வாசகத்துக்கு ஒப்பாக இத்தகைய தலைவர்களைக் கொண்டிருக்கின்ற ஆத்துமாக்களும் அறிவற்ற, ஆத்மீக வல்லமையற்ற மக்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

நாளைய நல்ல தலைவர்கள் உருவாகத் தடையாயிருக்கும் தமிழினத்துத் திருச்சபைகளின் அமைப்பு பற்றி நான் கொண்டிருக்கும் ஆதங்கத்தை விளக்க விரும்புகிறேன். சபை அமைக்கிறோம் என்று புறப்படுகிறவர்கள் தங்களைத் தாங்களே சபைத் தலைவர்களாக நியமித்துக்கொண்டு மற்றவர்கள் தங்களை எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மட்டுமில்லாமல் சுவிசேஷத்தைச் சொல்லி தங்களைச் சுற்றி ஒரு சிறிய கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு அதற்கு சபை என்று பெயர் கொடுத்து எந்தவிதமான தெளிவான அங்கத்தவ வரம்பும், சட்ட விதிகளும் இல்லாமலும், தம்மைச் சுற்றியிருக்கும் எவரையும் எந்தவிதத்திலும் கலந்து கொள்ளாமலும், ஆலோசிக்காமலும், சுயமாக சகல முடிவுகளை எடுத்தும், தம்மோடிருப்பவர்களுக்குத் தெரியாமல் கணக்குவழக்குகளை நடத்தியும், அதுபற்றி அவர்களுக்கு தெளிவான கணக்குக் கொடுக்காமலும், ஊழியத்தைக் கொண்டு நடத்த வேத அடிப்படையில் சக தலைவர்களை வளர்க்காமலும், சபை அங்கீகாரத்தோடு அவர்களை நியமிக்கும் வழிமுறைகளுக்கு இடங்கொடுக்காமலும் தனக்குத் தானே தலைவனாக இருந்து கர்த்தரின் பெயரில் சில்லறைக் கடை போல் சபை நடத்தி வருவதைத்தான் நான் இங்கே மனக்கஷ்டத்தோடு குறிப்பிடுகிறேன். இத்தகைய முறைகளைக் கடைப்பிடித்து “ஊழியத்தைச்” செய்கிறவர்கள் தங்களுடைய குடும்பத்தை மட்டும் முதன்மைப்படுத்தி சுவிசேஷ ஊழியம் என்ற பெயரில் சுயநல ஊழியம் நடத்துவதற்கு சபை என்று வேதத்தில் எங்கே பெயரிடப்பட்டிருக்கிறதென்று நீங்களே சுட்டிக் காட்டுங்கள். இந்த முறையிலான தவறான ஊழிய நடவடிக்கைகளால் இளந்தலைமுறையினரும் வேதம் போதிக்கின்ற, கணக்குக் கொடுத்து வாழ்க்கை நடத்தும் நேர்மையான வேத வழிகளை அறிந்துகொள்ள முடியாமல் போக நேரிடுகிறது. இந்த வகையிலான சுயநல ஊழியம் செய்கிறவர்கள் தங்களுடைய எதிர்காலத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற பயத்தில் தங்களோடு இணைந்து சமமாகப் பணிபுரியும் விதமாக சக சபைத் தலைவர்களை ஒருபோதும் உருவாக்க மாட்டார்கள்.

அப்போஸ்தலன் பவுலும், தீமோத்தேயுவும், தீத்துவும் ஒருவருக்கொருவர் கணக்குக் கொடுத்து வாழ்ந்து திருச்சபை ஊழியங்களில் ஈடுபட்டிருந்ததை வேதத்தில் மட்டுமே வாசிக்க முடிகின்றது. நம் தமிழினத்தில், அதைக் கண்ணால் காண்பதற்கு வழியில்லாமலிருக்கிறது. இருக்கும் வரையும் தன் பெயர் பரவ வேண்டுமென்பதற்காக இங்கும் அங்கும் கடை திறப்பது போல் ஏதாவது ஊழியங்களை ஏற்படுத்தியும், இறந்த பிறகு அவற்றை நடத்திச் செல்ல இருக்கும்போதே தன் குடும்பத்தைப் பொறுப்பாக நியமித்துவிட வேண்டும் என்பதிலும் தான் தமிழினத்து ஊழியர்கள் உறுதியாக இருந்து உழைத்து வருகிறார்கள். இத்தகைய சுயநல வாழ்க்கையால் வேதபூர்வமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஆத்துமாக்களை அங்கத்தவர்களாகவும், சபை அங்கத்தவர்களால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட போதகர்களையும், உதவிக்காரர்களையும் கொண்ட திருச்சபை அமைப்பைக் கொண்டு ஒழுங்குமுறையோடு இயங்கி வரும் திருச்சபைகளையும் காணமுடியாமல் தமிழினம் வாடிக் கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் திருச்சபை பற்றிய தெளிவான வேதபூர்வமான போதனைகள் கொடுக்கப்படாததும், அந்தப்படி சபைகள் உருவாகாததுமே முக்கிய காரணங்கள். தேவசிந்தனையில் மட்டுமே உருவான மாபெரும் தெய்வீக அமைப்பு திருச்சபை என்பதும், தெய்வீக சிந்தனையில் உருவான அந்த அமைப்பு இந்த உலகத்தில் மாசற்ற மாபெரும் நிறுவனமாக, அதை உருவாக்கும் தேவனின் வழிகளில் மட்டுமே நிறுவ வேண்டுமென்பதையும் நம்மினம் இன்றைக்கும் அறியாமலும், அறிய மனதில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஜோன் மெக்காத்தர் (John MacArthur) என்ற பிரசங்கி கர்த்தரின் திருச்சபையைப் பற்றிப் பின்வருமாறு சுருக்கமாக விளக்கியிருக்கிறார்.

1.    தான் இந்த உலகத்தில் நிறுவி, ஆசீர்வதிக்கப்போவதாக நம் ஆண்டவர் அறிவித்த ஒரே நிறுவனம் திருச்சபை மட்டுமே (மத்தேயு 16:18).

2.    மெய்யாக ஆராதனை செய்பவர்கள் கூடிவருவதற்கான ஒரே இடம் திருச்சபை மட்டுமே (பிலிப்பியர் 3:3).

3.    கிறிஸ்து தன்னுடைய திரு இரத்தபலியின் மூலம் சம்பாதித்த நாளிலிருந்து இந்த உலகத்தில் மிகவும் ஆசீர்வாதமான ஒரே நிறுவனமாக இருந்து வருவது திருச்சபை மட்டுமே (அப்போ. 20:28; 1 கொரி. 6:19; எபே. 5:25; கொலோ. 1:20; 1 பேதுரு 1:19; வெளி. 1:6).

4.    பரலோகத்திலே நிகழப்போகிறவைகளின் இவ்வுலக நிதர்சனமாகவே திருச்சபை இருக்கிறது (மத்தேயு 6:10; 18:18).

5.    இறுதியில் திருச்சபையே உலகலாவியவிதத்திலும், உள்ளூரிலும் வெற்றி பெறும் (மத்தேயு 16:18; பிலி. 1:5).

6.    ஆத்மீக ஐக்கியத்தை அனுபவிக்கும் இடமாக திருச்சபையே இருக்கிறது (எபிரெ. 10:22-25; 1 யோவான் 1:3; 6-7).

7.    திருச்சபையே தெய்வீக சத்தியங்களை பிரசங்கிப்பதோடு அதைப் பாதுகாக்கவும் செய்கிறது (1 தீமோ. 3:15; தீத்து 2:1, 15).

8.    ஆத்மீகப் போதனையை அடையவும், அதில் வளரவும் அவசியமான பிரதானமான இடமாக திருச்சபையே இருக்கிறது (அப்போ. 20:32; எபே. 4:11-16; 2 தீமோ. 3:16-17; 1 பேதுரு 2:2-3; 2 பேதுரு 3:18).

9.    உலக சுவிசேஷப் பணிக்கு அடிதளமாக, அதை ஆரம்பித்து வைக்கும் நிறுவனமாக திருச்சபையே இருக்கிறது (மாற்கு 16:15; தீத்து 2:11).

10.    வல்லமையுடைய ஆத்மீகத் தலைவர்கள் உருவாகி, வளர்ந்து, முதிர்ச்சியடையும் பட்டறையாக திருச்சபையே இருக்கிறது (2 தீமோ. 2:2).

திருச்சபையைப் பற்றி எத்தனை அழகாகவும், ஆழமாகவும் வேத உண்மைகளை மெக்காத்தர் பட்டியலிட்டுத் தந்திருக்கிறார். இதில் பத்தாவதாக அவர் சுட்டிக்காட்டும் உண்மையைத்தான் இதுவரைப் பார்த்து வந்திருக்கிறோம். வேதபூர்வமாக அமைக்கப்பட்டு இயங்கிவரும் நல்ல சபைகளில்லாமல் நல்ல தலைமைக்கு இடமேயில்லை என்பதை வேதம் சுட்டிக்காட்டுகிறதல்லவா?

மலைப் பிரசங்கம்–விளக்கவுரை 2
ஜோன் சார்ள்ஸ் ரைல் வேதபூர்வமாக பிரசங்கமளிப்பதில் வல்லவராக இருந்ததுமட்டுமல்லாமல் எழுதுவதிலும் வல்லவராக இருந்தார். எளிமையான சொற்களைப் பயன்படுத்தி தெளிவாக சத்தியங்களை விளக்குவதில் அவர் தன்காலத்தில் நிகரற்றவராக இருந்தார். புதிய ஏற்பாட்டு சுவிசேஷ நூல்கள் நான்கிற்கும் அவர் விளக்கவுரை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் இருக்கும் அந்நூல்களால் பயனடைகிறவர்கள் அநேகர். மத்தேயு சுவிசேஷ நூலில் காணப்படும் கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்திற்கு ரைல் அளித்துள்ள விளக்கவுரையை இங்கே தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறோம். இவை தமிழில் நூல்களாக மலரப்போகும் காலம் தொலைவிலில்லை. – ஆசிரியர்.

வேதப்பகுதி: மத்தேயு 7:1-11

தலைப்பு: குற்றம் கண்டுபிடிப்பது தவிர்க்கப்பட்டு ஜெபம் உற்சாகப்படுத்தப்படுகிறது.

இந்த வசனங்களின் முதல் பாகம், அது தரும் மெய்யான அர்த்தத்திற்கு மாறான விளக்கமளிப்பதைக் குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதைச் சுட்டிக்காட்டும் வேதப் பகுதிகளில் ஒன்றாகும். மெய்கிறிஸ்தவத்தின் எதிராளிகளால் அடிக்கடி இது துஷ்பிரயோகம் பண்ணப்படுகிறது. வேத வார்த்தைகளை நாம் பலவந்தம் பண்ணும்போது, அவை மருந்தாகப் பயன்படாமல், விஷமாய் மாறுவதற்கான வாய்ப்பிருக்கிறது.

“குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” என்று நமது ஆண்டவர் கூறும்போது, பிறருடைய நடத்தை மற்றும் கருத்துக்களைக் குறித்த அனுகூலமற்ற தீர்ப்பை எந்தவொரு சூழ்நிலையிலும் வழங்காமலிருப்பது தவறு என்று அவர் இங்கு அர்த்தப்படுத்தவில்லை. நாம் தீர்மானிக்கப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும், “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து,” நாம் “ஆவிகளையும் சோதித்து அறிய” வேண்டும். நாம் பூரணராயும், குற்றமற்றவர்களாயும் மாறும்வரை, பிறருடைய பாவங்களையும், குற்றங்களையும் கண்டிப்பது முழுத்தவறு என்றும் அவர் இங்கு அர்த்தப்படுத்தவில்லை. அப்படிப்பட்ட விளக்கம் வேதத்தின் ஏனைய வேதப் பகுதிகள் தரும் போதனைக்கு முரணாயிருக்கும்; அது பிழையும் போலியுமான கொள்கைகளைக் கண்டிக்கவும் வழி இல்லாமல் ஆக்கிவிடும். அத்தோடு, மந்திரி அல்லது நீதிபதி போன்ற பணிகளையும் எவரும் ஏற்க முடியாதபடி இது தடைசெய்துவிடும். “உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது” (யோபு 9:24); இணங்காமை அபிவிருத்தி அடையும்; தீமை செய்வது பெருகும்.

குற்றங்குறை கண்டுபிடிக்கின்ற இருதயத்தைக் கடிந்துக்கொள்ள வேண்டும் என்றே நமது ஆண்டவர் அர்த்தப்படுத்துகிறார். அலட்சியமான போக்கு அல்லது அற்பமான குற்றங்களுக்காக பிறரை நிந்திப்பது, மடத்தனமான, அஜாக்கிரதையான நியாயத்தீர்ப்புகளை வழங்குவது, நம்முடைய அயலாரின் குற்றங்களையும், பிழைகளையும் பெரிதுபடுத்தி அவைகளை இன்னும் மோசமான நிலைக்குள்ளாக்குவதில் ஆர்வம் காட்டுவது ஆகிய நடவடிக்கைகளையே நமது ஆண்டவராகிய இயேசு குறை காண்கிறார். பரிசேயர்கள் மத்தியில் இவ்வழக்கம் பொதுவாகக் காணப்பட்டது. அவர்களுடைய காலந்தொடங்கி இந்நாள் மட்டும் இது பொதுவாய்க் காணப்படுகிறது. இதைக் குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். நாம் மற்றவர்களைக் குறித்து நாம் “சகலத்தையும் விசுவாசித்து, சகலத்தையும் நம்ப” வேண்டும். அதேவேளை, குற்றம் கண்டுபிடிப்பதில் வெகு நிதானமாய் இருக்க வேண்டும். இதுவே கிறிஸ்தவனின் பண்பு (1 கொரிந்தியர் 13:7).

மத சம்பந்தமான காரியங்களை நாம் மனிதர்களோடு பேசும்போது, விவேகத்தோடிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த வசனங்களின் இரண்டாம் பாகம் நமக்குப் போதிக்கிறது. ஒவ்வொன்றும், அதனதனுடைய காலத்திலும், இருக்கின்ற இடத்திலும் அழகாய் இருக்கும். நம்முடைய வைராக்கியமானது காலங்கள், இடங்கள் மற்றும் மனிதர்களின் விவேகமுள்ள சிந்தனையால் உரமூட்டப்பட வேண்டும். “பரியாசக்காரனைக் கடிந்துக் கொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்” என்று சாலொமோன் கூறுகிறார் (நீதிமொழிகள் 9:8). ஆன்மீக காரியங்கள் மீதான நமது எண்ணங்களை வெளிப்படையாக அனைவரிடமும் கூறுவது ஞானமற்றது. இன்று அநேகர், மூர்க்க மனநிலைமை அல்லது வெளிப்படையான ஒழுக்க மற்ற பழக்கங்களினால் சுவிசேஷத்தின் காரியங்களை மதிக்க முற்றிலும் இயலாதவர்களாய் இருக்கிறார்கள். நாம் அவர்களுடைய ஆத்துமாவிற்கு நன்மை செய்ய முயற்சித்தால், அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு, மேலும் பாவங்களைச் செய்ய முற்படுவார்கள். இப்படிப்பட்ட ஜனங்களுக்கு கிறிஸ்துவின் நாமத்தை விளக்கப் பார்ப்பது, மெய்யாகவே “பன்றிகளுக்கு முன் முத்துக்களை போடுவதற்கு” சமமாகும். அது அவர்களுக்கு நன்மை செய்யாமல், தீமையையே அளிக்கிறது. அது அவர்களுடைய எல்லா அசுத்தங்களையும் கிளறி, அவர்களை மூர்க்கமடையச் செய்கிறது. சுருக்கமாகக் கூறுவோமானால், அவர்கள் கொரிந்துவிலுள்ள யூதர்களைப் போலவும் அல்லது நாபாலைப் போலவும் இருக்கிறார்கள் (அப்போஸ்தலர் 18:6). வேதம் நாபாலைக் குறித்து இப்படியாக எழுதியுள்ளது “இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார்” (1 சாமுவேல் 25:17).

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பாடத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமானால் அதில் விசேஷமாய்க் கவனம் செலுத்த வேண்டும். அதினுடைய சரியான பயன்பாட்டிற்கு நமக்கு அதிக ஞானம் தேவைப்படுகிறது. அதிக வைராக்கியத்தைக் காட்டிலும் அதிக அஜாக்கிரதையினாலேயே நம்மில் அநேகர் தவறிழைக்கிறோம். பொதுவாக, நாம் “பேசுகின்ற காலத்தை” விட “அமைதலாய் இருக்கின்ற காலத்தை” ஒழுங்குபடுத்த எண்ண வேண்டும். இருந்தபோதும், நம்முடைய எல்லா இருதயங்களிலும் சுய பரிசோதனை செய்கின்ற ஆவி எழுப்பப்பட வேண்டும் என்று இந்தப் பாடம் வலியுறுத்துகிறது. நம்முடைய கோபம் மற்றும் எரிச்சலான ஆவியினால், நம்முடைய நண்பர்களால் நமக்கு அளிக்கப்படும் நல்லறிவுரைகளை நாம் என்றாவது உதறித்தள்ளியிருக்கிறோமா? நம்முடைய அகம்பாவத்தாலும், புத்திகூறுவதில் காட்டும் பொறுமையின்மையினாலும், பிறருக்கு என்றாவது உதவாமலிருந்திருக்கிறோமா? நமக்கு அன்போடு ஆலோசனையளிப்பவர்களுக்கு விரோதமாகத் திரும்பி, நம்முடைய மூர்க்கத்தனத்தினாலும், உணர்ச்சி வேகத்தாலும் என்றாவது அவர்களைப் பேசாமலிருக்கச் செய்திருக்கிறோமா? இந்த விஷயத்தில் நாம் அடிக்கடி தவறிழைத்திருப்பதைக் குறித்து பயப்பட வேண்டும்.

ஜெபத்தின் கடமை மற்றும் ஜெபிப்பதற்கான சிறந்த உற்சாகமூட்டுதலை இந்த வசனங்களின் கடைசிப் பாகம் நமக்குப் போதிக்கிறது. இந்தப் பாடத்திற்கும், இதற்கு முந்தைய பாடத்திற்கும் இடையே ஓர் அருமையான தொடர்பு இருக்கிறது. நாம் எப்போது “அமைதலாய்” இருக்க வேண்டும் அல்லது “பேச” வேண்டும், எப்போது நாம் “பரிசுத்த காரியங்களை” முன் கொண்டுவந்து, நம்முடைய “முத்துக்களைத்” தூவ வேண்டும் என்று அறிய விரும்புகிறீர்களா? அதற்கு நாம் ஜெபிக்க வேண்டும். இதற்கே கர்த்தராகிய இயேசு அதிக முக்கியத்துவம் அளித்தார். அவர் பயன்படுத்திய வார்த்தைகளே இதற்கு தெளிவான ஆதாரமாகும் “கேள்”, “தேடு” மற்றும் “தட்டு” என்கிற இந்த மூன்று வெவ்வேறு வார்த்தைகளை அவர் ஜெபத்தின் கருத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தியிருக்கிறார். உண்மையாய் ஜெபிக்கிறவர்களுக்கு அவர் அகலமான, நிறைவான வாக்கை வைத்திருக்கிறார் “கேட்கிற யாவரும் பெற்றுக் கொள்வார்கள்.” நம்முடைய ஜெபங்களைக் கேட்கத் தயாராக இருக்கும் கர்த்தருடைய ஆயத்த நிலையை, பூமியிலுள்ள பெற்றோர்கள் மத்தியில் காணப்படும் சாதாரணமான வழக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஓர் உதாரணத்தின் மூலம் அவர் விளக்குகிறார்: இயல்பாகவே, துன்மார்க்கமும், சுயநலமும் உடைய அவர்கள், தங்கள் பிள்ளைகளுடைய மாம்சீக தேவைகளை நிறைவேற்ற அசட்டை செய்வதில்லை; இவைகளுக்கு மேலாக, அன்பும், இரக்கமுமுள்ள நம்முடைய தேவன், கிருபையினாலே தம்முடைய பிள்ளைகளாய் இருக்கிற யாவருடைய கூக்குரலுக்கும் செவி கொடுக்கிறார்.

ஜெபத்தைக் குறித்த நமது ஆண்டவரின் இந்த வார்த்தைகளை நாம் சிறப்பாய்க் கவனிப்போம். அவருடைய வாக்கியங்களில் சில, இதைப் போன்று பிரசித்திப் பெற்றதும், அடிக்கடி சொல்லப்பட்டதுமாய் இருக்கிறது. “நாம் தேடாவிட்டால், கண்டுபிடிக்க மாட்டோம்” என்று எளியோரும், கல்வியறிவு அற்றவர்களும் பொதுவாக நமக்குச் சொல்வதுண்டு. ஆனால், நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வெறுமனே அறிந்திருப்பதில் என்ன நன்மை இருக்கிறது? ஞானமானது, விருத்தியடைந்து, சிறந்த முறையில் பயன்படுத்தப்படாவிட்டால் கடைசி நாளில் நம்முடைய தண்டனை மட்டுமே அதிகரிக்கும்.

“கேளுங்கள், தேடுங்கள் மற்றும் தட்டுங்கள்”, இதைக் குறித்து நாம் ஏதாவது அறிந்து வைத்திருக்கிறோமா? நாம் ஏன் அறிந்துகொள்ளக் கூடாது? ஒரு மனிதன் ஜெபிக்க வேண்டும் என்ற மெய்யான மன உறுதியைக் கொண்டிருந்தால், ஜெபிப்பதைப் போன்ற எளிமையான காரியம் வேறொன்றும் இல்லை. மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் மனிதர்கள் இதைத்தான் எப்போதும் செய்யத் தாமதிப்பார்கள். இதை செய்வதற்கு முன்பாக, அநேக மதக் காரியங்களை அவர்கள் பயன்படுத்துவார்கள்; அநேக மதச்சடங்குகளைக் கடைப்பிடிப்பார்கள்; இருப்பினும், ஜெபம் இல்லாவிட்டால், எந்த ஆத்துமாவும் காப்பாற்றப்பட முடியாது!

நாம் மெய்யாகவே ஜெபிக்கின்றோமா? இல்லையென்றால், நாம் மனந்திரும்பாவிட்டால், கடைசியில் நாம் கடவுளுக்கு முன்பாகக் குற்றமுள்ளவர்களாய்க் காணப்படுவோம். நாம் செய்யக்கூடாதவற்றை செய்யாததினாலோ அல்லது அறியக்கூடாதவற்றை அறியாததினாலோ நாம் தண்டிக்கப்பட மாட்டோம்; ஆனால், நாம் ஏன் தொலைந்து போனோம் என்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக எது இருக்கும் தெரியுமா? நாம் இரட்சிக்கப்படும்படி நாம் ஒருபோதும் அவரிடம் “கேட்டதில்லை” என்பதுதான்.

நாம் உண்மையாகவே ஜெபிக்கின்றோமா? அப்படியானால், நாம் மனந்தளராமல் ஜெபிக்க வேண்டும். அது வீணான பிரயாசமன்று; அது பிரயோஜனமற்றதுமன்று; அநேக நாட்களுக்குப் பிறகு, அது கனி கொடுக்கும். “கேட்கிற யாவரும் பெற்றுக்கொள்வார்கள்” என்ற வார்த்தைகள் ஒருபோதும் தவறாது.

வேதப்பகுதி: மத்தேயு 7:12-20

தலைப்பு: பிறருக்கான கடமையின் கட்டளை; இரண்டு பாதைகள்; கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எதிரான எச்சரிக்கை

மலைப் பிரசங்கத்தின் இப்பகுதியில் நமது ஆண்டவர் தம்முடைய பிரசங்கத்தின் முடிவுரையை ஆரம்பிக்கிறார். அவர் நம்முடைய கவனத்திற்காக இங்கே வலியுறுத்துகின்ற பாடங்கள் யாவும் விசாலமானதும், பொதுவானதும் மற்றும் ஆழமான ஞானக் கருத்துக்களைக் கொண்டதுமாகும். அவர், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஏற்படும் எல்லாவித ஐயமுள்ள கேள்விகளுக்குமான ஒரு பொதுவான பதிலை நம்மை வழிநடத்துவதற்காக வரையறுக்கிறார். அது என்ன தெரியுமா? “பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதையே நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டும்” என்பதுதான் அது. பிறர் நமக்கு எப்படிப் பகிர்ந்தளிக்கிறார்களோ அப்படியே நாமும் அவர்களுக்கு செய்யக் கூடாது. ஏனெனில், அது வெறும் சுயநலமும், புறஜாதி வழக்கமுமாகும். உண்மையில், பிறர் நமக்கு எப்படிப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ அதேபோல, நாமும் அவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இதுவே மெய் கிறிஸ்தவம் போதிக்கும் சத்தியமாகும்.

மெய்யாகவே, இது ஒரு பொன்னான கட்டளை! இது எல்லாவிதமான அற்ப விரோதங்கள், பழிவாங்குதல் மற்றும் எல்லாவிதமான ஏமாற்றுக் காரியங்களையும் அதற்கும் மேலான காரியங்களையும் தடை செய்கின்றது. இந்தப் பாவம் நிறைந்த உலகில், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே எழுகின்ற நூற்றுக்கணக்கான கடினமான காரியங்களை இது தீர்த்து வைக்கின்றது; குறிப்பிட்ட நிலைகளில் நம்முடைய நடத்தைக்கான எண்ணற்ற சிறு சிறு விதிகளை வகுத்துக் கொள்ளுவதின் அத்தியாவசியத் தேவையை இது தவிர்க்கிறது; ஒரு மகத்தான கொள்கையைக் கொண்டு முற்றிலும் விவாதத்திற்குரிய பகுதியை இது நீக்குகிறது; ஒவ்வொருவரும் தங்களுடைய கடமைப் பொறுப்பை உணரக்கூடிய சமநிலையையும், அளவையும் இது நமக்குக் காண்பிக்கிறது. நமது அயலானவர்கள் நமக்கு இதைச் செய்யக்கூடாது என்று நாம் விரும்புகிற காரியம் ஏதாவது உண்டா? அப்படி இருப்பின், அதே காரியத்தை நாம் அவர்களுக்கு செய்யக்கூடாது என்று நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரியத்தை இன்னொருவர் நமக்கு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமா? அப்படியானால், அதே காரியத்தை நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டும். இந்த விதி உண்மையாய்க் கடைபிடிக்கப்படுமானால், எத்தனை நுணுக்கமானக் கேள்விகளுக்கும் உடனடியாக பதில் கிடைத்துவிடும்!

இரண்டாவது, நமது ஆண்டவர், கிறிஸ்தவத்தில் அநேகருடைய வழிகளுக்கு எதிரான ஒரு பொதுவான எச்சரிக்கையை நமக்குத் தருகிறார். பிறரைப் போல சிந்தித்து, அவர்களைப் போல நாம் செய்வது மட்டும் போதாது. உலக சிநேகம் உள்ள மனிதர்கள் மத்தியில் வாழ்கின்ற நாம் நாகரீக வழக்கங்களைப் பின்பற்றுவோமானால் அவை நம்மைத் திருப்திப்படுத்த முடியாது. நித்திய வாழ்விற்கு நம்மை வழிநடத்துகின்ற பாதையானது “இடுக்கமானதும்”, வெகு “சிலரே” அதில் பயணம் செய்வார்கள் என்றும் ஆண்டவர் கூறுகிறார். மேலும் அவர், நித்திய அழிவிற்கு செல்லும் பாதையானது “விஸ்தாரமானதும்”, “அநேகர்” அதில் பிரவேசிப்பார்கள் என்றும் கூறுகிறார். “அதின் வழியாய் பிரவேசிப்பவர்கள் அநேகர்” என்று வேதம் கூறுகிறது.

இவையனைத்தும் பயப்படத்தக்க உண்மைகள்! இவைகளைக் கேட்கிற யாவரும் தங்கள் இருதயங்களையும், சிந்தனைகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். “எந்தப் பாதையில் நான் சென்று கொண்டிருக்கின்றேன்?” “எந்தப் பாதையின் வழியாய் நான் பயணிக்கிறேன்?” என்று நம்மை நாமே கேட்டுப் பார்க்க வேண்டும். இங்கே கூறப்பட்டுள்ள இவ்விரு வழிகளில் ஏதாவது ஒன்றில் மட்டுமே நாம் ஒவ்வொருவரும் காணப்படுவோம். கர்த்தர் தாமே நமக்கு சுத்தமான, தற்பரிசோதனை செய்கின்ற ஆவியை தந்து, நாம் எங்கே இருக்கிறோம் என்று நமக்குக் காண்பிப்பாராக!

நம்முடைய கிறிஸ்தவத்தில் கீழ்வரும் விதத்தில் சிந்திக்கும் ஜனங்கள் பெருகி வருவார்களானால், நாம் அதிகமாய் பயப்படவும் நடுங்கவும் வேண்டும். “மற்றவர்கள் எங்கே செல்லுகிறார்களோ, அங்கே நாங்களும் போவோம்; அவர்கள் யாரை சேவிக்கிறார்களோ அவர்களையே நாங்களும் செவிப்போம்” என்ற எண்ணப்போக்கைக் கொண்டு வேறொன்றையும் நாம் பொருட்படுத்தாதிருந்தால், நமக்கு நாமே கோபாக்கினையை வருவித்துக் கொள்வோம். இது நாம் “விஸ்தாரமான வழியில்” போவதையல்லாமல் வேறெதை இது சுட்டிக் காட்டுகிறது? இப்பாதையின் முடிவாகிய “நித்திய அழிவில்” நாம் இருக்கிறோம் என்பதை அல்லாமல் வேறெதை இது குறிக்கின்றது? நம்மத்தியில் இன்று பரவலாகக் காணப்படும் கிறிஸ்தவம் மெய்யாகவே இரட்சிக்கும் கிறிஸ்தவம் அல்ல.

நாம் பயபக்தியோடு பின்பற்றுகிற கிறிஸ்தவம், பிரபல்யமானது அல்ல என்பதால் நாம் மனமுறிவடைய வேண்டிய அவசியமில்லை. இதை ஒரு சிலர் நம்மோடிணைந்து அங்கீகரிப்பார்கள். “ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாய் இருக்கிறது” என்று இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் நினைவுகூர வேண்டும். “மனந்திரும்புதல், கிறிஸ்துவிலுள்ள விசுவாசம், பரிசுத்த ஜீவியம்”, இவையெல்லாம் ஒருபோதும் பார்வைக்கு நாகரீகமானவையாயிருக்காது. மெய்யான கிறிஸ்துவின் மந்தை எப்போதுமே இந்த உலகில் சிறிய கூட்டமாய்த்தான் இருக்கும். தனிப்பட்டவர்கள், நூதனமானவர்கள், கொள்கை வைராக்கியம் கொண்டவர்கள், குறுகிய மனப்பான்மை உடையவர்கள் என்று மற்றவர்கள் நம்மைக் குறைகாணுவதால் நாம் மனம் தளர்ந்துவிடக்கூடாது. இது “இடுக்கமும், நெருக்கமுமான வாசல்” நிச்சயமாகவே வெகு திரளான ஜனங்களோடு “நித்திய அழிவிற்குள்” பிரவேசிப்பதைப் பார்க்கிலும் வெகு சிலரோடு நாம் “நித்திய ஜீவனுக்குள்” பிரவேசிப்பதே மேலானது.

கடைசியாக, நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து திருச்சபையில் உள்ள போலிப் போதகர்களுக்கு எதிரான ஒரு பொதுவான எச்சரிப்பை நமக்கு அருளுகிறார். “போலித் தீர்க்கதரிசிகளைக்” குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இப்பகுதிக்கும் இதற்கு முந்தைய பகுதிக்கும் இடையேயான தொடர்பு விசேஷமானது. “விஸ்தாரமான வாசலைக்” குறித்து நாம் தெளிவுள்ளவர்களாய் இருக்கிறோமா? போலித் தீர்க்கதரிசிகளைக் குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அவர்கள் எழுந்திருப்பார்கள்; தவறான வித்துக்கள் விதைக்கப்படுவதற்கு முன்பே, அவர்கள் அப்போஸ்தலர்களின் காலத்தில் தோன்ற ஆரம்பித்தார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். அவர்களுக்காக நாம் ஆயத்தமாகி நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட எச்சரிப்பு நமக்கு மிகவும் அவசியமானது. கிறிஸ்தவத்தில் சொல்லப்படுகின்ற அனைத்தையும், அதிகாரமுடைய ஊழியரிடமிருந்து கேட்கிற எதையும் விசுவாசிக்க ஆயிரக்கணக்கானோர் ஆயத்தமாய் இருப்பார்கள். பாமரர்களைப் போல போதகர்களாலும் தவறிழைக்க முடியும் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அவர்கள் தவறிழைக்க முடியாதவர்கள் அல்லவே, பரிசுத்த வேதாகமம் என்னும் தராசில் அவர்களுடைய போதனைகள் அளவிடப்படவேண்டும். அவர்களுடைய கொள்கைகள் வேதத்தோடு ஒத்துப்போகின்றவரை, அவைகள் கைக்கொள்ளப்பட்டு விசுவாசிக்கப்பட வேண்டும். ஆனால், அதிலிருந்து தவறினால், ஒரு நொடிப் பொழுதுகூட அதை விசுவாசிக்கக் கூடாது. “அவர்களுடைய கனிகளினாலே” அவைகளை நாம் சோதித்துப் பார்க்க வேண்டும். இது வலுவான தீர்க்கதரிசிகளுக்கான அடையாளங்கள். இதை நாம் நினைவுகூருவோம். நமது ஊழியக்காரரின் தவறுகள் நம்முடைய தவறுகளை மன்னிக்காது. “குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியில் விழுவார்களே” என்று வேதம் கூறுகிறது (மத்தேயு 15:14).

போலிப் போதனைக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு எது? சந்தேகமில்லாமல், பரிசுத்த ஆவியானவரின் கற்பித்தல், வேண்டிய ஜெபத்தோடுக் கூடிய கர்த்தருடைய வார்த்தையை முறையாய் தியானித்தல் ஆகியவையே ஆகும். வேதம் நம்முடைய கால்களுக்குத் தீபமாகவும், நம் பாதைக்கு வெளிச்சமாகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது (சங்கீதம் 119:105). இதை முறையாய், சரியாய் வாசிக்கிற மனுஷன், ஒருபோதும் பெரிதாக பாவஞ் செய்ய அனுமதிக்கப்படான். வேதத்தை நிராகரிப்பதாலேயே நம்மில் அநேகர் தாங்கள் சந்திக்கின்ற முதல் போலிப் போதகருக்கு இறையாகிவிட நேரிடுகிறது. “நாங்கள் பெரிதான கல்வி அறிவற்றவர்கள், ஆகவே, பெரிய ஞானமுள்ளவர்களைப் போல நாம் நடிக்கக் கூடாது” என்று போலித் தாழ்மையுடன் நடப்பதன் மூலம் அவர்கள் நம்மை நம்பச் செய்வார்கள். உண்மையில், அவர்கள் வேதத்தை வாசிக்க சோம்பேறித்தனமுள்ளவர்களாயும், சுயமாக சிந்திக்க விரும்பாதவர்களாயும், தாழ்மை என்னும் அங்கியின்கீழ் மறைந்திருக்கும் ஆத்மீக சோம்பேறிகளுமேயல்லாமல் வேறெவருமில்லை.

நம்முடைய கர்த்தருடைய எச்சரிப்பை நாம் அனைவரும் நம் சிந்தையில் வைப்போமாக. உலகம், பிசாசு மற்றும் மாம்சம் ஆகிய இவைகள் மட்டுமே ஒரு கிறிஸ்தவனின் பாதையில் வரும் அபாயங்கள் அன்று; இதைத் தவிர வேறொன்றும் இருக்கிறது, அதுவே “கள்ளத் தீர்க்கதரிசி” ஆகும். அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்திய ஓநாய்கள். ஜெபித்து, கிறிஸ்தவத்திலுள்ள சத்தியத்திற்கும், கள்ளப் போதனைக்கும் இடையேயான வேறுபாட்டை அறிகிறவன் பாக்கியவான்! இரண்டிற்கும் வேறுபாடு இருக்கின்றது. அதை நாம் அறியவும், நம்முடைய ஞானத்தை பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.

வேதப்பகுதி: மத்தேயு 7:21-29

தலைப்பு: பயிற்சியற்ற தொழிலின் பிரயோஜனமற்ற தன்மை; இரு கட்டுபவர்கள்.

கர்த்தராகிய இயேசு, இருதயத்தை ஊடுருவிச் செல்கின்ற பயன்பாடு நிறைந்த ஒரு பகுதியின் மூலம் தன்னுடைய மலைப் பிரசங்கத்தை நிறைவுச்செய்கிறார். அவர், கள்ளத் தீர்க்கதரிசிகளிடம் இருந்தும் போலி போதனையாளர்களிடமும் சீர்கெட்ட ஆசிரியர்களிடம் இருந்தும் உண்மையற்ற ஜனங்கள் பக்கமுமாகத் திரும்புகிறார். நம்மனைவருக்குமான மெய் வார்த்தைகள் இங்கே இருக்கின்றன. நாம் நம்முடைய இருதயங்களில் இவற்றை பதித்துக்கொள்ள கிருபை பெறுவோமாக!

இங்கே கொடுக்கப்பட்டுள்ள முதலாவது பாடம், வெளிப்புறமான கிறிஸ்தவ ஊழியத்தின் பிரயோஜனமற்ற தன்மையை விளக்குகிறது. “கர்த்தாவே, கர்த்தாவே” என்று கூப்பிடுகிற யாவரும் பரலோக இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க மாட்டார்கள். கிறிஸ்தவர்கள் என்று தங்களை பகிரங்கமாய் அழைத்துக் கொள்கின்ற யாவரும் இரட்சிக்கப்பட்டவர்கள் அல்ல என்பதே இதன் பொருள்.

இதை நாம் கவனித்துப் படிப்போம். இரட்சிப்பிற்கு தேவையானதாக அநேக ஜனங்கள் கருதுகின்ற காரியங்களைவிட மேலானவற்றை ஓர் ஆத்துமா நாட வேண்டும் என்று இது வேண்டுகிறது. நாம் கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, நம்முடைய உன்னதமான சலுகைகளுக்காக திடநம்பிக்கையோடு பெருமிதம் கொள்ளலாம்; அறிவுபூர்வமான ஞானத்தைக் கொண்டிருந்து, நம்முடைய சொந்த நிலையிலே சுய திருப்தி உள்ளவர்களாய்க் காணப்படலாம். நாம் பிரசங்கிகளாகவோ பிறருக்கு போதிக்கின்ற ஆசிரியர்களாகவோ, திருச்சபையோடு இணைந்த “அநேக உன்னதமான பணிகளை” செய்பவர்களாகவோகூட இருக்கலாம். இருப்பினும், நாம் எந்நேரமும் பரத்திலிருக்கிற நம்முடைய பிதாவின் சித்தத்தின்படியே எல்லாக் காரியங்களையும் செய்கிறோமா? நாம் மெய்யாகவே மனந்திரும்பி, உண்மையாகவே கிறிஸ்துவை விசுவாசித்து, பரிசுத்தமும் தாழ்மையுமான வாழ்க்கை வாழ்கின்றோமா? நாம் எல்லா கிருபையான சலுகைகளையும், ஊழியத்தையும் கொண்டிருந்தபோதும், மேற்சொன்ன வாழ்க்கையை வாழாவிட்டால், நிச்சயமாகவே இறுதியில் நாம் பரலோகத்தை தவறவிட்டு என்றென்றும் நித்திய நரகத்தில் இருப்போம். “நான் உங்களை அறியேன்; என்னை விட்டு அகன்று போங்கள்” என்ற பயங்கரமான கர்த்தருடைய வார்த்தைகளை நாம் கேட்க நேரிடும்.

நியாயத்தீர்ப்பின் நாளிலே அநேக நூதனமான காரியங்கள் வெளிப்படுத்தப்படும். வாழும்போது சிறந்த கிறிஸ்தவர்கள் என்றெண்ணி வாழ்ந்த அநேகருடைய நம்பிக்கைகள் முழுவதுமாக நாசமாக்கப்பட்டுவிடும். அந்நாளிலே, அவர்களுடைய கிறிஸ்தவத்தின் பிரயோஜனமற்றத்தன்மை வெளிப்படுத்தப்பட்டு, முழு உலகிற்கு முன்பாகவும் அவர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள். பின்னர், இரட்சிக்கப்படுவது என்பது “ஊழியம் பண்ணுவது” என்ற கருத்திற்கும் மேலானது என்று அன்று மெய்ப்பிக்கப்படும். நம்முடைய கிறிஸ்தவத்தை நாம் “பகிரங்கமாக அறிவிப்பதைப்” போல அதை “நடைமுறைப்” படுத்த வேண்டும். நாம் அடிக்கடி அந்த முக்கியமான நாளைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். நாம் கர்த்தரால் குற்றவாளிகள் என்று “நியாயந் தீர்க்கப்படாதபடிக்கு நம்மை நாமே அனுதினமும் நியாயந் தீர்க்கக்கடவோம்.” நாம் எப்படிப்பட்டவர்களாயினும், உண்மை, சத்தியம் மற்றும் நேர்மை உள்ளவர்களாய் இருக்க முயற்சி செய்வோம்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரண்டாவது பாடம் இருவிதமான மக்களைப் பற்றிய ஒரு விசேஷமான சித்திரத்தின் மூலமாகத் தரப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சத்தியங்களைக் கேட்டு அதன்படி ஒன்றும் செய்யாதவர்கள், கிறிஸ்தவ சத்தியங்களைக் கேட்டு அதன்படி செய்கிறவர்கள் ஆகிய இவ்விரு கூட்டத்தாரும் நமக்கு முன்பாக படம்பிடித்துக் காட்டப்படுகிறார்கள். அவர்கள் அடைகின்ற முடிவு, சென்றடையும் இடம் வரையிலான அவர்களுடைய சரித்திரங்களும் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்தவ போதனைகளைக் கேட்டு, அவற்றைப் பின்பற்றி நடக்கிற மனுஷன் “கற்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பாவான்.” மனந்திரும்பி, கிறிஸ்துவை விசுவாசித்து பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் என்கிற எச்சரிக்கைகளைக் கேட்பதோடு மட்டும் அவன் திருப்தியடைவதில்லை. அவன் மெய்யாகவே மனந்திரும்புகிறான்; அவன் உண்மையாகவே விசுவாசிக்கிறான்; அவன் மெய்யாகவே தீமை செய்வதை நிறுத்தி, நன்மை செய்யக் கற்றுக்கொண்டு பாவமான யாவற்றையும் வெறுத்து, நன்மையானதைப் பற்றிக்கொள்கிறான். அவன் கேட்கிறவன் மட்டுமல்லாமல் செயலாற்றுகிறவனுமாய் இருக்கிறான் (யாக்கோபு 1:22).

அதனுடைய விளைவு யாது? சோதனையின் காலத்தில், அவனுடைய கிறிஸ்தவம் அவனைக் கைவிடவில்லை. சுகவீனம், துக்கம், வறுமை, ஏமாற்றம் மற்றும் இழப்புகள் போன்ற வெள்ளங்கள் அவன்மீது மோதினாலும், அவன் சோர்வடையவில்லை. அவனுடைய ஆத்துமா அசையாமல் நின்றது; அவனுடைய விசுவாசம் நீங்கிப்போகவில்லை; அவனுடைய சௌகரியங்கள் முழுவதுமாக அவனைக் கைவிடவில்லை. கடந்த காலத்தில் அவனுடைய கிறிஸ்தவம் அவனுக்கு பிரச்சனைகளைக் கொண்டு வந்திருக்கலாம்; அவருடைய அஸ்திபாரமானது மிகக் கடின உழைப்பாலும், கண்ணீரினாலும் சம்பாதிக்கப்பட்டிருந்திருக்கலாம்; கிறிஸ்து மீதான அவனுடைய ஆர்வத்தைக் கண்டுபிடிக்க அநேக நாட்கள் மெய்த்தேடலிலும், அநேக மணிநேரங்கள் ஜெபத்தில் போராடுவதிலுமாய் இருந்திருக்கும். ஆனால், அவனுடைய உழைப்பு தூக்கியெறியப்படவில்லை. இப்போது அவன் வளமான பலன்களை அறுப்பான். சோதனையை சகிக்கிற கிறிஸ்தவமே மெய்க் கிறிஸ்தவமாகும்.

கிறிஸ்தவ போதனைகளைக் கேட்டு, தான் கேட்ட சத்தியங்களுக்கு மேலாக எதையும் செய்யாத மனுஷன், “மணலின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பாவான்.” கேட்பதிலும், அங்கீகரிப்பதிலும் மட்டும் அவன் தன்னைத் திருப்தி செய்து கொள்கிறான். ஆனால், அதைத் தொடர்ந்து தன் வாழ்வில் பின்பற்றமாட்டான். தன் ஆத்துமாவில் எல்லாம் சரியாய் இருக்கிறதென்று போலியாகத் தன்னைத்தானே மெச்சிக் கொள்வான். ஏனெனில், ஆத்மீகக் காரியங்களுக்கான சுயநலமான உணர்ச்சிகள், திடநம்பிக்கை மற்றும் விருப்பங்களையே அவன் கொண்டுள்ளான். இவைகளிலேயே அவன் தங்கி இருப்பான். அவன் ஒருபோதும் பாவத்தைக் களைய மாட்டான். மேலும், உலகத்தின் ஆவியைப் புறம்பே தள்ளமாட்டான்; அவன் மெய்யாகவே கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டிரான். அவன் சிலுவையின் மகிமையைக் கேட்கிறவனாக மட்டுமே இருப்பானேயன்றி, வேறொன்றும் அதிகமாக செய்யமாட்டன்.

இம்மனிதனுடைய கிறிஸ்தவ சமயத்தின் முடிவு என்ன? அது சோதனையின் முதல் வெள்ளத்திலே முற்றிலுமாக அடிபட்டுப் போய்விடும்; அவனுடைய தேவை வசனமாய் இருக்கும்போது, அது அவனை கோடைகால வறண்ட நீரூற்றைப்போல முற்றிலுமாக ஏமாற்றுகிறது. அது தன்னை உடையோனை மண்மேடுகளில் மோதி சிதறுண்டவனைப்போல நிர்க்கதியாகவும், திருச்சபைக்கு உண்டாகும் அபகீர்த்தியாயும், அவிசுவாசிக்கு பழிச்சொல்லாயும், தனக்குத்தானே கேடுண்டாக்குகிறவனாயும் விட்டுவிடுகிறது. இதில் மெய்யான கருத்து என்னவெனில் விலை குறைவானது எதுவோ அதன் மதிப்பும் குறைவானதே! நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உதவாத மதமும், எந்தவொரு ஆன்மீக காரியங்களையும் உள்ளடக்காத மதத்தின் பிரசங்கங்களைக் கேட்பதும் இறுதியில் பிரயோஜனமற்ற காரியமென்று மெய்ப்பிக்கப்படும்.

இத்துடன் மலைப்பிரசங்கம் முடிவுக்கு வருகிறது. இப்படிப்பட்ட பிரசங்கம் அதற்குபின்பு இதுவரை பிரசங்கிக்கப்படவில்லை. நம்முடைய இருதயங்களில் இது நீங்காத செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளும்படி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இது நமக்கும், சத்தியத்தைக் கேட்கிற யாவருக்கும் விசேஷமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஆன்மீகத் தேடலுக்கான பாடங்களைக் கேட்ட நாமே இதற்குக் கடனாளிகளாய் இருக்கிறோம். இப்பாடங்கள் மிகச் சாதாரணமானவை அன்று. “நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும்” என்று இயேசுகிறிஸ்து கூறியிருக்கிறார் (யோவான் 12:48).

வேத வெளிச்சமில்லாமல் வேதப்பிரசங்கமா!
பிரசங்கம் அல்லது தேவனுடைய செய்தியை அளிப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. கர்த்தர் தன்னுடைய சித்தத்தை மனிதனுக்கு வெளிப்படுத்த ஏற்படுத்தியிருக்கும் கருவி பிரசங்கம். “பிரசங்கிக்க ஒருவன் இல்லாவிட்டால் அவர்கள் எப்படிக் கேள்விப்படுவார்கள்?” என்று ரோமர் 10ல் தேவ செய்தியை அளிப்பதற்கு அவசியமான பிரசங்கத்தினதும், பிரசங்கியினதும் அவசியத்தைப் பவுல் வலியுறுத்துகிறார். இத்தனை முக்கியமான பிரசங்கம் இன்றைக்கு தமிழினத்தில் தலைகீழான நிலையில், வேத போதனையில்லாமல், ஆவியின் வல்லமையில்லாமல், மனுஷத்தனத்தின் அங்க அடையாளங்களை மட்டும் கொண்டு இருந்து வருவது எனக்கு பெரும் மனவருத்தத்தை அளிக்கிறது. உலகம் முழுவதும் பல இடங்களில் இத்தகைய நிலைமை இருந்துவருவதை மறுக்க முடியாது. சமீபத்தில் நான் என் மனைவியோடு ஆஸ்திரேலியா நாட்டிற்கு விடுமுறையில் போயிருந்தபோது அங்கே ஓய்வுநாளில் ஒரு சபையில் ஆராதனைக்குப் போயிருந்தேன். ஆராதனையின்போது பிரசங்கமளித்த போதகர் லூக்கா சுவிசேஷ நூலில் இருந்து ஒரு வசனத்தை செய்தி அளிப்பதற்காக தெரிந்துகொண்டு பிரசங்கமளித்தார். அவர் பிரசங்கிப்பதற்கு எடுத்துக்கொண்ட வசனம் லூக்கா 24:39 “நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள்” என்பது. இந்த வசனத்தில் காணப்படும் வார்த்தையான “என் கால்களையும்” என்ற பதத்தைப் பயன்படுத்தி “இயேசுவின் கால்கள்” என்ற தலைப்பில், இயேசுவின் கால்கள் என்ற பதங்கள் காணப்படும் புதிய ஏற்பாட்டுப் பகுதிகளை எடுத்து அவை பற்றிய பத்து ஆத்மீக விஷயங்களை செய்தியாகப் பிரசங்கித்தார். அதாவது, லூக்கா 24:39ல் காணப்படும் “இயேசுவின் கால்கள்” என்ற பதங்கள் விசுவாசிகளுக்கு இயேசு ஆறுதலைத் தருகிறவராக இருக்கிறார் என்ற ஆத்மீக உண்மையைத் தெரிவிப்பதாக இருக்கின்றது என்ற அடிப்படையில் ஏனைய பத்து விஷயங்களையும் விளக்கினார். பிரசங்கித்த மனிதர் நல்லவர்தான். ஆனால், தேவனுடைய வார்த்தையை எப்படிப் பிரசங்கிப்பது என்பதில் தேர்ந்தவராக எனக்குத் தெரியவில்லை. நல்ல பிரசங்கமொன்றைக் கேட்கும் ஆர்வத்தோடு அந்த சபைக்குப் போய்விட்டு பெரிய ஏமாற்றத்தோடு நான் வீடு திரும்பினேன்.

லூக்கா சுவிசேஷத்தில் இயேசு தன்னுடைய கைகளையும், கால்களையும் சீஷர்களுக்குக் காட்டியதற்குக் காரணம் மரித்து உயிர்த்தெழுந்து வந்திருந்த இயேசுவை அவர்கள் இவர் யாரோ என்று எண்ணிக் கலங்கி ஓர் ஆவியைக் காண்கிறதாக பயந்து நின்றதால்தான் என்பதை லூக்கா 24:37 தெளிவாக விளக்குகிறது. தன்னுடைய கைகளையும், கால்களையும் காட்டி தான்தான் இயேசு என்று சீஷர்களை நம்ப வைக்க இயேசு முயன்றார். மனிதனுக்கு கைகளும், கால்களும் இருப்பதுபோல் ஆவிகளுக்கு இராது என்று

அவர்களுக்குப் புரிய வைப்பதற்காகத்தான் சீஷர்கள் தன்னைத் தொட்டுப்பார்க்கும்படி தன்னுடைய கைகளையும் கால்களையும் இயேசு காட்டினார். இதை லூக்கா 24 தெளிவாக விளக்குகிறது. நாம் வாசித்து விளங்கிக்கொள்ளும்படி இத்தனைத் தெளிவாக கர்த்தர் தன் வார்த்தையில், இயேசு தன் கைகளையும், கால்களையும் சீஷர்களுக்கு எதற்காகக் காட்டினார் என்று விளக்கியிருக்கும்போது அதைப் புரிந்துகொள்ளாமல் அல்லது உதாசீனப்படுத்திவிட்டு அந்தப் பதங்களுக்கு சாதாரண மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத விதத்தில் ஆழமான வேறு பொருள் இருப்பதுபோல் நினைத்து விளக்கம் கொடுத்து அதற்கு ஆத்மீக விளக்கம் என்று பெயர் சூட்டுவது அடிமுட்டாள்தனம். இந்த அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழினத்துப் பிரசங்கிகளில் பெரும்பாலானோர் வேதத்திற்கு விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.

இந்த விதத்தில் வேதத்தை வாசிப்பதாலும், அதற்கு விளக்கமளிப்பதாலும் ஏற்படும் ஆபத்து என்ன?

இப்படிப் பிரசங்கிப்பதன் மூலம் கர்த்தர் தன் வார்த்தையில் நாமறிந்துகொள்ளும் விதமாகத் தெளிவாகத் தந்திருக்கும் செய்தியைப் பிரசங்கிகள் தவிர்த்துவிடுகிறார்கள்; மறைத்துவிடுகிறார்கள். தெளிவாக விளக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை அது கொடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் விளங்கிக்கொள்ளாமல் அதற்குள் வேறு மறைபொருள் இருப்பதாக எண்ணி அதைத் தேடிப்பார்ப்பது மிகவும் ஆபத்தான செயல். இதனால் கர்த்தர் கொடுத்திருக்கும் செய்தியை நாம் அறிந்துகொள்ள முடியாமல் போவதோடு, பிரசங்கி ஜோடனை செய்து உருவாக்கிவிடும் போலிச் செய்தியைக் கர்த்தரின் செய்தியாக நாம் நம்பிவிடும் ஆபத்து ஏற்படுகின்றது. இந்த முறையில் ஒவ்வொரு வேத பகுதிக்கும் நேரடி விளக்கமளிக்காமல் அதற்கு இரகசிய செய்தியொன்று இருப்பதுபோல் பாவித்து போலி விளக்கங்களை அளித்து வரும்போது கர்த்தரின் சத்தியம் முழுவதுமாக மறைக்கப்படுகிறது. இந்த விதத்தில் கொடுக்கப்படும் பிரசங்கங்களைத் தொடர்ச்சியாக கேட்டுவருகிறவர்கள் கர்த்தரின் வேத அறிவில் வளர வழியில்லை. கர்த்தரின் செய்தியை அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. சத்தியத்தை அறிந்துகொள்ள முடியாமலும், அதில் வளர வழியில்லாமலும் விசுவாசத்தில் பிள்ளைப் பருவத்திலேயே அவர்கள் தொடர்ந்து இருந்துவருவார்கள். இத்தகைய பிரசங்கங்கள் இருந்து வரும் சபையில் ஆத்துமாக்கள் வேத அறிவில் வளர வழியில்லை; சபை சத்தியத்தில் வளர முடியாது. இந்த விதத்தில் போதனைகள் அளிக்கப்படும் சபைகளில் சத்தியம் சத்தியமாக விளக்கப்படாதபடியால் அங்கே மெய்யான மனந்திரும்புதலும், ஆவிக்குரிய உயிர்த்துடிப்பும் இருப்பதற்கு வழியில்லை. சத்தியத்தை சத்தியமாகக் கேட்க முடிந்தால் மட்டுமே ஆவியானவர் நம் இருதயத்தில் கிரியை செய்யமுடியும். சத்தியம் மறைக்கப்படுகிறபோது ஆவியின் கிரியைகளுக்கு இடமிருக்க முடியாது. ஆத்துமாக்கள் மனந்திரும்பும்படியாக ஆவியின் உணர்த்துதல் அவர்களுக்குள் ஏற்பட வேதம் தெளிவாக பிரசங்கிக்கப்பட வேண்டும். சத்தியம் மறைக்கப்பட்டு பிரசங்கியின் வார்த்தை ஜாலம் ஆதிக்கம் செலுத்தும்போது ஆத்துமாக்கள் ஆத்மீக மனந்திரும்புதலை அடைவதற்கு வாய்ப்பில்லை.

இந்தவிதமாக வேதத்திற்கு விளக்கமளிக்கும் முறை சபை வரலாற்றில் ஆறாம் நூற்றாண்டுப் பகுதியிலிருந்து இருந்துவந்திருக்கிறது. இந்த முறைக்கு உருவகப்படுத்துதல் என்று பெயர். அதாவது தெளிவான ஒரு விஷயத்தை, அதற்குள் வேறு ஏதோ மறைபொருள் இருப்பதுபோல் பாவித்து அதற்கு ஆத்மீக விளக்கமளிப்பதே இந்தத் தவறான முறை (Allegorical Interpretation or Spiritualizing). உதாரணத்திற்கு மத்தேயு 15:30, “அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்” என்று விளக்குகிறது. இந்த வசனம் நடந்த ஒரு விஷயத்தை விளக்குகிறது. வாழ்க்கையில் கடுந்துன்பங்களை அநுபவித்துக்கொண்டிருந்த அநேகரை ஜனங்கள் அழைத்து வந்து இயேசுவின் காலடியில் இருக்கும்படிச் செய்தார்கள் என்பது நடந்த விஷயம். இதற்குக் காரணம் இயேசு அவர்களைக் குணப்படுத்த வேண்டும் என்று ஜனங்கள் ஆசைப்பட்டதுதான். அதனால்தான் இயேசு அவர்களைக் குணப்படுத்தினார். இதைதான் அந்த வேதப்பகுதி விளக்குகிறது. இந்தப் பகுதி மூலம் நாம் அறிந்துகொள்ளும் உண்மை, இயேசு குணமளிக்கும் வல்லமையுடைய தேவனாக இருந்தார், தன் வாழ்நாளில் அநேகரைக் குணப்படுத்தியிருந்தார் என்பது மட்டுமே. இதற்குமேல் அந்த வசனம் வேறு எந்த மறைமுகமான ஆத்மீக செய்தியையும் கொண்டிருக்கவில்லை. அப்படியிருந்தால் அந்த வேதப்பகுதி அதை வெளிப்படுத்தியிருக்கும். இயேசுவின் பாதத்திற்கு இந்த வசனத்திலோ, வேதத்தில் ஏனைய பகுதிகளிலோ எந்தவிதமான விசேஷ அர்த்தமும் கொடுக்கப்படவில்லை. இதைவிட்டுவிட்டு அந்த வசனத்தில் காணப்படும் “இயேசுவின் பாதம்” குணப்படுத்தும் பாதம் என்றும், அது இயேசு குணப்படுத்தக்கூடியவராக இருந்தார் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது என்றும் விளக்கமளித்தால் அது அதிகப்பிரசங்கித்தனம் மட்டுமல்ல அடிமுட்டாள்தனமும்கூட. இது கேட்பதற்கு அழகாக இருந்தாலும் சத்தியத்திற்கு காதும், மூக்கும், கண்ணும் வைத்து அதன் உருவமே தெரியாமல் சிதைத்துவிடும் முயற்சியாகும்.

இதேபோல் மத்தேயு 28:9ல், இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை சீஷர்களுக்கு அறிவிக்க ஸ்திரீகள் அவர்களைத் தேடிப்போனதை, “அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்” என்று விளக்குகிறது. ஸ்திரீகளுக்கு இயேசு தரிசனம் தந்தபோது அவர்கள் அவருடைய பாதங்களில் விழுந்து அவரைப் பணிந்துகொண்டார்கள் என்பதால் இந்த வசனத்தில் காணப்படும் “இயேசுவின் பாதங்கள்” இயேசு ஆராதனைக்குரியவர் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது என்று விளக்கந் தந்தால் எப்படியிருக்கும்? இயேசுவை மறுபடியும் சந்தித்த ஆனந்தத்திலும், அன்பிலும் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் அவருடைய பாதங்களில் விழுந்து தழுவிக்கொண்டார்கள் என்பது மட்டுமே அந்த வசனம் தெரிவிக்கும் உண்மை. அதை மீறி அதற்கு ஆத்மீக அர்த்தம் கொடுக்க வேதம் எங்கே அதிகாரம் கொடுக்கிறது?

வேத வசனங்களை இந்த முறையில் உருவகப்படுத்தியும், ஆத்மீக அர்த்தம் கொடுத்தும் விளக்கமளிப்பதைப் பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள், மாட்டின் லூதர் உட்படக் கடுமையாக சாடினார்கள். வேத வார்த்தைகளுக்கும் போதனைகளுக்கும் ஒரே அர்த்தம் இருப்பதாகவும், அவற்றிற்குள் பல அர்த்தங்கள் இருப்பதாகப் பாவனை செய்து பொருள் கொடுப்பது அதிகப்பிரசங்கித்தனம் என்றும் மார்டின் லூதர் சொல்லியிருக்கிறார். ஒரு வேத பகுதியில் இருந்து பல பயன்பாடுகளைப் (Applications) பெற்றுக்கொள்ள முடியும்; ஆனால், பல அர்த்தங்கள் (Meaning) அதற்கு ஒருபோதும் இருக்க முடியாது. வசனங்கள் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லும்போது அதன் பொருளை மாற்றி அதற்கு வேறு அர்த்தம் கொடுப்பது சத்தியத்தை சிதைக்கும் வேலையாகும். சத்தியம் இப்படிப் பிரசங்க மேடைகள் தோறும், சபைகள் தோறும் பிரசங்கிப்பவர்களால் சிதைக்கப்படும்போது ஆத்துமாக்கள் சத்தியத்தை அறிந்துகொள்ள முடியாமலும், ஆத்தும விருத்தியடைய முடியாமலும் போய்விடும். வேதம் ஆத்தும ஆதாயத்துக்காகக் கொடுக்கப்பட்டிருக்க அது பிரசங்கத்தில் சிதைக்கப்பட்டால் அந்தப் பிரசங்கத்தின் மூலம் எப்படி ஆத்துமாக்கள் ஆத்தும ஆதாயத்தை அடைய முடியும்? இந்தக் கொடுமையை நூற்றுக்கணக்கான தமிழ் பிரசங்கிகளும், ஊழியர்களும் கர்த்தரின் பெயரில் தமிழினத்தில் செய்து வருகிறார்கள்.

இந்தவிதமாக பிரசங்கிகள் விளக்கம் கொடுப்பதற்குக் காரணமென்ன?

தமிழினத்தில் இந்தவிதமாக போதனைகள் அளிக்கப்படுவதற்கு பிரசங்கிகள் அவசியமான பிரசங்கப் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளாமல் வருவது முக்கிய காரணம். தமிழினத்து கிறிஸ்தவ சமுதாயத்தில் நடந்துவரும் பல ஆத்மீக ஊழல்கள் நல்ல பிரசங்கிகள் உருவாகத் தடையாக இருந்துவிடுகின்றன. முதலில், ஊழியங்கள் எல்லாம் குடிசைத் தொழில் போல் கேட்பாரின்றி, சரியான மேற்பார்வையின்றி ஆரம்பித்து விடுவதால் வேத இலக்கணங்களைக் கொண்டதாக இல்லாமல் ஆரம்பித்து அறைகுறை ஊழியங்களாக நடந்துவருகின்றன. இத்தகைய சொந்த ஊழியங்களைச் செய்து வரும் தனிநபர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்களாகவும், ஊழியம் செய்வதற்கான எந்தப் பயிற்சியோ, பிரசங்கப் பயிற்சியோ பெற்றுக்கொண்டிராதவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கு வேதத்தைத் தெளிவாகப் போதிக்கும் வல்லமையில்லாமல் இருக்கிறது. இரண்டாவதாக, தமிழினத்து இறையியல் கல்லூரிகள் பெரும்பாலும் லிபரல் போக்கில் போகின்ற அல்லது கெரிஸ்மெடிக் கோட்பாடுகளைப் பின்பற்றுகின்றவையாக இருந்துவருவதால் அங்கே தெளிவான சத்தியப் போதனைகளைப் பெற்றுக்கொள்ளும் வழியில்லாமல் போய்விடுகின்றது. இவற்றில் இருந்து வெளிவருகிறவர்கள் கர்த்தரின் சத்தியத்தை வல்லமையோடு போதிக்கும் எந்தத் தகுதியும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய காரணங்களால் தமிழினத்துக் கிறிஸ்தவம் நல்ல பிரசங்கிகளைக் காணமுடியாத வறண்ட பாலைவனமாகத் தொடர்ந்திருந்துவருகின்றது. தமிழினத்து டி.வியில் ஒவ்வொரு நாளும் காலையிலும், ஞாயிறு தினத்திலும் தேவ செய்தி என்ற பெயரில் செய்தி கொடுத்து வருகிற ஒவ்வொரு பிரசங்கியின் செய்தியைக் கேட்டாலே சிந்திக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறவர்களுக்கு நான் சொல்வது தெளிவாக விளங்கும்.

இந்தவிதமாகத் தவறான ஆத்மீக விளக்கம் கொடுப்பதைத் தவிர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

1. பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிற அனைவரும் முதலில் வேதத்தை மதிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அதைப் படிக்கும்போதும், பயன்படுத்தும் போதும் மரியாதை கலந்த பயம் நம்மிருதயத்தில் இருக்க வேண்டும். இது இன்று அநேகருக்கு இல்லாமலிருக்கிறது. வேதம் ஏனைய நூல்களைப் போன்றதல்ல. அது சத்திய தேவனின் வசனம். நாமறிந்து கொள்ளும்படியாக அவர் தந்திருக்கும் அவருடைய சத்திய வழிகள். நாம் நிச்சயம் பின்பற்ற வேண்டிய, நமக்கு ஆத்மீக விருத்தியளிக்கக்கூடிய அவருடைய கற்பனைகள். அவற்றைக் கொண்டிருக்கும் வேதத்தை நாம் மனிதர்கள் எழுதியிருக்கும் சாதாரண நூல்களைப்போலக் கையாள முடியாது. பழைய ஏற்பாட்டில் தேவ மனிதனொருவனுக்கு கர்த்தர் செய்தியொன்றைக் கொடுத்து அதை எந்தவிதத்திலும் மீறி நடக்கக் கூடாதென்று சொல்லியனுப்பியிருந்தார் (1 இராஜாக்கள் 13:7-24). அவன் போகிற வழியில் இன்னொரு மனிதனின் பேச்சைக் கேட்டு கர்த்தரின் வார்த்தையை மீறி நடந்தான். அதனால் அவனை ஒரு சிங்கம் கொன்று போட்டது. இந்த சம்பவம் எதை விளக்குகிறது? கர்த்தருடைய வார்த்தையை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், அவருடைய செய்தியை மீறி நடந்துகொள்வது ஆபத்து என்பதையும் காட்டுகிறது. கர்த்தரின் வார்த்தையை தேவ மனிதன் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாலும் அவனுடைய இருதயத்தில் பயம் இருக்கவில்லை. அவன் அதை அசட்டை செய்தான். அதற்கு எதிரான ஆலோசனையைக் கேட்பதற்கு தன்னுடைய இருதயத்தை அனுமதித்தான். கர்த்தரின் வார்த்தைக்கு எதிரான ஆலோசனையின்படி நடந்துகொண்டான். அதன் காரணமாகத்தான் கர்த்தர் சிங்கத்தைப் பயன்படுத்தி அவனைக் கொன்றார்.

கர்த்தரின் வேதத்தில் நாம் பயம் கலந்த மரியாதை வைத்திருந்தாலே அதை சரியாக விளங்கிக்கொள்ளும் முயற்சியில் அக்கறை காட்டுவோம். பயமில்லாத இருதயம் வேதத்தை அசட்டை செய்யும். பயமிருக்கும் இருதயம் அதன் செய்தியை சரியாக விளங்கிக் கொண்டு அதன் அதிகாரத்துக்குக் கட்டுப்படும். இன்றைக்கு வேதம் கர்த்தரின் வார்த்தை, அவருடைய சித்தத்தை வெளிப்படுத்தும் ஒரே நூல் என்ற எண்ணமே பெரும்பாலானவர்களுக்கு இல்லாமல் இருக்கின்றது. பாரம்பரியத்துக்கு காட்டுகிற மரியாதையையும், அக்கறையையும் ஒருவரும் வேதத்தில் காட்டுவதில்லை. அற்புதங்களுக்கும், அசட்டைக் கனவுகளுக்கும் தரும் இடத்தை வேதத்திற்குத் தருவதில்லை. தேவபயமறியாத இருதயங்கள் எப்படி தேவனுடைய வார்த்தைக்கு கட்டுப்படப் போகின்றன. கர்த்தரின் வேதத்துக்கு மதிப்புக்கொடுக்க எல்லோரும் பழகிக்கொள்ள வேண்டும். அதற்குப் பயந்து, மரியாதை தந்து, அது நம்மேல் ஆதிக்கம் செலுத்தும் வல்லமையுள்ள கர்த்தரின் வார்த்தை என்ற உண்மை நம்மிருதயத்தை விட்டு அகலாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இதுவே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்.

2. வேதத்தை அன்றாடம் வாசித்து அதன் நூல்கள் அனைத்திலும் நல்ல பரிச்சயம் ஏற்பட வேண்டும். இன்று அநேகருக்கு வேதத்தில் பொதுவான அறிவுகூட இல்லாமலிருக்கிறது. ஒவ்வொரு நூலையும் வாசித்து வேத நூல்கள் அனைத்தும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். பலர் புரிந்துகொள்ளக் கஷ்டமான நூல்கள் என்ற எண்ணத்தில் சில நூல்களின் பக்கம் தலை காட்டுவதில்லை. சாகும்வரைகூட அவர்கள் அவற்றைத் தொட்டிருக்க மாட்டார்கள். சகல வேத நூல்களையும் நாம் வாசிப்பதற்காக அவற்றை விளங்கிக்கொள்ளக்கூடிய முறையிலேயே கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார். ஒரு நூலைப் பல தடவை வாசித்துப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டால் ஆரம்பத்தில் விளங்காதிருப்பதுபோல் காணப்படும் நூல்களில் நமக்கு நல்ல பரிச்சயம் ஏற்படும். திரும்பத்திரும்ப, அன்றாடம் அதனை வாசிக்க வேண்டும். நேரத்தை மீதப்படுத்தி ஒவ்வொரு நூலையும் பல தடவைகள் வாசிக்க வேண்டும். இதற்கு நேரம் தேவைதான். அதற்கான நேரத்தை நாம் ஒதுக்கப் பழகிக்கொள்ள வேண்டும். பஸ், டிரெயின் பிரயாணம், ஆபீஸில் மதிய உணவு நேரம் என்று எங்கு எத்தனை நேரம் கிடைக்கின்றதோ அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வேதத்தில் பாண்டித்தியம் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு படிக்காமல், அதன் மூலம் கர்த்தர் நம்மோடு பேசுகிறார், அதை வாசிக்காமல் அவரோடு நமக்கு நல்லுறவு இருக்க முடியாது என்ற ஆத்மீக உணர்வுகளோடு அதைப் படிக்க வேண்டும். வேதத்தை வாசிக்க வாசிக்க அவரோடு நமக்கு அந்நியோந்யமும், அநுபவபூர்வமான உறவும் இருக்கும்; வளரும். ஒரு காலத்தில் விசுவாசிகளும், போதகர்களும் எங்கு போனாலும் வேதத்தைக் கையில் வைத்திருந்தார்கள். இன்றைக்கு அதை சபைக்குக் கொண்டுவருகிறவர்கள்கூட குறைந்துகொண்டு வருகிறார்கள். அந்தளவுக்கு வேதம் நம் வாழ்வில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். கர்த்தரை நேசிக்கிறவன் வேதத்தை நேசிப்பான். மனைவியை நேசிக்கிற கணவன் பாக்கெட் பர்சில் அவளுடைய போட்டோவை வைத்திருக்கிறான். நாம் நேசிக்கின்ற எதுவும் நம்மனதில் ஒவ்வொரு நிமிடமும் வந்துபோவதில்லையா? நாம் நேசிக்கின்ற கர்த்தரின் வேதம் ஏன் நம் வாழ்வில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது?

3. கர்த்தரின் வார்த்தையை முறையாகக் கற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதை முறையாகக் கற்றுக்கொள்ள என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்ய வேண்டும். வேதத்தின் பொதுவான போதனைகளை எந்த விசுவாசியும் தன்னுடைய சொந்த மொழியில் வாசித்து விளங்கிக்கொள்ள முடியும். அதற்கு அவன் பண்டிதனாக இருக்க வேண்டியதில்லை. வேதத்தை மற்றவர்களுக்கு போதிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறவர்கள் அதற்கு ஒருபடி மேலே போய் உழைத்துப் படிக்க வேண்டிய கடமைப் பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் யாக்கோபு, “அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக” என்று (3:1) சொல்லியிருக்கிறார். போதிக்கப் போகிறவர்கள் “போதக சமர்த்தர்களாக (அதில் அதிக ஞானமும், திறமையும் கொண்டவர்களாக) இருக்க வேண்டும் என்று பவுல் (1 தீமோ. 3:2) கூறுகிறார். போதிக்கும் பொறுப்பைப் பெற்றுக்கொண்டிருந்த தீமோத்தேயுவைப் பார்த்து பவுல், “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” என்று கூறியிருக்கிறார் (2 தீமோ. 2:15). “நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு” என்று தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்துகிறார் (2 தீமோ. 3:14). வேதத்தை தீமோத்தேயு நன்றாகக் கற்றுக் கொண்டிருந்தார். அதை பகுத்துப் போதிக்கத் தேவையான அனைத்தையும் அடைந்திருந்தார். அப்போஸ்தலன் பவுலிடம் இருந்து அந்தளவுக்குப் பயிற்சி பெற்றிருந்தார். இதேவிதமாக வேதத்தைப் போதிக்கும் பொறுப்பைக் கொண்டிருப்பவர்களும், அந்தப் பணிக்குத் தயார் செய்துகொண்டிருப்பவர்களும் வேதத்தில் அதிகத் தேர்ச்சி அடைய வேண்டும். கடுமையாக உழைத்துப் படித்து வேத அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

4. வேத விளக்க விதிகளை அறிந்துகொண்டு அவற்றை முறையாகப் பயன்படுத்திக் கர்த்தரின் வார்த்தையை விளங்கிக்கொள்ள வேண்டும்; விளக்கமளிக்க வேண்டும். கர்த்தரின் வேதம் ஓர் இலக்கியப் பொக்கிஷம். அது பொதுவாக எந்த எழுத்துக்கும், இலக்கியத்துக்கும் இருக்கின்ற அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கின்றது. அதாவது அது இலக்கண பூர்வமாக நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இலக்கணமில்லாத மொழியில்லை. மொழியைப் புரிந்துகொள்ள அதன் இலக்கணம் உதவுகிறது. அதேபோல் வேதத்தைப் புரிந்துகொள்ள அது எழுதப்பட்டிருக்கும் மொழி இலக்கணம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அத்தோடு, வேதத்தில் வரலாற்றையும், தீர்க்கதரிசனங்களையும், கவிதை நடை இலக்கியத்தையும், வசனநடை இலக்கியத்தையும், உருவக, உவமை, பழமொழி இலக்கியங்களையும் பார்க்கிறோம். இலக்கியத்தின் பல அம்சங்களையும், தன்னுடைய செய்தியை விளக்குவதற்கு வேதத்தில் கர்த்தர் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றை நாம் அலட்சியப்படுத்த முடியாது. இந்த ஒவ்வொரு இலக்கியத்தையும் அதற்குய சிறப்பான அம்சங்களை மனதில் வைத்துப் படிக்க வேண்டும்; ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு நமக்குத் துணைசெய்யும் விதிகளே வேத விளக்க விதிகள் (Principles of Interpretation). இந்த வேத விளக்க விதிகளை முறையாகப் பயன்படுத்திப் படிக்கத் தவறுவதனாலேயே வேத வசனங்களுக்கு தங்கள் மனம் போன போக்கில் பலர் ஆத்மீக விளக்கம் என்ற பெயரில் அறிவுக்குப் பொருந்தாத விளக்கங்களைத் தந்து வருகிறார்கள். லூக்கா 24:39ல் இயேசு தன்னுடைய கைகளையும் கால்களையும் சீஷர்களுக்குக் காண்பித்தபோது அவை அவருடைய கைகளாகவும், கால்களாகவும் மட்டுந்தான் இருந்தன. சாதாரண அன்றாட செய்திப் பத்திரிக்கைகளையும், ஏனைய உலக இலக்கியங்களையும் வாசிக்கிறபோதுகூட இந்த வகையிலான மொழி நடையை உள்ளது உள்ளபடியேதான் நாம் எடுத்துக்கொள்ளுவோம். அதற்குள் மறைபொருளான போதனைகள் இருப்பதாக நாம் எண்ணுவதில்லை. வேத விளக்க விதிகளை அறிந்துகொண்டிருப்பவர்கள் இயேசுவின் கால்களுக்கு ஆத்மீகப் பொருள் கொடுக்க முனைவதைத் தவிர்த்துக் கொள்ளுவார்கள். வேதம் ஆத்மீகப் போதனைகளால் நிரம்பி வழிகின்றது. அந்தப் போதனைகளை மொழிகளுக்குரிய இலக்கண, இலக்கிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வேதத்தைப் படிக்காமல் ஒருபோதும் விளங்கிக்கொள்ள முடியாது. மொழிகளுக்கேயுரிய இலக்கண, இலக்கியக் கட்டுப்பாடுகளை மீறுகிறபோது கர்த்தரின் போதனை சிதைக்கப்பட்டுவிடும். நம்முடைய சொந்தக் கருத்துகளை நாம் வேதமாக நம்பிவிடக்கூடிய ஆபத்து ஏற்படும்.

வேத விளக்க விதிகள் வேதத்திலேயே தரப்பட்டிருக்கின்றன. அவற்றை இன்றைய பிரசங்கிகள் சரிவர அறிந்திருக்கவில்லை. வேதத்தைப் படிக்கவும், விளக்கவும் இதெல்லாம் அவசியமில்லை, ஆவியானவர் மட்டுமே போதும் என்று அவர்கள் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விதிகளை வேதத்தில் தந்திருப்பதே கர்த்தர்தான். அந்த விதிகளைப் பயன்படுத்தி வேதத்தைப் படிப்பதைத் தவிர்த்தால் திரித்துவத்தின் மூன்றாம் ஆள்தத்துவமான ஆவியானவர் நமக்கு எப்படி உதவுவார்? வேதத்தின் போதனைகளை நமக்கு உணர்த்தும் பணியை ஆவியானவர் செய்கிறார். வேதத்தை விளங்கிக்கொள்ளுவதில் அசட்டை காட்டி அதைக் குளறுபடியாக பிரசங்கித்தால் ஆவியானவர் நம் பக்கம் எப்படி வருவார்? வேத விளக்க விதிகளைக் கற்றுக்கொண்டு கவனத்தோடு வேதத்தைக் கற்றுக்கொள்ளும்போது அநாவசியத்துக்கும் வேத வசனங்களை நீங்கள் உருவகப்படுத்த மாட்டீர்கள்; அவற்றிற்கு தேவையில்லாமல் ஆத்மீக அர்த்தம் கற்பிக்க மாட்டீர்கள். இந்த வேத விளக்க விதிகளை இங்கே சுருக்கமாகத் தருகிறேன்:

நான்கு அடிப்படை வேத விளக்க விதிகள்:

1. வேத வசனங்களை அவை கொடுக்கப்பட்டிருக்கின்ற மொழிநடையையும், இலக்கியத் தன்மையையும் கவனத்தில் கொண்டு இலக்கண அடிப்படையில் ஆராய்ந்து வசனங்களை உள்ளது உள்ளபடியே விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த விதியை விபரமாக ஒரு நூலளவுக்கு விளக்குவதற்கு அதில் விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. இருந்தாலும் ஒரு சில உதாரணங்களைத் தந்து இதை விளக்க விரும்புகின்றேன். லூக்கா 24:39ஐயே எடுத்துக் கொள்ளுவோம். “நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள்” என்றார் இயேசு. இயேசு இங்கே சீஷர்களோடு பேசி இதைச் சொன்னார். ஏன், எதற்காக சொன்னார் என்பதையும் அந்த வசனம் அமைந்திருக்கும் பகுதி விளக்குகிறது. அவர் அப்படிச் சொன்ன பிறகு என்ன நடந்ததென்பதும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. சீஷர்கள் அவர் இயேசுதான் என்று நம்பியதை 52, 53ம் வசனங்கள் விளக்குகின்றன. முதலில், இந்தப் பகுதி எத்தகைய இலக்கியம் என்று கேட்போமானால் இது வசனநடையில் அமைந்துள்ள வரலாற்று இலக்கியம் என்பதை அறிந்துகொள்ளுகிறோம். அதாவது, நடந்து முடிந்த ஒரு சம்பவம் இங்கே விளக்கப்பட்டிருக்கிறது. இதில் உருவகத்திற்கோ, உவமைக்கோ இடமில்லை. இது ஒரு கவிதையும் அல்ல. இங்கே தீர்க்கதரிசனத்திற்கும் இடமில்லை. எனவே இந்த வரலாற்று இலக்கியப்பகுதியில் காணப்படும் இயேசுவின் வார்த்தைகளை அவர் சொல்லியிருக்கிறபடி, இலக்கண அர்த்தத்தின்படி மட்டுமே புரிந்துகொள்ள வேண்டும். இயேசுவின் கைகளுக்கும், கால்களுக்கும் எந்த விநோதமான விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியம் இங்கு இல்லை. இயேசு சீஷர்களை நம்ப வைப்பதற்காகத் தன்னைத் தொட்டுப்பாருங்கள் என்று கைகளையும், கால்களையும் காட்டினார் அவ்வளவுதான்.

இந்தப் பகுதியை வாசிக்கின்றவர்கள், இதிலிருந்து என்ன செய்தியை நாம் அறிந்துகொள்ளும்படி கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்ற கேள்வியை எதிர்நோக்குகிறபோதுதான் தவறு செய்யும் நிலை ஏற்படுகின்றது. சிலர், இந்தப் பகுதி தெளிவாக உள்ளதை உள்ளபடியே விளக்குவதால் இதில் கண்ணுக்குப் புலப்படாமல் ஏதாவது செய்தி இருக்கும் என்று எண்ணி அவர்கள் ஒரு விளக்கத்தைத் தர முயற்சிக்கிறார்கள். இந்தப்பகுதியில் நிச்சயம் போதனை இருக்கிறது. அது இயேசுவின் கைகளிலும், கால்களிலும் மறைந்திருக்கவில்லை. மாறாக முதலில், இந்தப்பகுதியை 24:36ல் வாசித்துப் பார்த்தால் அங்கு நடந்த சம்பவத்தின் முழு விபரத்தையும் அறிந்துகொள்ளலாம். அதற்குப் பிறகு இந்தப் பகுதி தரும் போதனை அதற்குள்ளேயே எப்போதும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், இது உருவகமோ, உவமையோ, தீர்க்கதரிசனமோ அல்ல. இது வசனநடையில் எளிமையான வார்த்தைகளால் விளக்கப்பட்டிருக்கும் வரலாற்று சம்பவம். இனி இது தரும் போதனைதான் என்ன என்பதைக் கவனிப்போம். (1) மரித்து உயிர்த்தெழுந்த இயேசு தன்னுடைய சரீரத்தோடு, அதை மற்றவர்கள் தொட்டு உணரும்படியாக அதேநேரத்தில் மூடியிருக்கும் கதவைத் திறக்காமலேயே அறைக்குள் நுழையக்கூடிய உருவத்தில் பலருக்குக் காட்சியளித்திருக்கிறார். நம்முடைய உருவத்திற்கும் அன்று அவர்கொண்டிருந்த உருவத்திற்கும் இந்த வித்தியாசம் இருந்தது. பரலோகத்தில் நாம் இயேசுவை இப்படியாகப் பார்க்கக்கூடும் என்ற ஒரு நம்பிக்கையை அது அளிக்கிறது. அத்தோடு பரலோகம் போகிறவர்கள் ஒருவரையொருவர் இனங்காணக்கூடிய உருவத்தைக் கொண்டிருப்பார்கள் என்பதையும் இது காட்டுகிறது. இதற்கு மேல் அவருடைய உருவநிலை பற்றி நாம் கற்பனை செய்வது தவறு. (2) இயேசு மரித்தநாளில் இருந்து கலங்கிப் போயிருந்த சீஷர்களை தைரியப்படுத்தி அவர்களுடைய கடமைப் பொறுப்பை உணர்த்தி ஊழியத்தில் ஊக்கப்படுத்த இயேசு அவர்களை சந்தித்தார். அந்தக் காரியம் இந்த சந்திப்பின் மூலம் நிறைவேறியதையும் பார்க்கிறோம். அவர் இயேசுதான் என்பதை சீஷர்கள் அவரோடு பேசிப் பழகியதில் இருந்து உணர்ந்து ஆனந்தப்பட்டு, கலக்கமெல்லாம் நீங்கி எருசலேமுக்குப் போனார்கள். இதிலிருந்து நாம் பொதுவாகப் படிக்கும் பாடம் நம்முடைய கலக்கங்களையும், சந்தேகங்களையும் நீக்கி நம்மைத் தைரியப்படுத்தும் ஆண்டவராக இயேசு இருக்கிறார் என்பதே. இதை வேதத்தின் ஏனைய பகுதிகளும் விளக்குகின்றன. (3) லூக்கா 24:36-53 வரை வாசித்துப் பார்த்தால், இயேசு அவர்களோடிருந்தபோது தன் உருவத்தை மட்டும்காட்டி அவர்களை நம்ப வைக்க அவர் பிரயாசப்படவில்லை; அதற்கும் மேலாக தான் இதுவரை போதித்திருந்த வேத வாக்கியங்களை அவர்கள் நினைவுகூரும்படி அவர் அவர்களுக்கு விளக்கிப் போதித்தார் (45). அதன் மூலம் அவர் அவர்களுடைய மனக்கதவைத் திறந்துவைத்தார். இதிலிருந்து பொதுவான பாடமாக வேதம் நம்முடைய ஆத்மீகக் கண்களைத் திறந்து வைக்கும் கர்த்தரின் சத்தியம் என்பதை அறிந்து கொள்ளுகிறோம். அற்புதங்களைவிட வேத சத்தியங்களே நமக்கு ஜீவனளிக்கக்கூடியவை, ஞானத்தைத் தரக்கூடியவை, கர்த்தரில் நம்மை வளர்க்கக்கூடியவை என்பதை இப்பகுதியில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். இதுவே நாம் வேதத்தைப் படிக்கும்போது பயன்படுத்துகிற முறையாக இருக்க வேண்டும். பொதுவாக இந்தவிதத்தில்தான் நாம் வேதத்தின் பகுதிகளை ஆராய வேண்டும்; விளங்கிக்கொள்ள வேண்டும். ஆத்துமாக்கள் தன் போதனையைக் கேட்டு ஆச்சரியப்பட வேண்டுமென்பதற்காக பலர் இல்லாததைச் சொல்லி சிந்திக்க முடியாதவர்களை ஏமாற்றுகிறார்கள். கர்த்தர் வேதத்தில் உள்ளதை உள்ளபடி விளங்கிக்கொள்ளும்படியாகவே நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

2. எப்போதும் நாம் வாசிக்கின்ற வசனத்தை அது கொடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் வாசித்து அந்தப் பகுதிதரும் முழுவிபரத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் செய்தி கொடுப்பது மிகவும் ஆபத்தான காரியம். ஒவ்வொரு வார்த்தையும், வசனமும் வேதத்தில் ஒரு பின்னணியைக் கொண்டு அமைந்திருக்கின்றன. லூக்கா 24:39ல் “இயேசுவின் கைகளும், கால்களும்” என்ற பதங்களை நாம் ஒருபோதும் அது அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் இருந்து அகற்றிவிட்டு விளங்கிக்கொள்ள முடியாது; விளக்கமளிக்க முடியாது. இதற்காக நாம் எப்போதும் ஒரு வசனத்தை விளக்கும்போது அதற்கு முன்னால் என்ன சொல்லப்பட்டிருக்கிறது, அந்த வசனத்திற்குப் பின்னால் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை வாசித்து விளங்கிக்கொள்ள வேண்டும். சில வேளையில் ஒரு பகுதியை விளங்கிக்கொள்ள அது அமைந்திருக்கும் அதிகாரத்தையோ அல்லது முழு நூலையோ வாசித்து விளங்கிக்கொள்ள வேண்டும். வசனங்கள் அமைந்திருக்கும் சந்தர்ப்பம் மட்டுமே எந்தவொரு வசனத்தையும் நாம் விளங்கிக்கொள்ள உதவமுடியும்.

3. வேத வசனங்கள் உடனடி சந்தர்ப்பத்தை (Immediate context) மட்டும் அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்காமல் ஒரு நூலுக்குள்ளாக அமைந்து காணப்படுகின்றன (Larger context). வசனமோ, வசனங்களோ காணப்படும் நூலின் ஆசிரியர், அது எழுதப்பட்ட நோக்கம், நூலின் வாசகர்கள், அவர்கள் எதிர்நோக்கியிருந்த பிரச்சனைகள், வாழ்ந்த சூழ்நிலை ஆகியவை நாம் எடுத்துக் கொண்டிருக்கும் வசனங்களின் பொருளை விளங்கிக்கொள்ளுவதற்கு பேருதவி செய்கின்றன. என்னுடைய சபையில் இப்போது நான் யாக்கோபு நூலில் இருந்து பிரசங்கமளித்துக் கொண்டிருக்கிறேன். அதை ஆரம்பித்தபோது அந்த நூலின் பின்னணி மற்றும் அதன் ஆசிரியரைப் பற்றி ஆரம்பத்தில் இரண்டு செய்திகளைத் தயாரித்து அளித்தேன். அந்த செய்திகள் முழுநூலின் தன்மையையும், போதனையையும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவியதோடு இனிவரும் காலங்களில் ஒவ்வொரு அதிகாரத்திலும் தரப்பட்டிருக்கும் குறிப்பிட்ட போதனைகளைத் தெளிவாக நூலின் அடிப்படையில் முறையாக அணுகி விளங்கிக்கொள்ள பேருதவி செய்யும். வேதத்தின் எந்தவொரு வசனத்திற்கும் ஒரு சந்தர்ப்பம் உண்டு, பின்னணி உண்டு என்பதை மனதில் வைத்தே எப்போதும் வேதம் படிக்க வேண்டும். இந்த முறையில் தமிழினத்தில் வேதம் படிக்கிறவர்கள், போதிக்கிறவர்கள் குறைவு. பொதுவான வேத அறிவைப் பெற்றுக்கொள்ளாததாலும், இந்த முறையில் வேதத்தை அணுகும் முறையை வளர்த்துக்கொள்ளாததாலும் வெறுமனே ஒரு வசனத்தை மட்டும் எடுத்துப் பேசிக்கொண்டிருப்பது பலருக்கும் இன்று வழக்கமாகப் போய்விட்டது.

4. ஒரு வசனப்பகுதியை ஆராய்ந்து படித்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் போதனை இதுதான் என்று அறிந்துகொண்ட பின் அந்தப் போதனை வேதத்தின் ஏனைய நூல்களில் எந்தமுறையில் விளக்கப்பட்டிருக்கின்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். வேதத்தில் உள்ள நூல்களனைத்தும் பிரிக்க முடியாதபடி ஒன்றோடொன்று இணைந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு நூலுக்கும் ஏனைய நூல்களோடு தொடர்பிருக்கின்றது. ஆரம்பத்தில் இருந்து வேதம் ஒரே செய்தியை படிமுறையாக விளக்கி வெளிப்படுத்தல் நூலில் நிறைவுக்குக் கொண்டுவருகிறது (Progressive revelation). அது வேதத்தின் விசேஷ அம்சம். இதனால், எந்த வேதப்பகுதியில் இருந்தும் இதுதான் போதனை என்று நாம் தீர்மானித்து விடுமுன்பு அத்தகைய போதனை தெளிவாக வேதத்தின் ஏனைய பகுதிகளில் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே நாம் தீர்மானித்திருக்கின்ற போதனை வேத போதனையாக இருக்க முடியும். பல வேதப்பகுதிகளின் மூலம் நிரூபிக்கப்படுகின்ற ஒரு போதனை மிகவும் வலிமையானதாக இருக்கும்; கர்த்தரின் சத்தியமாக இருக்கும். இதன் காரணமாக வேதத்தை ஒப்பிட்டுப் படிக்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு ஓர் உதாரணத்தை விளக்க விரும்புகிறேன். தமிழகத்தில் சமீபத்தில் ஒரு பிரசங்கி டி. வியில் நோவாவின் குமாரன் அவரோடு தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக ஆதி. 9:20-27ஐ வைத்து விளக்கமளித்திருக்கிறார். இந்த உதாரணம் கொஞ்சம் அதிகமானதுதான். இருந்தாலும் எந்தளவுக்கு வேத அறிவில்லாமல் டி.வியில் உளறுமளவுக்கு பிரசங்கிகள் தமிழினத்தில் வளர்ந்திருக்கிறார்கள் என்பதை விளக்க இந்த உதாரணத்தைத் தருகிறேன். இந்த ஆதியாகமப் பகுதியை பிரசங்கித்த மனிதர் சரியாக வாசித்து விளங்கிக்கொள்ளவில்லை. அந்தப் பகுதியில் அப்படியான எந்த அசிங்கமான விபரமும் நோவாவைப் பற்றிக் கொடுக்கப்படவில்லை. நோவா செய்த தவறு அதிகமாகக் குடித்ததும், அலங்கோலமாக விழுந்து கிடந்ததும்தான். அதைத்தவிர இந்தப் பகுதி நோவாவின் மீது எந்தக் குறையையும் சொல்லவில்லை. நோவாவின் குமாரனான காம் தகப்பன் நிர்வாணமாக இருப்பதைப் பார்த்துவிட்டு அதைப்போய் சகோதர்களுக்கு மரியாதையற்ற முறையில் சொல்லியிருக்கிறான். இந்த இடத்தில் நோவா சபிக்குமளவுக்கு காம் செய்த பாவம் தகப்பனை இழிவுபடுத்திப் பேசியதுதான். மற்ற இரு சகோதரர்களும் உடனடியாக ஒரு பெரிய போர்வையோடு போய் தகப்பனைக் கண்களால் பார்க்காமலேயே அவர் மேல் போர்வையைப் போர்த்திவிட்டு வெளியில் போனார்கள். அந்தளவுக்கு தகப்பனை அவர்கள் மதித்து நடந்து கொண்டார்கள். இந்த இடத்தில் தகப்பனோடு தவறான சரீர உறவு கொண்டான் நோவாவின் குமாரன் என்று எப்படி ஒரு மனிதனால் பகிரங்கமாக விளக்கம் கொடுக்க முடிந்தது என்பது புரியவில்லை. அப்படி ஒரு முடிவெடுத்த பிரசங்கி, நோவா போன்ற தீர்க்கதரிசியாக, தேவ மனிதனாக இருக்கிற மனிதர்கள் அத்தகைய கொடூர பாவத்தை செய்வார்களா? அப்படி வேதம் வேறு எந்தப் பகுதியிலாவது, எங்காவது போதிக்கிறதா? என்பதையும் சிந்தித்துப் பார்க்கவில்லை. நோவாவைப் பற்றிய தவறான எண்ணத்திற்கு இந்த மனிதர் வந்த காரணம் ஆதி. 9ஐ சரியாக வாசிக்காததாலும், அதை ஏனைய வேதப்பகுதிகளோடு ஒப்பிட்டு வாசித்து ஆராயாததாலுமே.

வேத வெளிச்சமில்லாமல் வேதப் பிரசங்கமா! என்ற தலைப்பை ஏன் கொடுத்திருக்கிறேன் என்று உங்களுக்கு இப்பொழுது புரிகிறதா? வேதப் பஞ்சம் பலரையும் இன்று உளரல் மன்னர்களாக்கி ஆத்துமாக்களின் அறியாமையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வழிவகுத்திருக்கிறது. இந்த ஆக்கத்தை வாசிக்கும் பிரசங்கிக்கின்ற பொறுப்பைக் கொண்டிருப்பவர்களும், பிரசங்கத்தைக் கேட்கும் ஆத்துமாக்களும் இனி வேதத்தைக் கையாளுகின்றபோது அது கர்த்தரின் சத்திய வசனம் என்கிற உணர்வோடு கையாளுங்கள். மனிதனின் பாவத்தை உணர்த்தி அவனைக் கர்த்தரின் வழியிலும், பரிசுத்த வாழ்க்கையிலும் வழிநடத்த வேதம் மட்டுமே இன்று நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த சத்திய வேதத்தை அறியாமையினாலும், அசட்டுத்தனத்தினாலும், சோம்பேரித்தனத்தினாலும் பிரசங்கிக்கிறவர்கள் சிதைத்துப் பிரசங்கிக்கும்போது ஆத்துமாக்களுக்கு எந்தவித ஆத்துமப் பயனும் கிடைப்பதில்லை. அத்தோடு தொடர்ந்தும் மக்கள் இருட்டிலேயே இருக்கவேண்டிய நிலைமையும் ஏற்படுகிறது. வேத வெளிச்சமில்லாத ஜனங்களும், நாடும் வறண்ட பாலைவனத்தைவிட மோசமான ஆத்மீகப் பாலைவனமாகும்.

ஜோன் சார்ள்ஸ் ரைல்
ஜோன் சார்ள்ஸ் ரைல் வேதபூர்வமாக பிரசங்கமளிப்பதில் வல்லவராக இருந்ததுமட்டுமல்லாமல் எழுதுவதிலும் வல்லவராக இருந்தார். எளிமையான சொற்களைப் பயன்படுத்தி தெளிவாக சத்தியங்களை விளக்குவதில் அவர் தன்காலத்தில் நிகரற்றவராக இருந்தார். புதிய ஏற்பாட்டு சுவிசேஷ நூல்கள் நான்கிற்கும் அவர் விளக்கவுரை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் இருக்கும் அந்நூல்களால் பயனடைகிறவர்கள் அநேகர். மத்தேயு சுவிசேஷ நூலில் காணப்படும் கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்திற்கு ரைல் அளித்துள்ள விளக்கவுரையை இங்கே தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறோம். இவை தமிழில் நூல்களாக மலரப்போகும் காலம் தொலைவிலில்லை. – ஆசிரியர்.

வேதப்பகுதி: மத்தேயு 5:1-12

தலைப்பு: மலைப்பிரசங்கம்

மத்தேயு சுவிசேஷத்தில் இவ்வசனங்களைக் கொண்டு ஆரம்பிக்கின்ற 3 அதிகாரங்களும் வேதத்தை வாசிக்கிற அனைவருக்கும் சிறப்பான போதனையை அளிக்கக்கூடியதாய் இருக்கிறது. இப்பகுதியில் அடங்கியுள்ள போதனை மலைப்பிரசங்கம் என்று அழைக்கப்படுகின்றது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு வார்த்தையும் வளர்ந்து வருகின்ற கிறிஸ்தவர்களுக்கு மிகவும் ஆசீர்வாதமானதாகும். அவ்வார்த்தைகள் பிரதான மேய்ப்பனின் சத்தமாகவும்; சபைக்கு தலையானவருடையதும், பிரதான போதகருடையதுமான குரலாகவும்; எஜமானின் அதிகாரக் குரலாகவும் இருக்கிறது. அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் மனுஷர் பேசுகிற விதமாய் இருக்கவில்லை. அவராலேயே நாம் அனைவரும் நியாயத்தீர்ப்பு நாளிலே நியாயந்தீர்க்கப்படுவோம்.

கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களாய் இருக்க வேண்டும் என்று அறிய வேண்டுமா? கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் குறிக்கோளாகக்கொள்ள வேண்டும் என்று அறிய விரும்புகிறீர்களா? கிறிஸ்துவின் சீஷனாயிருக்கிறவனின் வெளிப்படையான நடத்தையும் உள்ளான பழக்கமும் எப்படியிருக்க வேண்டுமென்று அறிய விரும்புகிறீர்களா? அப்படியானால், ‘மலைப்பிரசங்கத்தை’ நாம் அடிக்கடி படிக்க வேண்டும். அதன் ஒவ்வொரு வாக்கியத்தையும் நாம் அடிக்கடி கவனமாய் ஆராய்ந்து, அதன்படி நடந்து வரவேண்டும். பிரசங்கத்தின் துவக்கத்திலே சொல்லப்பட்டிருக்கிற ‘பாக்கியவான்’ என்று குறிப்பிடப்பட்டவர்களைக் குறித்து நாம் அடிக்கடி சிந்தித்துப் பார்ப்பது அவசியம். பிரதான ஆசாரியனால் ஆசீர்வதிக்கப்பட்ட யாவரும் பாக்கியவான்களே!

கர்த்தராகிய இயேசு “ஆவியில் எளிமையுள்ளவர்களை” பாக்கியவான் என்று அழைக்கிறார். அவர் தாழ்மையான, எளிய மனதுடைய மற்றும் சுயதாழ்ச்சியுடையவர்களைக் குறிப்பிடுகிறார்; கர்த்தருடைய பார்வையில் தங்களுடைய சொந்த பாவநிலையைக் குறித்ததான ஆழமான நம்பிக்கையைக் கொண்டவர்களை அவர் குறிக்கிறார்; மேலும் “அவர்களுடைய பார்வையில் அவர்கள் ஞானிகளோ, ஜாக்கிரதை உள்ளவர்களோ அல்ல” அவர்கள் “ஐசுவரிய சம்பத்துகளினால் நிறைந்தவர்கள் அல்ல,” தங்களுக்கு ‘எதுவும் தேவையில்லை’ என்று அவர்கள் அலப்புவதில்லை; அவர்கள் தங்களை “நிர்பாக்கியமுள்ளவர்களும், பரிதபிக்கப்படத்தக்கவர்களும், தரித்திரரும், குருடரும், நிர்வாணிகளுமாய்” கருதுகிறார்கள். அப்பேர்பட்டவர்களையே பாக்கியவான்கள் என்கிறார் இயேசு. கிறிஸ்தவத்தின் முதல் எழுத்து “தாழ்மை” ஆகும். நாம் கீழானதிலே ஆரம்பித்தால், மேலானவற்றிலே கட்டப்படுவோம். (ஏசாயா 6:21; வெளிப்படுத்தல் 3:17).

துயரப்படுகிறவர்களை “பாக்கியவான்” என்று கர்த்தராகிய இயேசு அழைக்கிறார். தங்களுடைய பாவங்களுக்காக வருந்தி, அனுதினமும் தங்களுடைய குற்றங்களுக்காக விசனப்படுகிறவர்களையே அவர் இங்கு குறிக்கிறார். இந்தப் பூமியில் வேறெதைக் காட்டிலும் தங்களுடைய பாவங்களைக் குறித்து அதிகமாய் விசனப்படுகிறவர்கள் இவர்களே; அதனுடைய நினைவே அவர்களுக்கு விசனத்தை அளிக்கிறது; அதனுடைய பாரம் அவர்களால் சகிக்கக்கூடாதது. இப்படிப்பட்டவர்கள் பாக்கியவான்கள்! “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவியும், நறுங்குண்ட இருதயமுமே.” (சங்கீதம் 51:17). ஒருநாள் அவர்களுடைய கண்ணீர் யாவும் துடைக்கப்பட்டு, “அவர்கள் ஆறுதல் அடைவார்கள்.”

சாந்தகுணமுள்ளவர்களை “பாக்கியவான்” என்று கர்த்தராகிய இயேசு அழைக்கிறார். திருப்தி உள்ள ஆவியை உடையவர்களையும், பொறுமையானவர்களையுமே அவர் இப்படிக் குறிக்கிறார். அவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் குறைவான மரியாதையை மனமுவந்து சகித்துக் கொள்கிறார்கள்; மனக்கசப்பின்றி தீங்கனுபவிப்பவர்களும்; எதிர்க்க விருப்பமற்றவர்களுமாயிருக்கிறார்கள். உவமையில் சொல்லப்பட்ட லாசருவைப் போல, அவர்கள் நற்காரியங்களைப் பெறுவதற்கு காத்திருப்பதில் திருப்தி உள்ளவர்களாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பாக்கியவான்கள்! காலச் சக்கரத்தில், அவர்கள் ஒருபோதும் இழந்து போனவர்கள் அல்ல. அவர்கள் ஒருநாள் “பூமியை அரசாளுவார்கள்” (வெளிப்படுத்தல் 5:10).

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களை “பாக்கியவான்” என்று கர்த்தராகிய இயேசு அழைக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, கர்த்தருடைய சித்தத்திற்கு தங்களை முழுமையாக ஒப்புவிக்க விரும்புகிறவர்களையே அவர் குறிக்கிறார். அவர்கள் பரிசுத்தமாய் இருக்க வாஞ்சிப்பதைப் போல, பணக்காரனாகவோ, ஐசுவரியவானாகவோ அல்லது கல்விமானாகவோ இருக்க விரும்பவில்லை. இப்படிப்பட்ட யாவரும் பாக்கியவான்களே! அவர்கள் ஒருநாள் நிறைவானவர்களாய் இருப்பார்கள். “அவர்கள் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவார்கள்” (சங்கீதம் 17:15).

இரக்கமுள்ளவர்களை “பாக்கியவான்” என்று கர்த்தராகிய இயேசு அழைக்கிறார். பிறருக்காக வருந்துகிறவர்களை அவர் குறிக்கிறார். பாவத்தினாலோ அல்லது கவலையினாலோ துயரப்படுகிறவர்கள் மற்றவர்களுக்காக பரிதபிக்கிறவர்களாயும், அவர்களுடைய துயரங்களைக் குறைக்க அன்பினாலான விருப்பமுடையவர்களாயும், “நற்கிரியைகளைச்” செய்பவர்களாயும், நற்கிரியைகளைச் செய்ய முயற்சிப்பவர்களுமாயும் இருப்பார்கள். (அப்போஸ்தலர் 9:36). இப்பேர்ப்பட்ட யாவரும் பாக்கியவான்களே! இந்த வாழ்க்கையிலும், இனி வரும் வாழ்க்கையிலும் அவர்கள் மிகுதியான பலனை அனுபவிப்பார்கள்.

இருதயத்தில் சுத்தமுள்ளவர்களை “பாக்கியவான்” என்று கர்த்தராகிய இயேசு அழைக்கிறார். வெளிப்புறமான சீர்திருத்தலையல்ல, உள்ளான பரிசுத்தத்தை நாடுகிறவர்களையே அவர் இவ்வாறு குறிக்கிறார். அவர்கள் வெளிப்புறமான சமய வழிபாட்டில் திருப்தியடையாமல், உள்ளான மனுஷனோடும் ஆவியோடும் கர்த்தரைத் தொழுதுகொள்ளவும், குற்றம் நீங்கிய மெய் மனச்சாட்சியை எப்பொழுதும் கொண்டிருக்கவே முயற்சி செய்வார்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் யாவரும் பாக்கியவான்கள். “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1 சாமுவேல் 16:7). ஆவியின் சிந்தை அதிகம் உள்ளவன் எவனோ, அவன் கர்த்தரோடு நிறைவான ஐக்கியம் கொள்வான்.

சமாதானம்பண்ணுகிறவர்களை “பாக்கியவான்” என்று கர்த்தராகிய இயேசு அழைக்கிறார். தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும், வீட்டிலும், நாட்டிலும், பூமியின் மீது சமாதானத்தையும், தருமக்காரியங்களையும் ஸ்தாபிக்க முயற்சிக்கிற யாவரையும் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். “அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய் இருக்கிறது” என்கிற சுவிசேஷ வாக்கினை போதிப்பதின் மூலம் எல்லா மனிதர்களையும் ஒருவருக்கொருவர் நேசிக்கும்படி செய்ய முயற்சிக்கிற யாவரையும் அவர் குறிக்கிறார் (ரோமர் 13:10). இப்படிப்பட்ட யாவரும் பாக்கியவான்களே! தேவகுமாரன் பூமிக்கு முதல்முறை வந்தபோது துவங்கியதும், இரண்டாம் முறை பூமிக்கு அவர் வரும்போது அதை நிறைவடையச் செய்யப்போகிறதுமான அதே மேலான பணியையே இவர்களும் செய்து வருகிறார்கள்.

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்களை “பாக்கியவான்” என்று கர்த்தராகிய இயேசு அழைக்கிறார். மெய் கிறிஸ்தவர்களாய் வாழ முயற்சி செய்ததினாலே அவர்கள் பரிகசிக்கப்பட்டு, கேலி செய்யப்பட்டு, நிந்திக்கப்பட்டு, துஷ்பிரயோகம் பண்ணப்பட்டார்கள். இப்படிப்பட்ட யாவரும் பாக்கியவான்களே! அவர்களுடைய எஜமான் பானம் பண்ணின அதே பாத்திரத்திலே அவர்களும் பானம் பண்ணுகிறார்கள். இப்பொழுது, அவரை இவர்கள் மனுஷர்களுக்கு முன்பாக அறிக்கை செய்கிறார்கள். கடைசி நாளில் அவர் இவர்களை தமது பிதாவுக்கும், தூதர்களுக்கும் முன்பாக அறிக்கை செய்வார். “அவர்களுடைய பலன் பெரிது.”

மலைப் பிரசங்கத்தின் ஆரம்பத்திலே இவ்வாறான எட்டு அடிக்கற்களை அதாவது மூலைக் கற்களை கர்த்தராகிய இயேசு நாட்டுகிறார். நமக்கு முன்பாக, எட்டு சிறப்பான சோதிக்கவல்ல சத்தியங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றையும் சரியான முறையில் அறிந்து, ஞானத்தை நாம் பெற்றுக்கொள்வோமாக.

இவ்வுலகத்தின் அடிப்படைக் கொள்கைகள் எப்படி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளுக்கு முற்றிலுமாய் முரணாயிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதை அலட்சியம் செய்வது வீண்; அவை இரண்டும் சரியான கனஅளவிலே ஒன்றுக்கொன்று எதிராயிருக்கின்றன. கர்த்தராகிய இயேசு போற்றுகின்ற குணாதிசயங்களை இந்த உலகம் இகழ்கிறது; அகந்தை, புத்தியின்மை, குரோதம், உலகப் பற்று, சுயநலம், சம்பிரதாயங்கள் மற்றும் அன்பின்மையால் நிரம்பியிருக்கிற இவ்வுலகை கர்த்தராகிய இயேசு கண்டிருக்கிறார்.

வளர்ந்துவருகிற கிறிஸ்தவர்களின் பழக்கத்திலிருந்து கிறிஸ்துவின் போதனை எவ்வளவு தூரம் மாறுபட்டு நிற்கிறது என்பதை நாம் உணர வேண்டும். ஆலயங்களுக்கும், சிற்றாலயங்களுக்கும், செல்லுகின்ற ஆண்கள் பெண்கள் மத்தியில், இன்றையதினம் நாம் இதுவரை வாசிக்கக்கேட்ட மாதிரியின்படி வாழ முயற்சிப்பவர்களை நாம் எங்கே காண்கிறோம்? ஞானஸ்நானம் பெற்ற அநேக ஜனங்கள் புதிய ஏற்பாடு என்ன சொல்லுகிறது என்பதை அறியாது உணர்வில்லாதவர்களாய் இருப்பதற்கு அநேக காரணங்கள் உண்டு.

எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லா விசுவாசிகளும் எப்படிப் பரிசுத்தமாயும், ஆவியின் சிந்தையை உடையவர்களாயும் இருக்க வேண்டும் என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மலைப் பிரசங்கத்தின் தகுதிக்குக் கீழான எந்தவொரு தகுதியையும் அவர்கள் ஒருபோதும் தங்களுடைய வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொள்ளக்கூடாது. கிறிஸ்தவம் என்பது விசேஷமான நடைமுறை ஒழுக்கமாகும்: அது ஆழமான கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், பரிசுத்த வாழ்வே எப்போதும் அதன் கனிகளாக இருக்க வேண்டும்; இயேசு அழைத்த “பாக்கியவான்கள்” யாரென்பதை நாம் அடிக்கடி சிந்தித்துக்கொண்டால், பரிசுத்த வாழ்வு என்றால் என்ன? என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

வேதப்பகுதி: மத்தேயு 5:13-20

தலைப்பு: மெய் கிறிஸ்தவர்களின் குணாதிசயங்கள், மற்றும் கிறிஸ்துவின் போதனைக்கும் பழைய ஏற்பாட்டிற்கும் இடையிலான தொடர்பு

முதலாவதாக, மெய்க் கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து இவ்வுலகில் பின்பற்றக்கூடிய குணங்களை இந்த வசனங்கள் நமக்கு கற்றுக் கொடுக்கின்றன.

மெய்க் கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தில் “உப்பைப்” போல இருக்க வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு நமக்குக் கூறுகிறார். “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்.” மற்றெந்த பொருளைக் காட்டிலும், உப்பானது தன்னில் தானே தனிச்சுவை உடையது. பிறபொருட்களுடன் அது கலக்கும் போது, கெட்டுப்போவதில் இருந்து அவைகளைப் பாதுகாக்கிறது; தன்னோடு கலக்கின்ற எல்லாவற்றோடும் தன்னுடைய சுவையின் ஒரு பகுதியை பகிர்ந்தளிக்கிறது. தன்னுடைய சாரத்தை அது இழக்காதவரை பிற பொருட்களைப் பாதுகாக்கிறது.

நாம் மெய்க் கிறிஸ்தவர்களா? அப்படியானால், நாம் நம்முடைய பணியையும், கடமைகளையும் இனிக் கவனிப்போம்!

மெய்க் கிறிஸ்தவர்கள் இவ்வுலகிற்கு வெளிச்சத்தை போல் இருக்க வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு நமக்கு கூறுகிறார். “நீங்கள் உலகிற்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள்.” இருளிலிருந்து முழுமையாக வேறுபட்டு இருக்க வேண்டியது வெளிச்சத்தின் தன்மையாகும். ஓர் இருட்டறையில் உள்ள மிகச்சிறிய நெருப்புப் பொறிகூட உடனே தென்பட்டுவிடும். படைக்கப்பட்ட எல்லாப் படைப்பிலும், சிருஷ்டியிலும், வெளிச்சமே மிகப் பயனுள்ளது, பொலிவிக்கிறது; அது வழிநடத்துகிறது; அது உற்சாகமளிக்கிறது. இதுவே முதலில் உண்டாக்கப்பட்டது (ஆதியாகமம் 1:3). இது இல்லாவிடில், உலகமானது இருண்ட சூன்யமாய் இருந்திருக்கும். நாம் மெய்க் கிறிஸ்தவர்களா? அப்படியாயின், நம்முடைய நிலையையும், கடமைப் பொறுப்பையும் உணர்ந்தவர்களாய் நாம் செயல்பட வேண்டும்.

நாம் மெய்க் கிறிஸ்தவர்களாய் இருப்பின், நம்முடைய குணாதிசயம் வித்தியாசமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்க வேண்டும் என்று இவ்விரண்டு உருவகங்களும் நமக்குக் கற்றுத்தருகின்றன. நாம் கிறிஸ்துவினால் அவருடைய பிள்ளைகளாக மாற்றப்பட்டிருந்தால், மற்றவர்களைப் போல நாம் சிந்திக்காமலும், வாழாமலும், வாழ்க்கை முழுவதையும் வீணாக்காமலும் இருக்க இவை உதவும். நாம் கிருபையைப் பெற்றிருக்கிறோமா? அப்படியானால், அது நம்மில் வெளிப்படவேண்டும். நாம் ஆவியை உடையவர்களா? அப்படியிருப்பின், நம்மில் அதன் கனிகள் இருக்க வேண்டும். நாம் மீட்பை அடைந்திருக்கிறோமா? அப்படியாயின், உலக சிந்தனையுடையவர்களுக்கும் நமக்கும் இடையே பழக்க வழக்கங்களிலும், விருப்பங்களிலும், சிந்தனையிலும் வித்தியாசம் காணப்பட வேண்டும். இதிலிருந்து கிறிஸ்தவம் என்பது வெறுமனே ஞானஸ்நானம் பெற்று திருச்சபைக்குப் போவதைவிட மேலானது என்று மிகத் தெளிவாகத் தெரிகிறது. விசுவாசத்தைக் கொண்டிருத்தல், பரிசுத்த வாழ்க்கையில் பயிற்சி எடுத்தல் ஆகிய சிறப்பம்சங்களை “உப்பு” மற்றும் “வெளிச்சம்” ஆகிய வார்த்தைகள் நமக்கு உணர்த்துகின்றன. நாம் மீட்கப்பட்டிருப்போமானால், இவ்வுலகத்தானைப் போலில்லாமல், தனி மனிதனாய் துணிவுடன் செயல்பட வேண்டும்.

இரண்டாவதாக, கிறிஸ்துவின் போதனைக்கும் பழைய ஏற்பாட்டிற்கும் இடையேயுள்ள தொடர்பை இவ்வசனங்கள் நமக்கு போதிக்கின்றன. இன்று வழக்கத்திலிருக்கிற தவறுகளை பற்றியதான மிக முக்கியமான பகுதி இது. இதனை ஒரு விசேஷமான வாக்கியத்தின் மூலம் நமது ஆண்டவர் தெளிவுப்படுத்துகிறார்: “நியாயப்பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்” என்று அவர் கூறுகிறார். இவை குறிப்பிடத்தக்க வார்த்தைகளாகும். யூதர்களின் இயல்பான வியாகுலத்தை திருப்திப்படுத்தும் வகையில் இவை உச்சரிக்கப்பட்டபோது ஆழமான முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது. இவ்வுலகம் இருக்கும்வரை இவ்வார்த்தைகள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளின் சமயங்கள் ஒன்றே என்று இக்கூற்று சாட்சி அளிக்கிறது.

ஒரு நாள் இரட்சகர் ஒருவர் தோன்றுவார் என்று தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்ட வாக்கியங்களை நிறைவேற்றும்படி கர்த்தராகிய இயேசு இவ்வுலகிற்கு வந்தார். மோசேயின் எல்லாப் பலிகளிலும் குறிப்பிடப்பட்ட பாவத்திற்கான சிறந்த பரிகாரபலியாக கர்த்தராகிய இயேசு சம்பிரதாயங்களின் கட்டளைகளை நிறைவேற்றும்படி வந்தார். நாம் ஒருபோதும் கீழ்ப்படியமுடியாத ஒழுக்கச் சட்டத்திற்கு தன்னை முற்றிலுமாக கீழ்ப்படுத்தி பூரணமாகக் கீழ்ப்படிந்தவராய் அதை நிறைவேற்றும்படி வந்தார். நமக்கும் பிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பிளவிற்கான கிரயத்தை நாம் ஒருபோதும் செலுத்தமுடியாதிருக்க, தம்முடைய பரிகார இரத்தத்தினாலே நம்முடைய கிரயத்தை அவர் செலுத்தினார். இவ்வனைத்து முறைகளிலும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை அவர் மேன்மைப்படுத்தி, அதனுடைய முக்கியத்துவத்தை முன்னிருந்ததைப் பார்க்கிலும் அதிக தெளிவாக்கினார். “அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்” (ஏசாயா 42:21).

“நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசிகளைக்” பற்றியதான நமது ஆண்டவரின் வார்த்தைகளில் இருந்து ஆழமான ஞானப்பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். அவற்றை நன்கு ஆராய்ந்து, அவைகளை நமது இருதயங்களிலே வைத்துக் கொள்ளக்கடவோம்.

முதலாவது, எங்காவது போலித்தனத்திற்கு இடமளித்து, பழைய ஏற்பாட்டை இகழ்வதைக் குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். வழக்கத்திலில்லாத, பழமையானதும், பிரயோஜனமற்றதுமான இந்த வேதப்புத்தகத்தை தூக்கி எறிந்துவிடுங்கள் என்று நம்மை ஏவுகிற மக்களுக்கு நாம் ஒருபோதும் செவிகொடுக்கக்கூடாது. பழைய ஏற்பாட்டின் சமயமே கிறிஸ்தவத்தின் வித்தாயிருக்கிறது. பழைய ஏற்பாடு சுவிசேஷத்தின் மொட்டாயும், புதிய ஏற்பாடு சுவிசேஷத்தின் மலர்ந்த மலராயும் இருக்கிறது. பழைய ஏற்பாடு சுவிசேஷத்தின் குறுத்தெலும்பாயும், புதிய ஏற்பாடு சுவிசேஷத்தின் முழுச் செவியாயும் இருக்கிறது. நிழலாட்டமாய் கண்ணாடியின் ஊடாக அநேக காரியங்களை பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் கண்டிருந்தபோதிலும், அவர்களனைவரும் அதே இரட்சகரை விசுவாசித்தும், நம்மைப் போலவே அதே ஆவியினாலே வழிநடத்தப்பட்டும் வந்தார்கள். இவைகள் சாதாரண காரியங்கள் அல்லவே, பழைய ஏற்பாட்டின் மீதான அறிவீனமான அலட்சியம் விசுவாசமின்மையையே ஏற்படுத்தும்.

இரண்டாவது, நியாயப்பிரமாணத்தின் பத்து கட்டளைகளை இகழ்வாகக் கருதுவதைக் குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். சுவிசேஷத்தினால் இது ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறதென்றோ அல்லது கிறிஸ்தவர்கள் இதில் கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என்றோ நாம் ஒரு கணம்கூட நினைத்துவிடக்கூடாது. கிறிஸ்துவின் வருகையானது பத்து கட்டளைகளின் நிலையை ஒரு மயிரளவுகூட மாற்றவில்லை. அப்படியானால், அது உயர்த்தப்பட்டு அதனுடைய அதிகாரம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் (ரோமர் 3:31). நியாயப்பிரமாணத்தின் பத்துகட்டளைகள் சரியானது எது, தவறு எது என்று விளக்கிக் காட்டுகின்ற கர்த்தரின் நித்திய அளவுகோலாய் இருக்கிறது. இதனால், பாவத்தைக் குறித்ததான அறிவையும்; கிறிஸ்துவின் தேவையின் அவசியத்தை ஆவியினாலே மனுஷர்களுக்கு வெளிப்படுத்தி, அவரிடம் அவர்களை வழிநடத்தவும்; தம்முடைய ஜனங்களின் பரிசுத்த வாழ்விற்கும், அவைகளின் ஆளுமையும், வழிநடத்துதலும் அவசியம் என்று கிறிஸ்து குறிப்பிடுகிறார். நியாயப்பிரமாணமானது “மகிமையுள்ள சுவிசேஷத்திற்கு” ஒப்பாய் இருக்கிறது. அது நம்மை மீட்காது, அதனால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். ஆனால், ஒருபோதும் நாம் அதை இகழ்வாகக் கருதக்கூடாது. நியாயப்பிரமாணமானது குறைவாக மதிப்பிடப்பட்டால், அது அறிவீனமான ஊழியத்தின் அடையாளமாகவும், ஆரோக்கியமற்ற சமய நிலைப்பாட்டைக் குறிப்பதாயும் இருக்கும். மெய்க் கிறிஸ்தவன் “தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாய் இருக்கிறான்” (ரோமர் 7:22).

கடைசியாக, சுவிசேஷமானது, தனிப்பட்ட பரிசுத்த வாழ்வின் தரத்தைக் குறைப்பதாயும் மற்றும் யூதனைப் போன்று கிறிஸ்தவனும் தன்னுடைய அனுதின வாழ்வில் கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டும் என்ற எண்ணம் இல்லாததாயும் இருக்கிறது என்ற கருத்தைக் குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்கக்கடவோம். இது நம்மிடையே பொதுவாகக் காணப்படுகின்ற மிகப்பெரிய தவறாகும். காரியம் இப்படியாய் இருக்கும் பட்சத்தில், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான் நீதிமானாக்கப்படும்படிக்கு பழைய ஏற்பாட்டை தனது வழிகாட்டியாகக் கொள்ளாமல் வேறொன்றினாலும் பயனடையான். நாம் அதிக வெளிச்சம் கொண்டிருந்தால், நாம் அதிகமாய் கடவுளை நேசிக்க வேண்டும்; நாம் கிறிஸ்துவுக்குள் நம்முடைய முழுமையான பூரணமான மன்னிப்பைத் தெளிவாகக் கண்டால், நாம் அவருடைய மகிமைக்காக உள்ளத்தின் ஆழத்திலிருந்து உழைக்க வேண்டும். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் செய்ததைக் காட்டிலும் நம்மை மீட்க கிறிஸ்து செய்த விலைக்கிரயம் மிகச் சிறந்தது என்பதை நாம் அறிவோம். கெத்செமனே மற்றும் கல்வாரியில் என்ன நடந்தது என்பதை நாம் வாசித்திருக்கிறோம். மேலும், இன்னொன்று வரக் காத்திருப்பதுபோல அவர்கள் அதைத் தெளிவற்ற மங்கலான நிலையில் கண்டார்கள். நாம் ஒருபோதும் நம்முடைய கடமைப்பொறுப்பை மறந்துவிடக்கூடாது. தனிப்பட்ட பரிசுத்தவாழ்வின் குறைந்த தரத்திலே திருப்தியுள்ளவனாய் காணப்படும் கிறிஸ்தவன் கற்றுக்கொள்ள வேண்டிய அநேகக் காரியங்கள் இங்கே உண்டு.

வேதப்பகுதி: மத்தேயு 5:21-37

தலைப்பு: நியாயப்பிரமாணத்தின் ஆத்மீக இயல்பு மூன்று உதாரணங்களினால் மெய்ப்பிக்கப்படுகிறது.

வேதாகமத்தின் அனைத்து வாசகர்களின் நெருங்கிய கவனத்தை இவ்வசனங்கள் ஈர்க்கின்றன. வேதத்தில் உள்ள கொள்கைகளைப் சரியாகப் புரிந்துகொள்ளுதல் கிறிஸ்தவத்தின் வேராயிருக்கிறது. “நான் நியாயப்பிரமாணத்தை அழிக்க வரவில்லை, நிறைவேற்றவே வந்தேன்” என்கிற தம்முடைய வார்த்தைகளை கர்த்தராகிய இயேசு முழுமையாக விளக்குகிறார். அவருடைய சுவிசேஷமானது நியாயப்பிரமாணத்தை மிகைப்படுத்தியும், அதினுடைய அதிகாரத்தை உயர்த்தியும் காட்டுகிறது என்று அவர் நமக்குப் போதிக்கிறார். அவரால் விளக்கமளிக்கப்பட்ட நியாயப்பிரமாணமானது யூதர்கள் எண்ணியதற்கும் மேலான ஆத்மீக மற்றும் இருதயத்தேடலின் விதியாகும் (அது இருதயத்தை ஆராய்ந்துப் பார்க்கின்ற விதியாய் இருக்கிறது). பத்துக் கட்டளைகளிலிருந்து மூன்று கட்டளைகளை உதாரணங்களாக தெரிவுசெய்ததன் மூலம் தமது கருத்தை அவர் மெய்ப்பித்தார்.

ஆறாவது கட்டளையை அவர் விளக்கித் தெளிவுபடுத்துகிறார். ஒருவரைக் கொலை செய்யாதவரை கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை நாம் சரியாகத்தான் பின்பற்றுகிறோம் என்று அன்று அநேகர் எண்ணிக் கொண்டிருந்தார்கள். இதைக் காட்டிலும் அதனுடைய கோரிக்கைகள் ஆழமானது என்று கர்த்தராகிய இயேசு காண்பிக்கிறார். எல்லாவிதமான கோபம் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைகளைக் காரணமின்றிப் பயன்படுத்துவதை இந்தக் கட்டளை கடிந்துகொள்கிறது என்பதை மனதில் குறித்துக்கொள்ள வேண்டும். நாம் மற்றவர்களுக்கு சொந்தமானதை எடுப்பதில் முற்றிலுமாக குற்றம் அற்றவர்களாய் இருப்பினும், நாம் ஆறாம் கட்டளையை உடைப்போமானால் குற்றத்திற்குள்ளாவோம்.

ஏழாவது கட்டளையை அவர் விளக்குகிறார். நம்முடைய நடைமுறை வாழ்வில் விபச்சாரம் செய்யாதவரை அநேர் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின் இந்தப்பகுதியைக் கைக்கொள்வதாகக் கருதுகிறார்கள். நம்முடைய வெளிப்புறமான நடத்தை ஒழுக்கமாயும், சரியாயும் இருந்தாலுங்கூட நம்முடைய சிந்தனைகளினாலும், இருதயங்களினாலும் மற்றும் கற்பனைகளினாலும் இந்தக் கட்டளையை நம்மால் மீற இயலும் என்று கர்த்தராகிய இயேசு போதிக்கிறார். நம்முடைய கர்த்தரின் செயல்களுக்கு அப்பாற்பட்ட பார்வைக்கூட பாவம் விளைவிப்பதே. இச்சையான கடைக்கண் பார்வைகூட பாவமாகும்.

அவர் மூன்றாம் கட்டளையைப் பின்வருமாறு விளக்குகிறார். சத்தியப் பிரமாணங்களை நிறைவேற்றியும் பொய்யாணை இடாமலும் இருக்கும் வரை அநேகர் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின் இந்த பகுதியைக் கைக்கொள்வதாக கற்பனை செய்கிறார்கள். வீணான மற்றும் அற்பமான ஆணைகளெல்லாவற்றையும் கர்த்தராகிய இயேசு விலக்குகிறார் (தடை செய்கிறார்). கர்த்தருடைய நாமத்தை பயன்படுத்தாதபோதும், அவருடைய படைப்பின் பெயரால் ஆணையிட்டாலோ அல்லது மிகச் சிறப்பான தருணங்களைத் தவிர மற்ற சூழலில் கர்த்தருடைய பெயரை சாட்சியாக வைத்து ஆணை இடுவது மிகப்பெரிய பாவமாகும் என்கிறார்.

இவை அனைத்தும் நமக்கு நல்ல படிப்பினை அளிக்கின்றன. இவை மிகச் சிறப்பான பிரதிபலிப்புகளை நம் மனதில் எழுப்ப வேண்டும்: நம் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கும்படி இப்போதனை அழைக்கிறது. மேலும், இவை நமக்கு போதிப்பதென்ன? கர்த்தருடைய அளவுக்கடந்த பரிசுத்தத்தை இது நமக்கு போதிக்கின்றது. மனித கண்கள் காணாத குறைகளையும், குற்றங்களையும் காண்கிறவரும், மகா பரிசுத்தரும், பூரண சற்குணராயும் அவர் இருக்கிறார். நம்முடைய உள்நோக்கங்களை அவர் அறிவார்; அவர் நம்முடைய வார்த்தைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களைக் கவனிக்கிறார்: அவர் “உள்ளத்தில் உண்மை இருக்க விரும்புகிறார்” (சங்கீதம் 51:6). கர்த்தருடைய குணாதிசயத்தின் இப்பகுதியை அதிகமாய் அறிந்துகொள்வது நமக்கு நலமாய் இருக்கும். மனிதர்கள் கர்த்தரை “இருக்கிறவராகக்” கண்டுகொண்டால் பெருமை, சுயநீதி மற்றும் கவனமின்மைக்கு அங்கு இடமிருக்காது (1 யோவான் 3:2).

ஆத்மீகக் காரியங்களில் மனிதனுக்கு இருக்கும் அதிகப்படியான அறியாமையை இப்பகுதி நமக்குப் போதிக்கிறது. அறிவற்ற யூதர்களைப் பார்க்கிலும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின் குறிக்கோள்களை அறியாத பயபக்திக்குரிய ஆயிரமாயிரம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் பத்துக் கட்டளைகளை நன்கு அறிவார்கள்; “இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்” என்று கூறிய ஐசுவரிய வாலிபனைப் போல அவர்களும் கற்பனைசெய்கிறார்கள் (மத்தேயு 16:20); வெளிப்புறமான செயல்களினாலும் கிரியைகளினாலுமே அல்லாமல் வேறொன்றினாலும் ஆறாவது ஏழாவது கட்டளைகளை உடைக்க (மீற) வாய்ப்பில்லை என்று அவர்கள் எண்ணினார்கள். எனவே, அவர்கள் சிறிய மதக்காரியங்களைக் கைக்கொள்ளுவதில் பூரண திருப்தியுள்ளவர்களாயும், தங்களில் தாங்களே திருப்தியுள்ள வாழ்க்கையையும் வாழ்ந்தார்கள். கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை மெய்யாய் அறிந்துகொண்ட யாவரும் பாக்கியவான்களே!

நம்மை மீட்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாவபரிகார இரத்தம் நமக்கு அதிகப்படியான தேவை என்பதை இப்பகுதி நமக்குப் போதிக்கிறது. இவ்வுலகத்திலுள்ள எந்த மனிதனாவது, மனுஷியாவது இப்பேர்பட்ட கடவுளுக்கு முன்பாக நின்று “நான் குற்றமற்றவன்” என்று கூற முடியுமா? தன் விருப்பப்படியே வளர்ந்து, கர்த்தருடைய கட்டளைகளை ஆயிரத்தில் ஒருமுறை கூட மீறாத ஒருவன் உண்டோ? “அந்தப்படியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” (ரோமர் 3:10). வல்லமையுள்ள மத்தியஸ்தர் நமக்கிராவிட்டால் நாம் ஒவ்வொருவரும் நியாயத்தீர்ப்பு நாளான்று தண்டிக்கப்பட்டிருப்போம். நியாயப்பிரமாணத்தின் உண்மையான அர்த்தத்தைக் குறித்ததான அறியாமையே இன்று அநேகர் சுவிசேஷத்தை மதிக்காமலும், கிறிஸ்தவத்தின்மீது சுயதிருப்தி உள்ளவர்களாயும் இருப்பதற்குக் காரணம். கர்த்தருடைய பத்துக் கட்டளைகளில் உள்ள பரிசுத்தத்தையும், கண்டிப்பையும் அவர்கள் பார்க்கவில்லை அப்படி பார்த்திருந்தால், அவர்கள் கிறிஸ்துவுக்குள் மீட்கப்படும்வரை அவர்களால் ஓய்ந்திருக்க முடியாது.

இறுதியாக, எல்லா பாவத் தருணங்களையும் தவிர்ப்பதின் எல்லையற்ற முக்கியத்துவத்தை இப்பகுதி நமக்குப் போதிக்கிறது. நாம் உண்மையாகவே பரிசுத்தராய் இருக்க விரும்பினால், நாம் “நம்முடைய நாவுகளினால் பாவஞ்செய்யாதபடிக்கு, நம்முடைய வழிகளைக் காத்து நடக்க வேண்டும்” (சங்கீதம் 39:1). நாம் சண்டைகளையும், அபிப்பிராய பேதங்களையும் அனுசரித்து நடக்க வேண்டும். இல்லையெனில் அவை மிகப்பெரிய விபரீதங்களுக்கு நம்மை வழிநடத்தும். “சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறது போலிருக்கும்” (நீதிமொழிகள் 17:14). நம்முடைய சரீரத்தை சிலுவையிலறையவும், சரீர அங்கங்களை நிக்கிரகம் செய்யவும் நாம் உழைக்க வேண்டும். மேலும் நாம் பாவஞ்செய்வதைக் காட்டிலும் எந்தவிதமான பலியையோ அல்லது சரீர அசௌகரியங்களையோ ஏற்றுக் கொள்ளலாம்: நம்முடைய உதடுகளை கடிவாளமிட்டு காத்துக்கொண்டு, நம்முடைய வார்த்தைகள் மீது அதிக கவனமாய் இருக்க வேண்டும். நாம் இப்படி செய்வதினால், மனிதர்கள் நம்மை “துல்லியமானவர்கள்” என்று அழைப்பார்கள்; அல்லது, அவர்கள் விரும்பினால், நம்மை “அதிக கண்டிப்பானவர்கள்” என்றும் அழைப்பர். நாம் அசைக்கப்பட வேண்டியதில்லை. நாம் நம்முடைய ஆண்டவராகிய கிறிஸ்து இயேசு கூறியதையே செய்கிறோம், எனினும், இப்படி நடப்பதைக்குறித்து நாம் வெட்கப்பட வேண்டியதில்லை.

வேதப்பகுதி: மத்தேயு 5:38-48

தலைப்பு: கிறிஸ்தவ அன்பின் கட்டளையின் மாதிரி

ஒருவர் மற்றொருவரோடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற நடத்தைக்கான, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விதிகள் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவன் தன் சக மனிதர்களை அறிந்து செயல்பட வேண்டும் என்று விரும்பினால், அவன் இவ்வசனங்களை அடிக்கடி தியானிக்க வேண்டும். இவைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. கிறிஸ்தவத்தின் எதிரிகள் கூட இவற்றைப் பாராட்டி இருக்கின்றனர். இவை என்ன சொல்லுகின்றன என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். மன்னிக்க முடியாத, பழிவாங்கும் மனமுள்ள ஆவியைபோன்ற எல்லாவற்றையும் கர்த்தராகிய இயேசு புறக்கணிக்கிறார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்.” தீங்கிற்கு சினங்கொள்ளுகிற விருப்பம், பொல்லாங்கு செய்ய விரைந்து செல்லுதல், சண்டை பிடிக்கிறதும் சச்சரவு செய்கிறதுமான மனநிலை, நம்முடைய உரிமைகளை உறுதிசெய்வதிலுள்ள ஆர்வம் இவை அனைத்தும் கிறிஸ்துவின் சிந்தைக்கு முரணானது. இப்படிப்பட்ட மனநிலைகளில் இவ்வுலகம் ஒரு தீங்கையும் காணாது; ஆனாலும், அவைகள் கிறிஸ்தவனின் குணங்களாகாது. நம்முடைய எஜமான் கூறுகிறார், “தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்.”

பரந்த அன்பு மற்றும் ஈகை மனத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆண்டவராகிய இயேசு நமக்குக் கட்டளையிடுகிறார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்.” நாம் எல்லா விரோதங்களையும் விட்டுவிட வேண்டும்; நாம் தீமைக்கு நன்மை செய்யவும், சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டும். அதுவுமல்லாமல், நாம் வார்த்தையில் மட்டும் அன்பாயிராமல், செயலில் அன்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்; நம்மை நாமே வெறுத்து, இரக்கமும், நற்பண்புமுடையவர்களாய் இருக்க வேண்டுமாயின், சோதனைகளை சகிக்கக்கடவோம்: “ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.” நாம் மற்றொருவனைக் காயப்படுத்தி, தீங்கு விளைவிக்காமல் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றிலும் நாம் சுயநலமற்றவர்களாய் இருக்க வேண்டும். மற்றவர்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? என்ற சிந்தை நமக்கிராமல், கிறிஸ்து நான் என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறார்? என்ற சிந்தையே நம்மில் இருக்கக்கடவது.

முதல் பார்வையில், இப்படிப்பட்ட நடத்தையின் நிலையானது மிக உன்னதமான நிலையில் காணப்படும். ஆனால் நாம் ஒருபோதும் கீழான ஒன்றை குறிக்கோளாக வைப்பதில் திருப்தி அடையக்கூடாது. இப்பகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும்படி நமது ஆண்டவர் தந்துள்ள இரண்டு மகத்தான வாதங்களை நாம் கவனிப்போம். அவை ஆழமானதும், கவனத்தை ஈர்க்கக் கூடியதுமானவை.

முதலாவது, இங்கே பரிந்துரைசெய்யப்பட்ட ஆவியையும், குணங்களையும் பெற முயற்சி செய்யாவிட்டால், நாம் இன்னும் தேவனுடைய பிள்ளைகள் அல்ல. “பரலோகத்திலிருக்கிற நம் பிதா” என்ன செய்கிறார்? அவர் எல்லார்மேலும் இரக்கமுள்ளவராய் இருக்கிறார்: அவர் நல்லோர் மீதும் தீயோர்மீதும் மழையை வருவிக்கப்பண்ணுகிறார்; அவர் “தமது சூரியனை” பாகுபாடின்றி அனைவர்மேலும் உதிக்கச் செய்கிறார். குழந்தையும் தன் தகப்பனைப் போன்றே இருக்க வேண்டும்: நாம் ஒருவரிடமும் இரக்கமும், கருணையும் காண்பிக்காத பட்சத்தில் நம்முடைய பரலோக பிதாவுக்கும் நமக்குமான ஒற்றுமை எங்கே இருக்கிறது? நாம் அன்பில் குறைவுள்ளவராய் இருந்தால், நாம் புது சிருஷ்டிகளாய் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரம் தான் எங்கே? இவை அனைத்தும் தேவையாய் இருக்கிறது. நாம் “மறுபடியும் பிறக்க வேண்டியது” அவசியம் (யோவான் 3:7).

இரண்டாவதாக, இப்பகுதி இங்கே பரிந்துரைசெய்யப்பட்ட ஆவியையும், குணங்களையும் பெற முயற்சி செய்யாவிட்டால், நாம் இன்னமும் உலகத்தான் என்று வெளிப்படுத்துகிறது. “மற்றவர்களைக் காட்டிலும் நீ எப்படி விசேஷித்தவன்? என்பதே நமது ஆண்டவரின் பரிவான கேள்வி. மதமற்ற நாஸ்திகர்களால் கூட “தன்னை நேசிப்பவர்களை நேசிக்க முடியும்.” பாசமும் விருப்பமும் அவர்களை அசைக்கும்போது, அவர்களால் இரக்கங்காட்டி நன்மை செய்ய முடியும். ஆனால், ஒரு கிறிஸ்தவன் இவைகளைப் பார்க்கிலும் மேலான கொள்கைகளினால் ஆட்கொள்ளப்பட வேண்டும். நாம் இந்தச் சோதனையினின்று பின்வாங்குகிறோமா? நமது எதிராளிகளுக்கு நன்மை செய்வது நமக்கு இயலாத காரியமாய்த் தோன்றுகிறதா? காரியம் இப்படியாய் இருக்குமாயின், நாம் இன்னும் மனமாற்றமடைய வேண்டியது நிச்சயம் என்று அறிவோமாக. நாம் இன்னும் “தேவனுடைய ஆவியைப் பெறவில்லை” (1 கொரிந்தியர் 2:12).

இவை அனைத்தும் நம்மை மனமாற்றப் பிரதிபலிப்புகளுக்கு அழைக்கின்றன. வேதத்தின் பகுதிகளே நம்மில் தாழ்மையான எண்ணங்கள் உருவாகும்படி அமைந்துள்ளன. ஒரு கிறிஸ்தவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அருமையான விளக்கப்படம் நமக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. வேதனையான உணர்ச்சிகளின்றி அவற்றை நாம் காணமுடியாது: ஒரு கிறிஸ்தவன் இப்போது இருக்கின்ற நிலையில் இருந்து முற்றிலுமாய் மாறுபட்டவன் என்பதை நாம் அறிய வேண்டும். இரண்டு பொதுவான பாடங்களை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்வோம்.

முதலாவது, மெய்கிறிஸ்தவர்களால் இந்த பத்து வசனங்களில் உள்ள ஆவியைத் தொடர்ச்சியாக நினைவுகூர முயன்றால், அவர்கள் இப்போது செய்வதைவிட பலமடங்கு கிறிஸ்தவத்தை உலகம் அறியச் செய்வார்கள். இப்பகுதியில் உள்ள குறைந்தபட்ச வார்த்தைகள் அற்பமானதும் மேலான மதிப்பற்றதுமாய் இருக்கின்றன என்ற கருத்து நம்மில் தோன்ற நாம் அனுமதிக்கக் கூடாது. அவைகள் அப்படிப்பட்டவைகள் அல்ல.

இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள ஆவிக்கான கவனமே நம் மதத்தை அழகுள்ளதாய் மாற்றுகிறது: இதில் அடங்கியுள்ள காரியங்களை உதாசீனப்படுத்தும்போதே நம் மதம் உருக்குலைகிறது. தவறாத உபசரனை, அன்பு, இரக்கம், பிறரிடம் காட்டும் பரிவு ஆகியவை கர்த்தருடைய பிள்ளைகள் கொண்டிருக்கக்கூடிய மேலான ஆபரணங்களில் சிலவாகும். உலகமானது இக்கொள்கைகளைப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் இவைகளைப் புரிந்துகொள்ளும். முரட்டாட்டமான, கொடூரமான, கபடான மற்றும் அநாகரீகமான மதம் ஒன்றும் இங்கு இல்லை. பரிசுத்தத்தின் சிறிய கடமைகளையும், மேலான கடமைகளையும் செய்வதிலேயே நடைமுறை கிறிஸ்தவத்தின் பூரணத்துவம் அடங்கியுள்ளது.

இரண்டாவது, இந்தப் பத்து வசனங்களிலுள்ள ஆவியின் மேலான ஆளுகையும், வல்லமையும் இவ்வுலகத்தில் இருந்திருந்தால், இப்போதிருப்பதைக் காட்டிலும் எவ்வளவு அதிக சந்தோஷமாக இந்த உலகம் இருந்திருக்கும். மனித இனத்தை சந்திக்கின்ற பாதிப் பிரச்சனைகளுக்கு காரணம் சண்டைகள், விரோதங்கள், தன்னலம் மற்றும் அன்பின்மையே என்பதை யார் அறியாமல் இருக்கிறார்கள்? நமது ஆண்டவரால் இங்கு பரிந்துரைக்கப்பட்ட கிறிஸ்தவ அன்பைப் பரப்புவதை அல்லாமல் வேறொன்றினாலும் இவ்வுலகில் சந்தோஷத்தைப் பெருகச்செய்ய முடியாது என்பதைக் கவனிக்க யார் தவறுவார்? நாம் இதை நினைவில் கொள்வது அவசியம். மனிதர்களை சந்தோஷமற்றவர்களாக மாற்றும் போக்கினை மெய்யான மதம் கொண்டுள்ளது என்று கற்பனை செய்கிறவர்கள் பெரிய தவறிழைக்கிறார்கள்: இந்த ஆவியை அல்லாத எந்த சமயமும் இப்படிப்பட்ட காரியங்களையே செய்யும், ஆனால், இந்த ஆவியையுடைய மதம் அப்படிப்பட்டதல்ல. மெய் மதம் நேருக்கு முரணான விளைவைக் கொண்டுள்ளது: இது மனுஷர்களுக்கு மத்தியில் சமாதானம், அன்பு, இரக்கம் மற்றும் நற்சுவிசேஷத்தை விருத்தியடையச் செய்கிறது. பரிசுத்த ஆவியின் போதனைகளுக்குக் கீழாக அதிகமான ஜனங்கள் கொண்டுவரப்பட்டால், அவர்கள் அதிகமதிகமாய் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்து, அதிக சந்தோஷத்துடன் வாழ்வார்கள்.

வேதப்பகுதி: மத்தேயு 6:1-8

தலைப்பு: தருமஞ்செய்வதின் பகட்டும், தடைசெய்யப்பட்ட ஜெபமும்

மலைப்பிரசங்கத்தின் இப்பகுதியில் இருந்து இரண்டு காரியங்களை கர்த்தராகிய இயேசு நமக்குப் போதிக்கிறார்: ஒன்று, தர்மம் அளித்தல், ‘மற்றொன்று, ஜெபம். இவ்விரண்டு காரியங்களுக்கும் யூதர்கள் அதிக முக்கியத்துவம் அளித்தனர். எல்லா பக்தியுள்ள கிறிஸ்தவர்களின் கவனத்தையும் இவ்விரண்டு காரியங்களும் அதிகமாய் ஈர்க்கின்றன.

தன்னுடைய சீஷர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிற யாவரும் தருமம் செய்வார்கள் என்பதாக நமது ஆண்டவர் எடுத்துக்கொண்டதை நாம் கவனிப்போம். பிறருடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும்பொருட்டு தங்கள் திராணிக்குத்தக்கதாய் அவர்களுக்கு அளிப்பதே பிரதான கடமையாக அவர்கள் எண்ணுவார்கள் என்று நமது ஆண்டவர் கருதுகிறார். அந்தக் கடமையை எவ்விதத்தில் செயலாற்றவேண்டும் என்கிற கருத்தை மட்டும் அவர் கையாளுகிறார். இது மிக முக்கியமான பாடமாகும்: பணம் கொடுக்கின்ற விஷயத்தில் அநேகரிடம் காணப்படும் சுயநலமான கஞ்சத்தனத்தை இது கண்டிக்கிறது. “தங்களுக்கு நேராய் ஐசுவரியவான்களாய்க் கர்த்தருக்கு நேராய் தரித்திரராய்” இருக்கிற ஜனங்கள் எத்தனை பேர்! மனிதர்களுடைய சரீரங்களுக்கும் ஆத்துமாக்களுக்கும் நன்மை உண்டாகும்படி ஒரு பணத்தையாகிலும் ஒருபோதும் தராத ஜனங்கள் தான் எத்தனை பேர்! இப்படிபட்ட மனநிலையை உடையவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைப்பதற்கு ஏதேனும் உரிமை உண்டா? அது சந்தேகத்திற்குரியதே, கொடுக்கின்ற இரட்சகருக்குக் கொடுக்கின்ற சீஷர்களே இருக்க வேண்டும். தம்முடைய சீஷர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்கிற யாவரும் ஜெபிப்பார்கள் என்பதாக நமது ஆண்டவர் எடுத்துக்கொண்டதை நாம் கவனிப்போம். இதையும் அவர் முக்கியமான காரியமாகக் கருதுகிறார்: சிறந்த முறையான ஜெபத்திற்கான வழிமுறைகளை மட்டுமே அவர் கொடுக்கிறார். நாம் தொடர்ச்சியாக நினைவுகூர வேண்டிய காரியங்களில் இதுவும் ஒன்று. ஜெபமற்ற ஜனங்கள் உண்மைக் கிறிஸ்தவர்கள் அல்ல என்று இப்பகுதி மிகத்தெளிவாகப் போதிக்கிறது.

ஞாயிறுதோறும் சபைகளில் ஏறெடுக்கப்படும் ஜெபங்களில் பங்கெடுப்பதும், வாரநாட்களில் குடும்ப ஜெபங்களில் பங்குகொள்வதும் மட்டும் போதாது: தனிப்பட்ட ஜெபங்களும் இருக்க வேண்டும். இந்த ஜெபம் இல்லாவிட்டால். நாம் கிறிஸ்துவினுடைய சபைக்கு புறம்பான அங்கத்தவர்களாய் இருப்போமே அல்லாமல், கிறிஸ்துவுக்கு உயிருள்ள அங்கத்தவர்களாய் இருக்க முடியாது.

எனினும், தருமஞ்செய்தல் மற்றும் ஜெபத்தைப் பற்றியதான நமது வழிகாட்டுதலுக்கான விதிமுறைகள் என்ன? அவைகள் சுருக்கமானவையும், எளிமையானவையுமாகும். இருந்தபோதும், அவைகள் சிந்திப்பதற்கான அநேக கருத்துக்களை உள்ளடக்கியுள்ளன.

கொடுப்பதில், பகட்டான காரியங்கள் யாவும் அருவருக்கப்படத்தக்கதும், தவிர்க்கப்பட வேண்டியதுமாய் இருக்கிறது. “ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது . . . உனக்கு முன்பாகத் தாரை துவியாதே.” நாம் எவ்வளவு தாராளரும், ஈகை குணம் கொண்டவர்கள் என்றும் ஒவ்வொருவரும் காணும்படியாகவும், நம்முடைய சக மனிதர்களின் போற்றுதலைப் பெற விரும்புகிறவர்களாகவும் நாம் தர்மஞ்செய்யக் கூடாது. விளம்பரஞ் செய்கின்ற காரியங்கள் யாவற்றையும் நாம் புறக்கணிக்க வேண்டும். நாம் அமைதலோடு கொடுத்து, எந்தவிதமான சத்தமுமின்றி தர்மஞ்செய்யக் கடவோம்; “நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாய் இருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக் கடவது,” என்ற பழஞ்சொல்லிற்கேற்ற ஆவியைப் பெற நாம் வாஞ்சிப்போம்.

ஜெபிப்பதில், நாம் நாடவேண்டிய முதன்மையான காரியம் கடவுளோடு தனித்திருப்பதே ஆகும். “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து.” கடவுளைத் தவிர வேறொருவரும் நம்மைப் பார்க்கவில்லை என்ற உணர்வோடு நாம் நம்முடைய இருதயங்களை அவருக்கு முன்பாக ஊற்றக்கூடியதும், எந்த மனிதக் கண்களினாலும் நாம் காணப்படாதிருக்கிற இடத்தை நாம் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த விதியை கடைப்பிடிக்க அநேகர் வெகு சிரமப்படுவார்கள்; தரித்திரனும், வேலைக்காரனும் தனிமையாய் இருப்பது இயலாது என்று எண்ணுவார்கள்; ஆயினும் இவ்விதிக்கு கீழ்ப்படியத்தக்க சிறந்த முயற்சிகளை நாம் எடுக்கவேண்டும். இப்படிப்பட்ட காரியங்கள் அவசியமே. அநேக வேளைகளில் இதுவே கண்டுபிடிப்புகளின் தாயாய் இருக்கிறது. ஒருவன், தான் கடவுளோடு தனித்து இருக்கும்படியான இடத்தைக் கண்டுபிடிக்க மெய்யான ஆவல் கொண்டிருந்தால், நிச்சயமாக அதற்கான வழியை அவன் கண்டுகொள்வான்.

கொடுப்பதோ அல்லது ஜெபிப்பதோ, எதுவாக இருந்தாலும் நம்முடைய எல்லாக் கடமைகளிலும், நாம் மெய்யான இருதயத்தேடலோடும், எல்லாம் அறிகின்ற கடவுளோடுங்கூட அவற்றை கடைபிடிக்கவேண்டும் என்ற சிந்தையே நம் மனதில் இருக்க வேண்டும். “நமது தேவன் அந்தரங்கத்தில் பார்க்கிறவர்.” கடமைக்காகவும், போலியாகவும் அல்லது உடன்பாடற்ற வெறும் சரீர சேவையாகவும் இருக்கின்றதனைத்தும் கர்த்தருடைய பார்வையில் அருவருப்பானதும், பயனற்றதுமாய் இருக்கிறது. நாம் கொடுக்கின்ற பணத்தின் நிறையையோ அல்லது நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளின் அளவையோ அவர் எண்ணுகிறதில்லை. எல்லாவற்றையும் காண்கின்ற அவருடைய கண்ணானது நம்முடைய உள் நோக்கங்களையும், நம்முடைய இருதயங்களின் நிலையை மட்டுமே பார்க்கிறது.

இந்தக் காரியங்கள் யாவையும் நாம் நினைவில் வைப்போம். இங்கே இருக்கிற கற்பாறையின் மீது அநேகர் தொடர்ச்சியான ஆத்மீக கப்பற் சேதத்தை விளைவிக்கிறார்கள். சில “மதச்சடங்குகளை” நிறைவேற்றுவதின் மூலம் தங்களுடைய ஆத்துமாக்களில் எல்லாம் சரியாய் உள்ளது என்று தங்களைத் தாங்களே முகஸ்துதி செய்கிறார்கள்: நம்முடைய கொடையின் நிறையை கர்த்தர் பாராமல், நம்முடைய சேவை மனப்பான்மையையே அவர் பார்க்கிறார் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். ஒரு சில வார்த்தைகளை முறையாக மறுபடியும் மறுபடியும் கூறுவதினாலோ அல்லது ஒரு தர்மச் சத்திரத்துக்கு ஒரு தொகையை சுயநீதியின் கூலியாகக் கொடுப்பதினாலோ அவருடைய இரக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அநேகர் எண்ணுகிறார்கள். நம்முடைய இருதயங்கள் எங்கே? நாம் கொடுக்கும்போதோ அல்லது ஜெபிக்கும்போதோ எல்லாவற்றையும் மனுஷருக்கென்று இல்லாமல், கர்த்தருக்கென்று செய்கிறோமா? “நாம் கர்த்தருடைய பார்வையை அறிந்திருக்கிறோமா?” “அந்தரங்கத்தில் பார்க்கிறவரும்”, “செயல்கள் யாவும் அவரால் மதிப்பிடப்படுகிற” கர்த்தரின் தயையைப் பெற நாம் முழுமையாக வாஞ்சிக்கிறோமா? நாம் உண்மையுள்ளவர்களா? இவ்வகைக் கேள்விகளினால் நாம் நம்முடைய ஆத்துமாக்களை அடிக்கடி சோதிக்க வேண்டும்.

வேதப்பகுதி: மத்தேயு 6:9-15

தலைப்பு: கர்த்தருடைய ஜெபமும், ஒருவரை ஒருவர் மன்னிக்கின்ற கடமையும்

இவ்வசனங்கள் எண்ணிக்கையில் குறைவாயும், எளிதில் வாசிக்கக் கூடியதாயும் இருந்தாலும், இவை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. கர்த்தராகிய இயேசு தமது ஜனங்களுக்கு அளித்த ஆச்சரியமான ஜெப மாதிரியை இவ்வசனங்கள் உள்ளடக்கி உள்ளது. இதை பொதுவாக “கர்த்தருடைய ஜெபம்” என்றழைப்பர்.

இப்பகுதியைப் போன்று வேறெந்த வேதப்பகுதியும் அவ்வளவு பிரபல்யமானதல்ல. கிறிஸ்தவம் எங்கெல்லாம் காணப்படுகிறதோ, அங்கெல்லாம் இவ்வார்த்தைகள் நன்கு பழக்கமானவை. ஒருபோதும் வேதத்தைக் கண்டிராத, மெய் சுவிசேஷத்தைக் கேட்டிராத பல்லாயிரக் கணக்கான ஜனங்களுக்கு “பரமண்டலங்களிருக்கிற எங்கள் பிதாவே” என்கிற இந்த ஜெபம் மிகவும் பரிச்சயமானதாய் இருக்கிறது. வார்த்தைகளில் பரிச்சயமான இந்த ஜெபமானது அதன் மெய்க் கருத்திலும் பரிச்சயமாய் இருந்தால் இவ்வுலகத்திற்கு அதிக சந்தோஷம் உண்டாயிருக்கும்.

இப்பகுதியைப் போல முழுமையும், எளிமையுமான வேதப்பகுதி வேறொன்றும் இல்லை. நாம் சிறு குழந்தைகளாய் இருந்தபோது கடவுளிடம் ஏறெடுக்கும்படி கற்றுக்கொண்ட முதல் ஜெபம் இது. இதனுடைய தாழ்மை இங்கே உள்ளது. மிகவும் முதிர்ச்சி அடைந்த பரிசுத்தவான் வாஞ்சிக்கின்ற வித்தை இது கொண்டுள்ளது. அதனுடைய முழுமை இங்கே இருக்கிறது. நாம் ஒவ்வொரு வார்த்தையையும் அதிகமாய் ஆராய்ந்தால், “இது கர்த்தருடைய ஜெபம்” என்று நாம் உணர வல்ல அதிகமான காரியங்களை இது கொண்டுள்ளது.

கர்த்தருடைய ஜெபமானது பத்துப் பகுதிகளை அல்லது வாக்கியங்களைக் கொண்டு அமைந்துள்ளது. நாம் விண்ணப்பிக்கின்ற நபரிடம் ஒரு உறுதிமொழியை ஏற்படுத்துகிறோம். அவருடைய நாமம், அவருடைய ராஜ்யம் மற்றும் அவருடைய சித்தத்தை மதிக்கின்ற மூன்று விண்ணப்பங்கள் இங்கே இருக்கின்றன; மேலும் நமது அன்றாடத் தேவைகள், நமது பாவங்கள் அல்லது பலவீனங்கள் மற்றும் நமது ஆபத்துக்களைக் குறிக்கின்ற நான்கு ஜெபங்களும் இருக்கின்றன. பிறரிடம் நமது உணர்வை பகிரங்கமாக கூறுகின்ற ஒரு விண்ணப்பத்தையும், ஒரு முடிவான புகழுரையையும் கொண்டது இந்த மாதிரி ஜெபம்.

இவ்வனைத்துப் பகுதிகளிலும் “நாம்” மற்றும் “நம்முடைய” என்று சொல்லும்படியாக நாம் பயிற்றுவிக்கப்படுகிறோம். நாம் மற்றவர்களை நினைவு கூருவதைப்போல, நம்மை நாமே நினைவுகூரவேண்டும். ஒவ்வொரு பகுதியையும் பற்றி ஓர் அத்தியாயமே எழுதலாம். நாம் தற்போது, இப்பகுதியிலுள்ள வாக்கியங்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் கொள்வதில் திருப்தியுற்று, ஒவ்வொரு வாக்கியங்களிலும் அடங்கியுள்ள கருத்துக்களைக் குறித்துக்கொள்வோம்.

யாரிடம் நாம் ஜெபிக்க வேண்டும் என்பதை முதலாவது வாக்கியம் நமக்குப் போதிக்கிறது. “பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே.” நாம் பரிசுத்தவான்களிடத்திலும், தேவதூதர்களிடமும் ஜெபிக்காமல், நித்திய பிதாவும், ஆவிகளின் தேவனும், வானத்திற்கும், பூமிக்கும் ஆண்டவருமாகிய பிதாவினிடத்தில் ஜெபிக்கவேண்டும். “அவருக்குள் பிழைக்கிறோம்; அசைகிறோம், இருக்கிறோம்” என்று அத்தேனே பட்டணத்தாரிடத்தில் பரிசுத்த பவுல் கூறியதைப் போல, நமது சிருஷ்டிகராகிய அவரைப் “பிதாவே” என்று அழைக்கிறோம் (அப்போஸ்தலர் 17:28). நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவும், தன்னுடைய குமாரனுடைய மரணத்தின் மூலமாய் தம்மோடு நம்மை ஒப்புரவாக்கினதினாலே, நம்முடைய மேலான அறிவில், அவரைப் “பிதாவே” என்று நாம் அழைக்கிறோம் (கொலோசெயர் 1:20-22). பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் “பிதாவை” மங்கலாயும், வெகு தொலைவிலுமே கண்டார்கள் என்று அறிக்கையிடுகிற நாம், கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் அவருடைய பிள்ளைகளாயிருக்கிறோம். மேலும், “அப்பா, பிதாவே என்று கூப்பிடத்தக்க புத்திர சுவிகாரத்தின் ஆவியையும்” நாம் பெற்றிருக்கிறோம். (ரோமர் 8:15). இதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது: நாம் இரட்சிக்கபடும்படிக்கு அவருடைய குமாரத்துவத்தில் நாம் வாஞ்சையாய் இருக்க வேண்டும். கிறிஸ்துவினுடைய இரத்தத்தை விசுவாசியாமலும் அவரோடு ஐக்கியங்கொள்ளாமலும் இருந்து, கர்த்தருடைய “பிதாத்துவத்தில்” நம்பிக்கையாய் இருக்கிறோம் என்ற பேச்சு பிரயோஜனமற்றது.

கர்த்தருடைய நாமத்தை மதிக்கின்ற விண்ணப்பமாக இரண்டாவது வாக்கியம் உள்ளது. “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” கர்த்தருடைய “நாமம்” என்றால் அவருடைய வல்லமை, ஞானம், பரிசுத்தம், நீதி, இரக்கம் மற்றும் உண்மை ஆகிய அத்தனைக் குணாதிசயங்களின் அடிப்படையில் அவர் நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார் என்று நாம் அர்த்தப்படுத்துகிறோம். “பரிசுத்தப்படுவதாக” என்று நாம் அழைப்பதினால், அவருடைய நாமம் எங்கும் அறியப்பட்டு, மகிமைபடுத்தப்படும் என்று நாம் அர்த்தப்படுத்துகிறோம். கர்த்தருடைய பிள்ளைகள் வாஞ்சிக்க வேண்டிய முதலாவது காரியம், கர்த்தருடைய மகிமையே. “பிதாவே, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்” என்பது நமது ஆண்டவரின் தனிப்பட்ட ஜெபங்களின் நோக்கங்களில் ஒன்றாகும் (யோவான் 12:28). இந்நோக்கத்திற்காகவே உலகம் படைக்கப்பட்டது; இம்முடிவிற்காகவே பரிசுத்தவான்கள் அழைக்கப்பட்டும், மனமாற்றமடைந்தும் இருக்கிறார்கள்; “எல்லாவற்றிலேயும் தேவன் மகிமைப்படவேண்டும்” என்ற பிரதான காரியத்தையே நாம் நாடவேண்டும் (1 பேதுரு 4:11).

கர்த்தருடைய ராஜ்ஜியத்தை பற்றியதான விண்ணப்பமாக மூன்றாவது வாக்கியம் அமைந்துள்ளது. அவருடைய இராஜ்ஜியம் என்று முதலாவதாக, நாம் அர்த்தப்படுத்துவது என்னவெனில், கர்த்தர் தமது கிருபையின் ராஜ்ஜியத்தை ஸ்தாபித்து, தமது ஆவியினாலும் வார்த்தையினாலும் கிறிஸ்துவின் எல்லா ஜீவனுள்ள அங்கத்தவர்களின் இருதயங்களிலும் அதை நிர்வகிக்கிறார் என்பதே. ஆனால், நாம் பிரதானமாகக் கருதுவது என்னவெனில், இயேசுவின் இரண்டாம் வருகையின்போது, ஒரு நாள் மகிமையின் ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும். “அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன் வரைக்கும் எல்லாரும் அவரை அறிவார்கள்” (எபிரெயர் 8:11). இவ்வேளையில் தானே உலகத்தில் இருந்து, பாவம், துக்கம் மற்றும் சாத்தானை தூக்கி எறியப்படும். அந்த காலக்கட்டத்தில் தாமே யூதர்கள் மனந்திரும்பி, புறஜாதியாருடைய நிறைவு உண்டாயிருக்கும் (ரோமர் 11:25). மேலும், இவை எல்லாம் நிறைவேற வாஞ்சிப்பதும் இந்த வேளையில்தான். எனவே, கர்த்தருடைய ஜெபத்தில் இது முதன்மையான இடம் வகிக்கிறது. “கர்த்தருக்குச் சித்தமானால், தம்முடைய ராஜ்ஜியத்தை துரிதப்படுத்தும்” என்று அடக்க ஆராதனையில் சொல்லப்படுகின்ற வார்த்தைகளை நாம் கேட்போம்.

“உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுகிறது போல, பூமியிலேயும் செய்யப்படுவதாக”. கர்த்தருடைய சித்தத்தை பற்றியதான விண்ணப்பமாக நான்காவது வாக்கியம் அமைந்துள்ளது. பரலோகத்திலுள்ள தேவதூதர்களால் கர்த்தருடைய கட்டளைகள் யாவும் பூரணமாய், ஆயத்தமாய், இடையறாத வகையில் கீழ்ப்படியப்படுவதைப் போல, பூமியிலே மனிதர்களாலும் கீழ்ப்படியப்படும்படி நாம் ஜெபிக்கலாம். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் அவைகளுக்குக் கீழ்ப்படியும்படி கற்றுக்கொடுக்கப்படவும், அவைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் இன்னும் அதிகமாய் அவைகளைக் கைக்கொள்ளவும் நாம் விண்ணப்பிப்போம். கர்த்தருடைய சித்தத்திற்கு நம்மை முழுமையாக ஒப்புக்கொடுப்பதே நம்முடைய மெய்யான சந்தோஷமாய் இருக்கும். மேலும், அனைத்து மனித சமூகமும் அவருடைய சித்தத்தை அறிந்து, கீழ்ப்படிந்து, அதற்கு தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டி நாம் ஜெபிப்பதே நம்முடைய உன்னதமான தர்மமாகும்.

“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்”. நம்முடைய அன்றாடத் தேவைகளைக் குறிக்கும் விண்ணப்பமாக ஐந்தாவது வாக்கியம் உள்ளது. நம்முடைய அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நாம் முழுவதுமாகக் கர்த்தரை சார்ந்திருக்கிறோம் என்று அங்கீகரிக்க நாம் இங்கு கற்றுக் கொள்கிறோம். இஸ்ரவேலர் அனுதின “மன்னாவை” கேட்டதுபோல நாமும் அனுதின “ஆகாரத்தை” கேட்கிறோம். நாம் தரித்திரர், பலவீனர், தேவையுள்ள சிருஷ்டிகள் என்பதை உணர்ந்து, அறிக்கையிட்டு, நம்முடைய சிருஷ்டிகராகிய அவரிடத்தில் நம்மை பாதுகாக்கும்படி வேண்டுகிறோம். நம்முடைய அத்தியாவசிய தேவைகளில் எளிமையானதான “ஆகாரத்தை” தரும்படி நாம் கேட்கும்போது, நம்முடைய அனைத்து சரீரத் தேவைகளும் அந்த ஒரே வார்த்தையில் அடங்கிவிடுகிறது.

“எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும்”. நம்முடைய பாவங்களை குறித்ததான விண்ணப்பமாக ஆறாவது வாக்கியம் உள்ளது. நாம் பாவிகள் என்றும், அனுதினமும் நமக்கு பாவமன்னிப்பும், உதவியும் வேண்டியதாய் இருக்கிறது என்றும் நாம் அறிக்கையிடுகிறோம். கர்த்தருடைய ஜெபத்தில் விசேஷமாக நினைவில் வைத்திருக்கக்கூடிய பகுதி இது. இது எல்லா சுய ஒழுக்கத்தையும், சுயநீதியையும் கடிந்துகொள்கிறது. கிருபாசனத்தண்டையில் நாம் பாவ அறிக்கை செய்யும் வழக்கத்தையும், இரக்கம் மற்றும் பாவமன்னிப்பு வேண்டி கர்த்தரை நாடும் வழக்கத்தையும் தொடர்ச்சியாக நிறைவேற்ற நாம் இங்கே போதிக்கப்படுகிறோம். இதை ஒருபோதும் மறக்கக்கூடாது. நாம் அனுதினமும் “நம்முடைய கால்களைக் கழுவ வேண்டியது” அவசியம் (யோவான் 13:10).

பிறரிடம் நமக்கான உணர்வை வெளிப்படுத்துகின்ற வாக்கியமாக ஏழாவது வாக்கியம் உள்ளது. “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று பிதாவினிடத்தில் நாம் கேட்போம். முழு ஜெபத்திலும் இது ஒன்றே வெளிப்படையான அறிவிப்பாகும். மேலும், நமது ஆண்டவர் ஜெபத்தை முடிக்கும்போது விமர்சித்ததும் விவரித்ததுமான ஒரே பகுதி இதுதான். பிறருக்கு விரோதமாக வன்மங்களையும் வஞ்சகங்களையும் நம் இருதயத்தில் வைத்துக்கொண்டு நாம் ஜெபித்தால், பாவமன்னிப்புக்கென்று ஏறெடுக்கப்படும் நம்முடைய ஜெபங்கள் கேட்கப்படும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது என்ற கருத்தையே இது நமக்கு நினைவுபடுத்துகிறது. இப்படிப்பட்ட மனநிலையோடு ஏறெடுக்கப்படும் ஜெபமானது வெறும் சடங்காயும், மாய்மாலமாயும் இருக்கும்: இது மாய்மாலத்தைக் காட்டிலும் மோசமானதாகும் “என்னை மன்னிக்கவே மன்னிக்காதீர்” என்று சொல்வதற்கு இணையாகும். கருணையற்ற நமது ஜெபங்கள் பிரயோஜனமற்றவை. நம்மால் பிறரை மன்னிக்க முடியாவிடில், நாம் மன்னிக்கப்படுவோம் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது.

“எங்களை சோதனைக்குட்படப்பண்ணாமல்” என்ற, நமது பலவீனங்கள் தொடர்பான விண்ணப்பமாக எட்டாவது வாக்கியம் அமைந்துள்ளது. நாம் எல்லா வேளைகளிலும், கடவுளை விட்டு வழிவிலகி விழுந்துப் போகக்கூடியநிலையில் இருக்கிறோம் என்று இவ்வாக்கியம் நமக்கு போதிக்கிறது. நம் பலவீனங்களை அறிக்கையிட்டு, நாம் பாவத்தில் வீழ்ந்துபோக அனுமதிக்காமல் நம்மை தாங்கி பிடிக்கும்படி கர்த்தரிடத்தில் மன்றாடவும் இது நமக்கு போதிக்கிறது. நம் ஆத்துமாக்களை சேதப்படுத்துகின்ற காரியங்களுக்கு நாம் போகாதபடி நம்மை தடுக்கவும், நாம் ஒருபோதும் “நம்முடைய திராணிக்கு மேலான சோதனைகளினால் சோதிக்கபடாதபடி” நம்மைக் காக்கவும், வானத்தையும், பூமியையும், அதிலுள்ள யாவையும் ஆளுகிற நமது ஆண்டவரிடத்தில் நாம் கேட்கக்கடவோம் (1 கொரி. 10:13).

“தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்”. நமது ஆபத்துக்கள் தொடர்பான விண்ணப்பமாக ஒன்பதாவது வாக்கியம் உள்ளது. இவ்வுலகத்திலுள்ள தீமைகளிலிருந்தும், எல்லாவற்றிற்கும் மேலாக, சாத்தானின் தீமையினின்றும் இரட்சிக்கப்பட நாம் கர்த்தரிடத்தில் கேட்கும்படியாக இங்கு நாம் கற்றுக்கொள்கிறோம். நாம் இந்த சரீரத்தில் இருக்கும்வரை, தீமைகளின் பிரசன்னத்தைக் காண்கிறோம், கேட்கிறோம் மற்றும் உணருகிறோம் என்று நாம் அறிக்கையிடுவோம். தீமையானது நம்மை பற்றியும், நமக்குள்ளும், எப்பக்கத்திலும் நம்மைச் சுற்றிலும் இருக்கிறது; நம்மை தீமையின் வல்லமையில் இருந்து தொடர்ந்து இரட்சிக்கவும், பாதுகாக்கவும் வல்ல ஒரே தேவனாகிய அவரிடம் நாம் மன்றாடலாம் (யோவான் 17:15).

“இராஜ்ஜியமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே”. கடைசி வாக்கியமானது கர்த்தருடைய ஜெபத்தின் புகழுரையாகும். இவ்வுலகில் உள்ள எல்லா இராஜ்ஜியங்களும் நம்முடைய பிதாவின் நியாயமான ஆஸ்திகளாகும்; எல்லா “வல்லமையும்” அவர் ஒருவருக்கே உரியது; எல்லா “மகிமையும்” பெற்றுக்கொள்ள அவர் ஒருவரே பாத்திரர் என்ற இந்த வார்த்தைகளின்மூலம் நம்முடைய விசுவாசத்தை நாம் அறிக்கையிடுகிறோம். எல்லா கனத்தையும் துதிகளையும் நாம் அவருக்கே கொடுக்கிறோம் என்றும், இராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தருமாகிய அவரில் நாம் களிகூருகிறோம் என்றும் நம் இருதயங்களின் வெளிப்படையான அறிவிப்பை அவருக்கு ஏறெடுப்பதின்மூலம் இந்த ஜெபத்தை நாம் நிறைவுசெய்கிறோம்.

கர்த்தருடைய ஜெபத்தில் கேட்கும்படி நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட காரியங்களுக்காக நாம் மெய்யாக வாஞ்சிக்கிறோமா என்று நம்மை நாமே சோதித்துப் பார்க்கக்கடவோம். ஆயிரக்கணக்கானோர், இந்த ஜெபத்தை முறையாக, பயத்தோடு தினமும் ஏறெடுக்கிறார்கள், ஆனால் அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று ஒருபோதும் சிந்திப்பதில்லை. அவர்கள் “மகிமை”, “இராஜ்ஜியம்” அல்லது “கர்த்தருடைய சித்தம்” குறித்து கவலைப்படவில்லை; சார்ந்திருத்தல், பாவம், பலவீனம் அல்லது தீமைகளை குறித்ததான எந்த அறிவும் அவர்களுக்கு இல்லை, தங்களுடைய எதிராளிகளுக்கு நேராக அவர்களிடத்தில் அன்போ, இரக்கமோ கிடையாது; இருந்தபோதிலும், அவர்கள் கர்த்தருடைய ஜெபத்தைத் தொடர்ந்து சொல்லுகிறார்கள்! இக்காரியங்கள் இப்படி இருக்கக் கூடாது. கர்த்தரின் துணையோடு நாம் இதை சரிசெய்து, நம்முடைய இருதயங்கள் எப்போதும் நம்முடைய உதடுகளோடு சொல்லும்படி பார்த்துக்கொள்வோம்! தன்னுடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் கடவுளை தன்னுடைய “பிதா” என்று மெய்யாய் அழைக்கிற எவனும் பாக்கியவான். எனவே, கர்த்தருடைய ஜெபத்தில் அமைந்துள்ள எல்லாவற்றிற்காகவும் இருதயத்தின் ஆழத்திலிருந்து “ஆமென்” என்று சொல்லக்கடவன்.

வேதப்பகுதி: மத்தேயு 6:16-24

தலைப்பு: உபவாசித்தலின் சரியான முறைமை, பரலோகத்தின் பொக்கிஷம்

நமது ஆண்டவரின் மலைப் பிரசங்கத்தின் இந்தப் பகுதியில் இருந்து நமக்கு மூன்று காரியங்கள் விளக்கப்படுகின்றது. அவையாவன: உபவாசம், உலகப் பற்று மற்றும் நம் ஜீவ வாழ்க்கையின் தனித்துவம்.

உபவாசம் அல்லது சரீரத்தை ஆவிக்குக் கீழ்ப்படுத்தும் பொருட்டு சிறப்பான தருணங்களில் ஆகாரத்தை விலக்கி வைக்கின்ற செயல் வேதத்தில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வழக்கமாகும். மேலும், இது பொதுவாக, ஜெபத்தோடு தொடர்புடையது. தன்னுடைய பிள்ளை வியாதியாய் இருந்தபோது, தாவீது உபவாசித்தான்; கர்த்தரிடம் இருந்து விசேஷித்த ஞானத்தைப் (ஒளியை) பெற நாடினபோது, தானியேல் உபவாசித்தான்; மூப்பர்களை நியமிக்கும்போது, பவுலும், பர்னபாவும் உபவாசித்தார்கள்; அகாஸ்வேரு ராஜாவுக்கு முன்பாகச் செல்லும்போது, எஸ்தர் உபவாசித்தாள். புதிய ஏற்பாட்டில் இக்காரியத்தைக் குறித்ததான நேரிடையான கட்டளையை நாம் காண முடியாது. ஒருவன் உபவாசிப்பதோ அல்லது உபவாசியாமல் இருப்பதோ அவனுடைய பகுத்தறிவின் தீர்மானத்திற்கென்று விடப்பட்டுள்ளது. நேரடியான கட்டளை கொடுக்கப்படாவிட்டாலும், இதுபற்றிய சிறப்பான ஞானத்தை நாம் காணலாம். அநேக ஏழை மக்கள் போதுமான அளவு சாப்பிடாதிருக்கும் போது, அவர்களை உபவாசிக்கச் சொல்லுவது நிந்திப்பதாகும்: அநேக வியாதியஸ்தர்கள் தங்கள் உடல்நலன் கருதி பத்திய உணவை உட்கொள்ளும்போது, நோய்களை வரவழைக்காமல் அவர்களால் உபவாசம் இருக்க இயலாது. இக்காரியத்தைக் குறித்து ஒவ்வொருவனும் தன் தன் மனதிலே தூண்டப்பட்டு, தன்னோடு இதில் ஒத்துவராத யாரையும் கடினமாய் கடிந்துகொள்ளாதிருக்கக்கடவன். ஒரு காரியத்தைக் குறித்து ஒருவரும் மறந்துவிடக்கூடாது: உபவாசிப்பவர்கள் அமைதலோடு, அந்தரங்கத்தில் பகட்டில்லாமல் உபவாசிக்கக்கடவர்கள். அவர்கள் உபவாசிக்கும்போது, “மனுஷர்களுக்குக் காணப்படாமல்” உபவாசிக்க வேண்டும். அவர்கள் மனுஷர் காணும்படி உபவாசியாமல், கர்த்தர் காணும்படி உபவாசிக்கக்கடவர்கள்.

மனிதனுடைய ஆத்துமாவை வளைத்துக் கொள்கின்ற பயங்கரமான ஆபத்துக்களில் உலகப்பற்றும் ஒன்றாகும். நமது ஆண்டவர் இதைக் குறித்து கடினமாய்ப் பேசுவதைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை; இது கபடமான, தந்திரமான எதிரி; நம்முடைய வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தும்படிக் கூறும்போது கபடற்றதாய் காணப்படும். நாம் வெளிப்படையான பாவங்கள் செய்யாதவரை இவ்வுலக சிற்றின்பங்களை நாடும்படி வழிக்காட்டும்போது தீங்கற்றதாய் காணப்படும். எனினும், அநேகர் இந்த கற்பாறையின் மீது மோதி நித்தியத்திற்கு போகிறவழியில் கப்பற்சேதம் அடைகிறார்கள்! “பூமியிலே தங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வைக்கிற” அவர்கள் “பரலோகத்தில் தங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்க மறந்துவிடுகிறார்கள்.” நாம் இவை எல்லாவற்றையும் நினைவுகூருவோமாக! நம்முடைய இருதயங்கள் எங்கே? நாம் எதை அதிகமாய் நேசிக்கிறோம்? நம்முடைய பிரதான விருப்பங்கள் பூமியிலுள்ள பொருட்கள் மீதா அல்லது பரலோகத்தில் உள்ள பொருட்கள் மீது உள்ளதா? இக்கேள்விகளுக்கு நாம் அளிக்கக்கூடிய விடைகளிலேயே நம்முடைய வாழ்வும், மரணமும் அடங்கியுள்ளது. நம்முடைய பொக்கிஷங்கள் உலகபிரகாரமானவையாக இருந்தால், நம்முடைய இருதயங்களும் உலகத்தில் இருக்கும். “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.”

ஆத்மீக விருத்திக்கான மேன்மையான இரகசியங்களில் நோக்கத்தின் ஒருமையும் ஒன்று. நம்முடைய கண்கள் தெளிவாய்ப் பார்க்காவிட்டால், நாம் தடுமாறாமலும், இடறி விழாமலும் நடக்க முடியாது. நாம் வெவ்வேறான இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய முயற்சித்தால், நிச்சயமாக நம்மால் ஒருவருக்கும் திருப்தி அளிக்க முடியாது. நம்முடைய ஆத்துமாக்களைக் குறித்த காரியமும் இப்படிப்பட்டதே. ஒரே வேளையில் நாம் கிறிஸ்துவுக்கும், இவ்வுலகிற்கும் சேவைசெய்ய முடியாது. அப்படி செய்ய முயற்சிப்பது வீணாய் இருக்கும். இந்த காரியம் செயல்பட முடியாது.

நம்முடைய இருதயங்களின்மீது ஆண்டவர் ராஜாவாய் இருக்க வேண்டும். அவருடைய நியாயப்பிரமாணம், அவருடைய சித்தம் மற்றும் அவருடைய போதனைகளே நம்முடைய முதல் கவனத்தை பெற வேண்டும்; பின்னர், நம்முடைய உள்ளான மனுஷனிலுள்ள எல்லாம் அதினதின் இடத்தில் சரியாய் இருக்க வேண்டும். நம்முடைய இருதயங்கள் சீராக ஒழுங்கில்லாது இருந்தால், எல்லாமே குழப்பமாகத்தான் இருக்கும். “உன் சரீரம் முழுவதும் இருளாயிக்கும்.”

நமது மதத்தில் உற்சாகத்தினுடைய மேலான முக்கியத்துவம் உபவாசம். இதைப் பற்றியதான நமது ஆண்டவரின் போதனைகளில் இருந்து நாம் கற்றுக்கொள்வோம். “உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு” என்ற வார்த்தைகள் ஆழமான அர்த்தங்களினால் நிறைந்து இருக்கிறது. கிறிஸ்தவம் நம்மை சந்தோஷமுள்ளவர்களாக மாற்றுகிறது என்று மனிதர்கள் காணும்படிச் செய்வதே நமது குறிக்கோளாய் இருக்க வேண்டும் என்று அவை போதிக்கின்றன. விசாரமற்றதாயும், சோகமாயும் எந்த மதமும் காணப்படவில்லை என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. கிறிஸ்துவினுடைய சம்பாத்தியம் மற்றும் கிறிஸ்துவினுடைய ஊழியத்தில் நாம் திருப்தியற்றவர்களாய் இருக்கிறோமா? நிச்சயமாக இல்லை! ஆகவே, நாம் முன்பு காணப்பட்டது போல இனிக் காணப்படாதிருப்போம்.

உலகப்பற்று பற்றியதான நமது ஆண்டவரின் எச்சரிக்கையை நாம் எண்ணிப் பார்ப்போமே. ஒரு உலகத்தின் ஆவிக்கு எதிராக விழிப்பாயிருந்து ஜெபிக்க வேண்டியதின் அவசியம் நமக்கு இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் இருக்கிற பெரும்பாலான பயபக்தியுள்ள கிறிஸ்தவர்கள் என்ன செய்கிறார்கள்? “அவர்கள் பூமியிலே தங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வைக்கிறார்கள்”. அதில் எந்தத் தவறும் இருக்க முடியாது, ஆனால், அவர்களுடைய விருப்பங்கள், அவர்களுடைய வழிகள் மற்றும் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் யாவும் நமக்கு பயங்கரமான கதையையே கூறுகின்றன. அவர்கள் “தங்கள் பொக்கிஷங்களைப் பரலோகத்தில் சேர்த்து வைக்கவில்லை.” நியாயமான காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதின் மூலம் நம்முடைய ஆத்துமாக்கள் நரகத்தில் அமிழ்ந்துபோகாதபடி நாம் எச்சரிக்கையாய் இருப்போம். கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின் பகிரங்கமான மீறுதல் ஆயிரமாயிரம் பேரைக் கொல்லும், ஆனால் உலகப்பற்று பல்லாயிரக்கணக்கானோரை அழித்துவிடும்.

“ஒரு கண்” பற்றியதான நமது ஆண்டவரின் வார்த்தைகளில் இருந்து அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் காண்கின்ற தோல்விகளின் உண்மை இரகசியங்களை நாம் கற்றுக்கொள்ளுவோம். எல்லாப் பகுதிகளிலும் தோல்வியே. நம்முடைய திருச்சபைகளில் ஆயிரமானோர் அசௌகரியமாய், சுகமற்றவர்களாய், தங்களில் தாங்களே திருப்தி அற்றவர்களாய் காணப்படுகிறார்கள்; ஏன் என்று அவர்கள் மிக அரிதாக அறிவார்கள். அதற்கான காரணம் இப்பகுதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது: அவர்கள் இரண்டு பக்கங்களையும் சீராக வைக்க முயற்சிக்கிறார்கள்; அவர்கள் கர்த்தரையும், மனிதனையும் திருப்திபடுத்த பிரயத்தனம் செய்கிறார்கள்; ஒரே சமயத்தில் கிறிஸ்துவுக்கும், உலகத்திற்கும் உழைக்க பிரயாசப்படுகிறார்கள். இந்தத் தவறை நாம் செய்யாதிருக்க வேண்டும். கிறிஸ்துவுக்குள் தீர்மானிக்கப்பட்டவர்களாய், பரிபூரணராய், இணங்காத சீஷர்களாய் இருப்போம். “ஒன்று செய்கிறேன்: பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி” என்ற பவுலினுடைய வார்த்தைகள் நமது குறிக்கோளாய் இருக்கட்டும் (பிலிப்பியர் 3:13). பின்னர், நாம் சந்தோஷமான கிறிஸ்தவர்களாய் இருப்போம். நம் முகத்தின்மீது சூரியன் பிரகாசிப்பதை நாம் உணரலாம்; நம்முடைய இருதயம், தலை மற்றும் மனசாட்சி யாவும் வெளிச்சத்தால் நிறைந்திருக்கும். முடிவெடுத்தலே கிறிஸ்தவ சந்தோஷத்தின் இரகசியமாகும். கிறிஸ்துவுக்கென்று நிச்சயிக்கப்பட்டவர்களாய் இருங்கள், அப்பொழுது, “உங்கள் சரீர முழுவதும் வெளிச்சமாய் இருக்கும்.”

வேதப்பகுதி: மத்தேயு 6:25-34

தலைப்பு: புறக்கணிக்கப்பட்ட இந்த உலகத்தைப் பற்றி அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் போதனையின் ஒருங்கிணைப்பான ஞானம் மற்றும் இரக்கத்திற்கான ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு இவ்வசனங்கள் ஆகும். அவர் மனுஷனுடைய இருதயத்தை அறிவார். உலகப்பற்றிற்கு எதிரான எச்சரிப்புகளை நாம் உதறிவிட எப்போதும் ஆயத்தமாய் இருப்போம் என்பதை இவ்வுலக வாழ்க்கையின் காரியங்களைப் பற்றிய நமது ஆர்வத்தினால் உண்டான வாதத்தில் இருந்து அவர் அறிவார். நமக்குக் கொடுப்பதற்காக நமது குடும்பங்கள் நமக்கு இல்லையா? நம்முடைய சரீரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லையா? நம்முடைய ஆத்துமாவைக் குறித்து முதலில் சிந்தித்தால், எப்படி நம்முடைய வாழ்க்கையை எளிதாக நடத்திச் செல்ல முடியும்? கர்த்தராகிய இயேசு இப்படிப்பட்ட சிந்தனைகளை முன்பே அறிந்து, அதற்கான விடையை அளித்திருக்கிறார்.

இவ்வுலக காரியங்களைக் குறித்ததான துக்கமுள்ள ஆவியை விட்டு விலகும்படி கர்த்தர் நமக்குப் போதிக்கிறார். “கவலைப்படாதிருங்கள்” என்று அவர் நான்கு முறை கூறுகிறார். சரீரத்திற்காக, ஆகாரத்திற்காக, உடைக்காக மற்றும் நாளைய தினத்திற்காகக் “கவலைப்படாதிருங்கள்”. அதிக ஜாக்கிரதையாயும், அதிக ஆர்வமுடன் இராதேயுங்கள். எதிர்காலத்தைக் குறித்த விவேகமான முன்னேற்பாடு சரியே. உடுத்தல், அருந்துதல் மற்றும் தன் தேவைகள் சம்பந்தமான அளவுக்குமீறிய ஆர்வம் தவறு.

கடவுள் தாம் சிருஷ்டித்த எல்லாவற்றிற்கும் தெய்வாதீனமான பாதுகாப்பைத் தொடர்ந்து அளிக்கிறார் என்பதை நமக்கு அவர் நினைவுபடுத்துகிறார். அவர் நமக்கு “ஜீவனைக்” கொடுத்திருக்கிறாரா? அப்படியானால், நிச்சயமாக அதன் பராமரிப்பிற்கு தேவையான அனைத்துக் காரியங்களையும் அவர் நமக்குத் தருவார். அவர் நமக்கு “சரீரத்தைக்” கொடுத்திருக்கிறாரா? அப்படியானால், நிச்சயமாக அவர் நம்மை உடைக்காக அழிந்துபோக விடமாட்டார். நம்மை ஜீவனுள்ளோராக அழைத்த தேவன் சந்தேகமின்றி நம்மை ஆகாரத்தினால் போஷிப்பார்.

அதிக ஜாக்கிரதையின் பிரயோஜனமற்றத் தன்மையை அவர் குறிப்பிடுகிறார். நம்முடைய வாழ்க்கை நிச்சயமாகக் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது. இவ்வுலகில் உள்ள எல்லா ஆதரவும் கடவுள் நமக்குக் நிர்ணயித்த காலத்தைக் கடந்து ஒரு மணித்துளிக்கூட நம்மை தொடர்ந்து பாதுகாக்காது. நம்முடைய வாழ்க்கையோடு ஒரு மணி நேரத்தைக்கூட நம்மால் கூட்ட முடியாது. நம்முடைய பணி நிறைவேறும் வரை நாம் மரணமடைய முடியாது.

ஆகாயத்துப் பறவைகளினிடத்தில் கற்றுக் கொள்வதற்காக அவர் நம்மை அனுப்புகிறார். “அவைகள் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை”: அவைகள் தங்கள் எதிர்காலத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதுமில்லை; அவைகள் “களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை”. இனிவரும் காலத்திற்கென்று எதையும் களஞ்சியங்களில் அவைகள் சேர்ப்பதில்லை; கடவுள் அவைகளுக்குத் தந்த உள்ளுணர்வை பயன்படுத்தி அனுதினமும் தங்களுக்கு வேண்டிய ஆகாரத்தைப் பெற்றுக்கொண்டு வாழ்கின்றன. எந்தவொரு மனிதனும் கர்த்தர் தன்னை அழைத்த ஸ்தானத்தின் பணியை சரியாய்ச் செய்தால், அவன் ஒருபோதும் தரித்திரனாக அனுமதிக்கப்படான் என்று ஆகாயத்துப் பறவைகள் நமக்கு போதிக்கின்றது.

காட்டுப் புஷ்பங்களை கவனிக்கும்படி அவர் நமக்கு கட்டளையிடுகிறார் சொற்ப உழைப்போ அல்லது கடின உழைப்போ அவைகளின் பங்காய் இல்லாதபோதுங்கூட, ஆண்டாண்டு காலமாய், அவைகள் பிரகாசமான வண்ணங்களினால் அலங்கரிப்படுகின்றன. “அவைகள் உழைக்கிறதுமில்லை; நூற்கிறதுமில்லை.” கர்த்தர், தம்முடைய சர்வவல்லமையினால் அவைகளை ஒவ்வொரு காலத்திலும் அழகாய் உடுத்துவிக்கிறார். அதே கர்த்தர்தான் எல்லா விசுவாசிகளுக்கும் தகப்பன். “காட்டுபுஷ்பங்களை” பார்க்கிலும் அவர்களை அழகாய் உடுத்துவிக்க அவரால் முடியும் என்பதை அவர்கள் ஏன் சந்தேகிக்கவேண்டும்? அழிந்துபோகின்ற புஷ்பங்களைக் குறித்து சிந்திக்கிற அவர், நிச்சயமாக, அழிவில்லாத ஆத்துமாக்கள் வசிக்கின்ற சரீரங்களை அவர் ஒருபோதும் புறக்கணியார்.

இவ்வுலக காரியங்களை குறித்ததான அதிக ஜாக்கிரதை ஒரு கிறிஸ்தவனுக்கு முற்றிலும் தகாது என்று அவர் நமக்கு தெரிவிக்கிறார். தற்காலத்திற்கென்று வாழ்வதே புறஜாதி வழக்கத்தின் சிறந்த பண்புகளில் ஒன்றாகும். புறஜாதியான் விரும்பினால், ஆர்வமுடையவனாய் இருக்கட்டும்: அவன் பரலோகத்தில் இருக்கிற பிதாவைக் குறித்து ஒன்றும் அறியான்; ஆனால், தெளிவான அறிவும் புத்தியும் உடைய கிறிஸ்தவன் தன்னுடைய விசுவாசம் மற்றும் மனத்திருப்தியினால் இதனை மெய்ப்பிக்கக்கடவன். நாம் நேசிக்கின்றவர்களை இழக்கும்போது, “நம்பிக்கை அற்றவர்களான மற்றவர்களைப் போல துக்கிக்கக்கூடாது” (1 தெசலோனிக்கேயர் 4:13). இந்த வாழ்க்கையைக் குறித்த அதிகமான கவலைகளினால் வருந்தும்போது, நாம் கடவுளற்றவர்களைப்போல அல்லது கிறிஸ்துவை அறியாதவர்களைப் போல நடந்துகொள்ள வேண்டாம்.

துக்கமான ஆவிக்கு எதிராக கிருபையுள்ள வாக்குத்தத்ததை பரிகாரமாக அவர் நமக்கு அருளுகிறார். நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தையும், அவருடைய மகிமையையும் “முதலாவதாகவும், முதன்மையாகவும் தேடினால்,” இவ்வுலகத்தில் நமக்குத் தேவையாய் இருக்கிற அனைத்தும் நமக்குக் கொடுக்கப்படும் என்று அவர் உறுதி அளிக்கிறார். நம்முடைய பரலோக ஆஸ்திக்கும் மேலாக இது “கூட்டப்படும்,” “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது” (ரோமர் 8:28). “உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்” (சங்கீதம் 84:11). கடைசியாக, ஞானமுள்ள நீதிமொழிகளில் ஒன்றை நிர்ணயிப்பதன் மூலம் இந்த பகுதியின் மீதான தன்னுடைய அனைத்துப் போதனைகளையும் அவர் முத்திரையிடுகிறார். “நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்.” காரியங்கள் வரும்முன் நாம் அவைகளைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம்: இன்றைய காரியங்களை நாம் செய்து, நாளை விடியும்வரை நாளைக்கான கவலைகளை விட்டுவைப்போம். நாளையதினத்தைக் காணுமுன்பாக நாம் மரிக்கலாம்; நாளை என்ன நடக்கும் என்பதை நாம் அறியோம்; நாளையதினம் நமக்கு சிலுவையைக் கொண்டு வந்தால், அதை அனுமதித்தவர் அதைத் தாங்கிக்கொள்ளக்கூடிய கிருபையையும் நமக்கு அருளுவார் என்ற கருத்தில் மட்டும் நாம் உறுதியாய் இருக்கலாம்.

இந்த வேதப்பகுதி முழுவதும், பொன்னான பாடங்களின் பொக்கிஷமாய் இருக்கிறது. நம்முடைய அனுதின வாழ்வில் அவைகளைப் பயன்படுத்த நாம் நாடுவோம். அவைகளை வாசிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல், அவைகளை நடைமுறைபடுத்துவோம். துக்கமும், அதிக ஜாக்கிரதையுமுள்ள ஆவியைக்குறித்து நாம் விழிப்புள்ளவர்களாய் இருந்து ஜெபிக்கக்கடவோம். இப்படிச் செய்வதினால் நாம் மகிழ்ச்சியாய் இருக்கலாம். நம்முடைய பாதிப் பிரச்சனைகளுக்குக் காரணம், நமக்கு நேரிடக்கூடும் என்று எண்ணுகிற காரியங்களைக் குறித்து கற்பனை செய்வதே; மீதி பாதி, நமக்கு வருமென்று எதிர்பார்க்கிற காரியங்கள் நமக்கு நேரிடாமற் போவதினால் உண்டாகிறது. நம்முடைய விசுவாசம் எங்கே? நம்முடைய இரட்சகரின் வார்த்தைகளில் நமக்கு இருக்கின்ற நம்பிக்கை எங்கே? இந்த வசனங்களை வாசித்த பிறகு, நம்முடைய இருதயங்களை உற்று நோக்கினால், நம்மைப் பார்த்து நாமே வெட்கப்பட வேண்டும். “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை” என்ற தாவீதின் வார்த்தைகள் மெய்யென்று நாம் நம்பலாம்.

(மத்தேயு ஏழாம் அதிகாரத்திற்கான ரைலின் விளக்கவுரை அடுத்த இதழில் வெளிவரும்.)

ஜோன் சார்ள்ஸ் ரைல்
ஜோன் சார்ள்ஸ் ரைல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் திருச்சபையில் போதகராக இருந்தார். ரைல் 1816ல் பிறந்தார். அவர் 1890ம் ஆண்டில் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்தபோது இங்கிலாந்திலிருந்த ஆங்கிலிங்கன் சபைப்பிரிவினரைத் தவிர வேறு எவரும் அவரை அறியாதிருந்தார்கள். அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய நூல்களைப் பலர் வாசிக்க ஆரம்பித்தார்கள். அவருடைய பெயரும் பிரபலமாகியது. ரைலைப் பற்றி குறிப்பிட்ட ஓர் ஆங்கிலிக்கன் இறையியல் வல்லுனர், அவருடைய நூல்கள் பன்னிரெண்டு மில்லியன்களுக்கு விற்பனையானதாகவும், ஒரு டஜனுக்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் தொடர்ந்தும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ரைல் எழுதி ஆங்கிலத்தில் இருக்கும் Holiness, Five English Reformer, Great Leaders of the Eighteenth Century ஆகிய நூல்களை வாசித்திராத ஆங்கிலப் போதகர்கள் இருக்க முடியாது. ரைல் வாழ்ந்த காலத்திலேயே சார்ள்ஸ் ஸ்பர்ஜன், ஹட்சன் டெய்லர் போன்றோரும் வாழ்ந்திருந்தனர்.

குழந்தைப் பருவமும், மனந்திரும்புதலும்

இங்கிலாந்தில் மெக்கல்ஸ்பீல்ட் என்ற இடத்தில் 1816ல் ஜோன் சார்ள்ஸ் ரைல் பிறந்தார். சமுதாயத்தில் மிகவும் நல்ல நிலையிலும், செல்வப் பெருக்குமுள்ள ஒரு குடும்பத்தில் அவர் பிறந்தார். அவருடைய தாத்தாவின் சொத்து பின்பு ரைலின் தகப்பனாரைச் சென்றடைந்தது. ரைல் அத்தகைய குடும்பத்தில் எந்தவிதக் குறைபாட்டுக்கும் இடமில்லாமல் வளர்ந்து வந்தார். இங்கிலாந்தின் பார்ளிமென்டில் அங்கத்தவராக வரவேண்டுமென்பது ரைலினுடைய இளவயது விருப்பமாக இருந்தது. அதையே அவருடைய குடும்பமும் விரும்பியது. ரைல் பிரபலமான Eten கல்லூரியில் கல்வி பயின்று பின்பு 1834ல் Oxford பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே அவர் திறமை வாய்ந்த மாணவராக இருந்தார். அநேக சிறப்புப் பரிசுகளை அங்கு பெற்ற ரைல் தன்னுடைய சக மாணவர்கள் மத்தியில் மதிப்புப் பெற்றவராக இருந்தார். அவர் ஆறடிக்கு மேல் உயரமாகவும், அகன்ற தோள்களுடன் மிகவும் அழகு நிரம்பிய ஆண்மகனாக இருந்தார். பல்கலைக்கழக கிரிக்கெட் டீமின் தலைவராக இருந்து சிறப்பாக ஆடிய ரைல் ஒரு முக்கிய ஆட்டத்தில் பத்து விக்கெட்டுக்களை எடுத்திருந்தார். பல்கலைக்கழகத்தின் பிரபலமான படகோட்டத்திலும் ரைல் பங்கு பெற்று ஜொலித்தார்.

21ம் வயதில் ரைலுக்கு சுவாசப்பையில் நோய் ஏற்பட்டது. அது குணமாக அவர் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது அவர் வேதப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார். அதற்கு முன் பதினான்கு வருட காலமாக வேதத்தைத் தான் தொட்டிருக்கவில்லை என்று ரைலே குறிப்பிட்டிருக்கிறார். ஒரு ஞாயிறு தினம் அவர் ஆக்ஸ்போர்டில் ஒரு சபைக்குப் போனார். அங்கே எபேசியர் 2:8ம் வசனம் வாசிக்கப்பட்டதை ரைல் கேட்டார். “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;” அவ்வேளை பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் தன்னுடைய பாவத்தை அவர் ஆழமாக உணர்ந்தார். அந்தப் பாவ உணர்தல் கிருபையின் மூலமான மனந்திரும்புதலையும் அவருடைய வாழ்க்கையில் கொண்டுவந்தது. அன்றிருந்து இந்த உலகத்தைவிட்டு மறையும் வரையும், கர்த்தருடைய வார்த்தை ஜீவனுள்ளதும், வல்லமையானதுமாய் இருபுறமும் பட்டைதீட்டப்பட்ட வாளாயிருக்கின்றது என்ற நம்பிக்கை ரைலின் இருதயத்தைவிட்டு நீங்கவில்லை.

ஆரம்பகாலப் பணிகள்

பல்கலைக்கழகப் படிப்பை முடித்தபின் ரைல் தன்னுடைய பெற்றோர்களுடன் இருந்து பார்ளிமெண்டில் தெரிவுசெய்யப்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஒரு நாள் அதிகாலையில் தந்தை நடத்திவந்த வங்கி கவிழ்ந்துவிட்டதென்ற செய்தி அவரை நித்திரையில் இருந்து எழுப்பியது. 1841ல் அவருடைய தந்தையின் வங்கி கட்டவேண்டிய கடன்களைக் கட்டமுடியாததால் மூடப்பட வேண்டிய நிலையை எட்டியது. ஒரே நாளில் ரைலின் குடும்ப சொத்தான பெரிய எஸ்டேட்டும் செல்வமும் அவர்களைவிட்டு அகன்றன. இந்த நிகழ்ச்சி ரைலினுடைய வாழ்க்கையை இறுதிவரை பாதித்திருந்தது. இதுபற்றி எழுதிய ரைல், “ஒரு நாள் அதிகாலையில் வழமையாக நடப்பது போன்ற அத்தனை நிகழ்ச்சிகளும் இந்த உலகத்தில் நிகழ படுக்கையில் இருந்து எழுந்தேன். அதே நாளிரவு எல்லாவற்றையும் இழந்தவனாக படுக்கைக்குப் போனேன். இது எனக்கு மிகுந்த கசப்பையும், வலியையும் தந்ததோடு பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தியது.”

செல்வமிக்க குடும்பத்தில் பிறந்த ரைல் தான் மற்றவர்களைப்போல உழைத்து வாழவேண்டிய நிலை ஏற்படும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. இப்போது வாழ்க்கையில் முதல்தடவையாக வாலிபனாக இருந்த ரைலுக்கு ஒரு தொழில் தேவைப்பபட்டது. ஆக்ஸ்போர்ட் படிப்பும், மனந்திரும்புதலும் அவரை தேவனுடைய ஊழியத்தை நாடும்படித் தூண்டின. இருபத்தைந்து வயதில் ரைல் இங்கிலாந்து ஆங்கிலிக்கன் திருச்சபையில் போதகராகப் பணியேற்றார். அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மிகக் கசப்பான அனுபவம் இறுதியில் நல்லதிலேயே போய் முடிந்தது. ரைலுக்கு மேலிருந்த சபைத்தலைவர் அவரை எக்ஸ்பெரி (Exbury) என்ற இடத்திற்குப் பணிபுரிய அனுப்பிவைத்தார். அவருக்கு 27 வயதாயிருந்தபோது அவர் வின்செஸ்டர் (Winchester) என்ற இடத்துக்கு மாற்றப்பட்டார். சில மாதங்களுக்குப்பிறகு அவர் மறுபடியும் ஹெல்மிங்கெம் (Helmingham) என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கே தன்னுடைய நாற்பதாம் வயதுவரை ரைல் பணிபுரிந்தார். ஹெல்மிங்கெம் ஒரு சிறிய ஊராக இருந்தது. அங்கே ரைல் வாசிப்பதற்கு அதிக நேரம் கிடைத்தது. அங்கிருக்கும்போது அவருக்கு வரலாற்றில் திருச்சபையில் சிறப்பாகப் பணிபுரிந்திருந்த சபைத்தலைவர்களின் வரலாற்று நூல்கள் கர்த்தரின் வழிநடத்துதலால் கிடைத்தன. இந்நூல்கள் ரைலினுடைய ஊழியத்திற்கும், பிரசங்கத்திற்கும் அதிக வளம் சேர்த்து மேன்மைப்படுத்தின. ரைலுக்கு பதினாறு, பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு சபைத் தலைவர்களை நன்றாகப் பிடித்திருந்தது. வேல்ஸின் ரோலன்ட், பதினேழாம் நூற்றாண்டுப் பியூரிட்டன் தலைவர்களான ஸ்டீபன் சார்நொக், ஜோன் பனியன், பதினாறாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளான ஜோன் கல்வின், மார்டின் லூதர், ஜோன் நொக்ஸ், கிரேன்மர் ஆகியோரும் அவரைப் பெருமளவுக்கு கவர்ந்திருந்தார்கள். சீர்திருத்தவாத காலத்தையும், பியூரிட்டன் காலத்தையும் அதிகம் படித்திருந்த ரைலின் சுவிசேஷப் பிரசங்கங்களனைத்தும் அக்கால சபைத்தலைவர்களுடைய போதனைகளின் அடையாளங்களைக் கொண்டு அவருடைய ஊழியத்தில் முக்கியமான இடத்தைக் கொண்டிருந்தன.

திருமணமும் குடும்ப வாழ்க்கையும்

பணப்பிரச்சனைகளால் துன்பப்பட்டது மட்டுமன்றி ரைலின் முதலிரு மனைவிகளும் உடல்நலக்குறைவால் துன்பப்பட்டனர். தன்னுடைய 29ம் வயதில் அவர் மெட்டில்டா பிளம்டர் (Matilda Plumptre) என்ற பெண்ணை மனந்தார். ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக்கொடுத்துவிட்டு சில வருடங்களுக்குள் அவர் மரித்தார். அதன்பின் ரைலின் தாயும், சகோதரரும், சகோதரியும் மரித்தனர். யோபு தன் வாழ்நாளில் கர்த்தர் அனுமதித்திருந்த துன்பங்களை அனுபவித்ததுபோல் தானும் அத்தகைய துன்பங்களை அனுபவித்து வாழ்வதாக ரைல் உணர்ந்தார். தன்னுடைய 33ம் வயதில் தனது நீண்டகால நண்பியாக இருந்த ஜெசி வாக்கரை (Jesse Walker) ரைல் மணந்தார். அதற்குப்பிறகு மறுபடியும் அவருடைய வாழ்க்கையில் அன்பும், சந்தோஷமும் குடிபுகுந்தன. திருமணமாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜெசி வாக்கரை குணமாகாத ஒரு நோய் பிடித்தது. அதிலிருந்து அவரால் இறுதிவரை மீள முடியவில்லை. ஜெசிக்கு நோய் பிடித்து பத்துவருடங்கள்வரை ரைல் அவரை மிகக் கவனமாகப் பார்த்து வளர்ந்துவரும் குடும்பத்தின் மத்தியிலும் சகல உதவிகளையும் செய்து வந்தார். ஜெசியின் மூலமாக ரைலுக்கு நான்கு குழந்தைகள் பிறந்திருந்தன. இத்தனை வீட்டுப் பொறுப்புகளுக்கு மத்தியிலும் அவர் போதகப் பணியையும் தொடர்ந்து செய்து வர வேண்டியிருந்தது.

இந்தக் காலப்பகுதியில் வேறு இடங்களில் பேசக் கூடிய வாய்ப்புகள் ரைலுக்கு வந்தன. இருந்தபோதும் தன் மனைவிமேலிருந்த அன்பால் கடுமையான பனிக்காலத்திலும் அவர் திறந்த வண்டியில் முப்பது மைல்கள் பிரயாணம் செய்து இரவு எங்கும் தங்காமல் வீட்டுக்கு வந்துவிடுவார். ரைலுக்கு 43 வயதாக இருக்கும்போது ஜெசி மரித்தார். இரண்டாவது தடவையாக தனிமையில் ரைல் மனைவியை இழந்து ஐந்து பிள்ளைகளை வளர்த்துவர வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு 45 வயதாக இருக்கும்போது ஸ்ட்ரெட்புரோக் (Stradbroke) என்ற இடத்துக்கு ரைல் மாற்றப்பட்டார். அங்கே அவர் ஹென்ரீட்டா குளோவ்ஸ் (Henrietta Clowes) என்பவரை சந்தித்து மூன்றாம் தடவையாக திருமண வாழ்க்கையைத் தொடங்கினார். ரைலின் மரித்த இரண்டு துணைவிகளைப் போலல்லாது ஹென்ரீட்டா நல்ல உடல் நலத்தைக் கொண்டிருந்தார். இந்த மணவாழ்க்கை நல்லபடியாக அமைந்து நீண்ட காலம் நிலைத்திருந்தது. ஹென்ரீட்டா இசைக் கருவிகளை வாசிப்பதில் திறமையானவராகவும், ஆழமான விசுவாசத்தைக் கொண்ட கிறிஸ்தவராகவும் இருந்தார்.

எழுத்துப்பணி

வாழ்க்கையில் அனுபவித்த பல துன்பங்களுக்கு மத்தியிலும் எழுத்தாளராகவும், பிரசங்கியாகவும் ரைலின் பெயர் பிரபலமாகிக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் சிறு பிரசுரங்களை வெளியிட்ட ரைல் பின்னால் நூல்களையும், வேத விளக்கவுரை நூல்களையும் எழுத ஆரம்பித்தார். உள்ளூரில் ஒரு பாலம் உடைந்து நூறு பேர் மரணமடைந்தபோது ரைல் தன்னுடைய முதல் துண்டுப்பிரசுரத்தை எழுதி வெளியிட்டார். மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும், தத்துவ ரீதியிலும் எழுதக்கூடிய திறமையைக் கர்த்தர் ரைலுக்கு வழங்கியிருந்தார். எத்தனையோ பேர் அவருடைய எழுத்து நடையைப் பின்பற்றி எழுத முயன்றும் அதில் வெற்றியடைய முடியவில்லை. தன்னுடைய எழுத்துப்பணி மூலம் பெற்ற பணத்தை ரைல் தன்னுடைய தந்தை கடன்பட்டிருந்தவர்களுக்கு கொடுத்துக் கடனைத்தீர்த்தார். திருச்சபை வரலாற்றை எழுதுவதில் ரைல் மிகத்திறமை வாய்ந்தவராக இருந்தார். தானே சம்பவங்களை நேரில் பார்த்தது போன்ற உணர்வோடும், மிகுந்த ஈடுபாட்டோடும் சபை வரலாற்றை அவர் எழுதினார்.

லிவர்பூலின் பிஷப்

1880ல் ரைல் அறுபது வயதாக இருந்தபோது இங்கிலாந்தின் பிரதமர் அவரை எதிர்பாராத விதமாக லிவர்பூலின் பிஷப்பாக நியமித்தார். ஒரு சில சுவிசேஷ இயக்கப் போதகர்கள் மட்டுமே இத்தகையப் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். ரைல் இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டது அநேகரை ஆச்சரியப்பட வைத்தது. வயதாகியிருந்தபோதும் ரைல் லிவர்பூலில் இருபது வருடங்களுக்கு சுவிசேஷப்பணியை மிகுந்த ஊக்கத்தோடு செய்தார். 1900ல் ரைல் மரித்தபோது அவருக்குப் பின் பதவிக்கு வந்தவர். “குழந்தையின் இதயத்தைக் கொண்டிருந்த கிரெனைட் போன்ற மனிதர்” என்று ரைலை வர்ணித்தார். அந்த வார்த்தைகள் ரைலினுடைய குணத்தையும் ஊழியப்பணியையும் விளக்குவதாக இருந்தன.

ரைலின் முக்கியத்துவம்

1. இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் திருச்சபைப் பிரிவு சுவிசேஷக் கோட்பாட்டைவிட்டு விலகிப் போய்க்கொண்டிருந்த காலப்பகுதியில் சீர்திருத்தவாதப் போதனைகளைத் தைரியமாக வெளிப்படையாகப் பிரசங்கித்தும், போதித்தும், எழுதியும் வந்திருந்தார் ரைல். ஆங்கிலிக்கன் திருச்சபையில் ஒற்றுமையை அவர் வலியுறுத்தினாலும் சத்தியத்தை விற்றுவிட்டு ஒற்றுமையைப் பாதுகாக்க அவர் தயாராக இருக்கவில்லை. விசுவாசத்தின் அடிப்படைப் போதனைகளைப் பின்பற்றுதல், ஒரே விசுவாச அறிக்கையைப் பின்பற்றுதல், ஒரே ஜெபநூலைப் பயன்படுத்துதல், வேதத்தில் அசையாத நம்பிக்கை வைத்திருத்தல் ஆகிய அம்சங்களின் அடிப்படையிலேயே சுவிசேஷக் கோட்பாட்டு போதகர்கள் இணைந்து செயல்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். ஆங்கிலிக்கன் திருச்சபையின் சீர்திருத்தத்திற்காக அவர் முயற்சியெடுத்தும் அவரது நோக்கங்களும், முயற்சிகளும் தோல்வியிலேயே போய் முடிந்தன. திருச்சபைப் பிரிவில் கட்டுப்பாடு இல்லாமலிருந்தது அவருக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஒரு மனிதன் எவ்வாறு இரட்சிப்பை அடையலாம்? என்ற கேள்விக்கு பலவிதமான பதில்கள் ஆங்கிலிக்கன் திருச்சபைப்பிரிவில் அன்று கொடுக்கப்பட்டன. சத்தியத்தைவிட்டு விலகிப்போயிருந்த அநேகர் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்றனர். 1885ல் ரைல், “நமது திருச்சபைப் பிரிவு கேட்பாரில்லாமல் அனைவரும் செயல்படும் ஒழுங்கற்ற நிலையில் சபைக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கிறது” என்று எழுதினார். தான் இறப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன் சபைக்கட்டுப்பாடு பற்றி ரைல் பின்வருமாறு எச்சரித்தார்: “சபைக்கட்டுப்பாடு என்பது வாழ்வா, மரணமா என்பதைப் போன்ற விஷயம். ஆங்கிலிக்கன் திருச்சபை தான் எதை விசுவாசிக்கிறது என்பதில் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும், இல்லாவிட்டால் அது இல்லாமலேயே போய்விடவேண்டும்.”

இன்றைக்கு உலகெங்கும் ஆங்கிலிக்கன் திருச்சபை ரோமன் கத்தோலிக்க மதத்தோடு காதலுறவை ஏற்படுத்திக் களியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. ஜோன் சார்ள்ஸ் ரைல் இன்று உயிரோடிருந்தால் அந்த திருச்சபைப்பிரிவில் தொடர்ந்திருந்திருக்கமாட்டார். கத்தோலிக்கத்தோடு உறவாடும் முயற்சியை அவர் ஒருபோதும் எடுத்திருக்க மாட்டார். ரோமன் கத்தோலிக்க மதத்தோடு இணைவதைப் பற்றிக் குறிப்பிட்ட ரைல், “அப்படிச் சேருவது நமது திருச்சபைக்கு ஏற்படுகின்ற மிகமோசமான ஆபத்தாக இருக்கும், அப்படியான ஆபத்தை சந்திப்பதைவிட நமது திருச்சபைப் பிரிவு அடியோடு நொறுக்கப்படுவது நல்லது” என்றார்.

2. ரைல் மறைந்துவிட்டாலும் அவருடைய எழுத்துக்களை இன்றும் ஆயிரக்கணக்கானவர்கள் உலகெங்கும் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய நூல்கள் பல பதிப்புகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவை தொடர்ந்து பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. பிரசங்கம் எப்படி இருக்க வேண்டும் என்று ரைல் எழுதியிருக்கும் கட்டுரை தலை சிறந்தது. ரைல் எழுதிய பல நூல்கள் பிரபலமானவையாக இருக்கின்றன. மறைந்தாலும் தன்னுடைய எழுத்துக்களின் மூலம் ரைல் தொடர்ந்து பிரசங்கித்தும், போதித்தும் வருகிறார்.

‘சிரிப்பலைகள்’
கெரிஸ்மெட்டிக் இயக்கத்தினர் மத்தியில் இன்று புதிதாக எழுந்துள்ள ஓர் எழுச்சி ஆராதனைக் கூட்டங்களில் ஒன்று ‘சிரிப்பலை‘ எழுப்புதல். தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த கெரிஸ்மெட்டிக் இவாஞ்செலிஸ்ட் ரொட்னி ஹாவார்ட் பிரவுன் (Rodney Howard Browne) இக்கைங்கரியத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். ‘ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்‘ என்று பலமுறை சத்தமிட்டுச் சொல்லி கூட்டத்தில் இருப்பவர்களை இவர் தொட்டவுடன் அவர்கள் நிலத்தில் திடீரென விழுகிறார்கள். விழுந்த பலரின் வயிற்றை இவர் தொட அவர்கள் நிறுத்தமுடியாத கட்டுக்கடங்காத ‘சிரிப்பலைகளை‘ எழுப்புகிறார்கள். அமெரிக்காவில் ‘கார்பென்டர்ஸ் ஹோம் சர்ச்சில்‘ நிகழ்ந்த இந்நிகழ்ச்சியை அச்சபை வீடியோ படமெடுத்து எல்லாக் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் இவ்வெழுச்சி பரவும் முகமாக, அனுப்பிவைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் ‘சிரிப்பலை‘ எழுப்பும் செயலை அவர்கள் பரிசுத்த ஆவியால் அடையும் ஆனந்தம் என்று கூறிக்கொள்கிறார்கள்.

திருமறையில் எங்குமே போதிக்கப்படாத புதிது புதிதான சிரிப்புக்கிடமான செயல்களையெல்லாம் ‘ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொண்டு‘ உலவிவரும் சாத்தானின் கைப்பாவைகளாக இருந்து பலரும் செய்து வருகிறார்கள். அதில் இன்னுமொன்றுதான் இந்தச்சிரிப்புக் கிடமான ‘சிரிப்பலை‘யும். இது தமிழ்க் கிறிஸ்தவர்களைப் பாதிக்கப் போகும் நாட்கள் அதிக தூரத்தில் இல்லை. இத்தகைய கோமளித்தனமான கூட்டங்களை நிராகரித்து ‘. . . .தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.‘ (யாக்கோபு 4:7).

கேள்வி? – பதில்!
இச்சஞ்சிகை ஆசிரியரிடம் பொதுவாகக் கூட்டங்களில் பலர் கேட்ட முக்கியமான கேள்விகளையும் பதிலையும் ஏனையோரது பயன்கருதி இப்பகுதியில் வெளியிடுகிறோம்.

திராவிட சமயங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? கிறிஸ்தவமும் சைவமும் ஒன்றுதான் என்ற முறையில் சிலர் போதித்து வருகிறார்களே, திருமறையில் இதற்கு என்ன ஆதாரம் உண்டு?

இப்போதனை இன்று தமிழகம், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. சிலர், இப்போதனை இந்துக்களைக் கவர ஓர் அருமையான வழி என்று நினைத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி சிறிது விளக்கமான பதில்கூற வேண்டியது அவசியம்.

அ. இவர்கள் போதிப்பதென்ன?

டாக்டர் மு. தெய்வநாயகம் (விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம் ஒப்பாய்வு), ஞானசிகாமணி (அகத்தியர் ஞானம்) போன்றோர் வடவராகிய ஆரியர்களின் செல்வாக்கற்ற, கலப்பில்லாத திராவிட சமயங்கள், தமிழகத்திற்கு வருகை தந்த அப்போஸ்தலனாகிய தோமாவின் (தோமா தமிழகத்திற்கு வருகை தந்தார் என்பது வரலாற்றில் நிரூபிக்கப்படாத ஆதாரபூர்வமற்ற ஓர் ஊகம் மட்டுமே) கிறிஸ்தவப் போதனைகளின் செல்வாக்கினால், தனித்துவமுள்ள உருவவழிபாடற்ற, ஒரே தேவனைக் கொண்ட தமிழர்களின் சமயமாக இருந்தது என்றும், சைவசித்தாந்தமும், திருக்குறளும் சித்தர்களின் பாடல்களும் கிறிஸ்தவ செல்வாக்கினால் வளர்ந்த இவ்வாதி திராவிட சமயங்களைப் பற்றித்தான் போதிக்கின்றன என்றும் எழுதியுள்ளார்கள். இப்போதனைகளை இன்னும் பெரிதுபடுத்தி சாது செல்லப்பா போன்றோர் இந்துக்களைக் கவரும் நோக்கில் கிறிஸ்தவப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது, கிறிஸ்தவத்திற்கும் இந்து மதத்திற்கும் இவ்வளவு தொடர்பு இருக்கும்போது நான் ஏன் அவர்களோடு சமமானமுறையில் ஒரே மேடையில் அமர்ந்து இருபகுதியுமே பயனடையும் விதத்தில் அமைதியான கலந்துரையாடல்களை (Dialogue) நடந்தக்கூடாது? என்ற முறையிலும் தயானந்தன் பிரான்ஸிஸ் (தமிழ்ச் சைவம்) போன்றோர் எழுதி வருகிறார்கள். இப்போதனைகள் இன்று தமிழகத்தின் வேதாகமக் கல்லூரிகள்வரை போயிருக்கின்றன. இவர்களுடைய கூற்றுகளுக்கும் போதனைகளுக்கும் வேதத்தில் எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

ஆ. இவர்களுடைய போதனை ஏன் தவறானது?

தோமா தமிழகத்திற்கு வந்தாரா? என்ற ஆராய்ச்சியை எல்லாம் உங்கள் கரத்தில் வைத்துவிட்டு இவர்களுடைய கருத்துக்களின் மூலமும், எழுத்துக்கள் மூலமும் எவ்வளவு தூரம் திருமறை தவறான முறையில் உண்மைக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதுதான் எனது முக்கிய நோக்கம். அதை வைத்தே நீங்கள் உண்மை எங்கிருக்கிறது என்று கண்டு கொள்ள முடியும்.

தோமா தமிழகம் வந்தாரா?

தோமா இந்தியாவிக்கு வந்தார் என்று இன்றுவரை வரலாற்றினால் நிரூபிக்கப்படவில்லை. இது வழிவழி வந்த நம்பிக்கையே தவிர அதற்கான ஆதாரங்கள் மிகக்குறைவு. தோமாவின் வழியில் வந்ததெனக் கருதப்படும் சீரியக்கிறிஸ்தவம் திருமறையின் போதனைகளுக்கு முரணான காரியங்களைக் கொண்டிருப்பதால் அதைக் கிறிஸ்தவத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவது தவறானது. இது கத்தோலிக்க மதமும் கிறிஸ்தவமும் ஒன்று என்று கூறுவது போலாகும். மயிலாப்பூரிலும், கேரளத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட ஆலயங்களில் சிலை வழிபாட்டிற்கான பல அறிகுறிகள் காணப்படுவதால் அதற்கும் திருமறை சார்ந்த கிறிஸ்தவத்திற்கும் தொடர்பிருக்க முடியாது. ஏனெனில் திருமறை சிலை வழிபாட்டை வற்புறுத்திக் கண்டிக்கின்றது (யாத்திராகமம் 20:1-7). அதேநேரம், வரலாற்றை வைத்து திருமறையை நிரூபிக்க முற்படுவதும் தவறான காரியம். வரலாற்றின் கண்டுபிடிப்புகளோடு திருமறையின் போதனைகளும் ஒத்துப்போகுமானால் அதை ஏற்றுக்கொள்ளலாம். வரலாறும் பாவத்தினால் கறைபடிந்து காணப்படுவதால் அதைக்கொண்டு பரிசுத்த வேதத்தை நிரூபிக்க முற்படுவது தவறு.

திராவிட எழுச்சி இயக்கம்

இவ்வாய்வுகள் தமிழரையும் அவர்களுடைய பண்பாட்டையும் ஆரியர்களுக்கு எதிராக உயர்த்திக் காட்டும் நோக்கத்தில் எழுந்தனவே தவிர திருமறையையும், கர்த்தரையும் மேன்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்தவையல்ல. இவ்வாய்வுகளின் முக்கிய நோக்கமே தமிழகத்தில் காணப்பட்ட திராவிட சமயங்கள் ஆரியக் கலப்பற்ற தளித்தன்மை கொண்ட சமயங்களாக இருந்தன என்று நிரூபிப்பதுதான். சித்தர்களின் பாடல்களும், திருக்குறளும் பல தெய்வ வழிபாட்டை ஆதரிக்காமல் அவற்றைக் குறைகூறுகின்றன என்பதற்காக, அவை கிறிஸ்தவ செல்வாக்குப் பெற்றதால்தான் அப்படிப் போதிக்கின்றன என்ற வாதம் பொருத்தமற்றது. இது அக்காலத்தில் ஆரிய எதிர்ப்பினால் எழுந்த போதனையாகவும் இருக்கலாம். அதுமட்டுமல்லாது சைவசித்தாந்தத்திலும் திருக்குறளிலும் திருமறைக்கு ஒவ்வாத அநேக போதனைகள் உண்டு. திருக்குறளில் காணப்படும் தெய்வத்தைக் குறித்த பொதுவான வார்த்தைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத்தான் குறிப்பிட்டுக் கூறுகின்றன என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இது தமிழ் மரபு என்று சிலர் வாதிட முற்பட்டாலும், திருமறை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வேதத்தில் காணப்படாத வேறு பெயர்களை பயன்படுத்தி கர்த்தரை அழைப்பதை வேதம் அனுமதிப்பதில்லை. அதேநேரம் திருவள்ளுவர் இயேசுவை அறிந்திருந்தார் என்பதற்கும் உறுதியான ஆதாரம் இல்லை. உண்மையிலேயே அவர் கிறிஸ்துவை அறிந்திருந்தாரானால் தெளிவாக கிறிஸ்துவை வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதோடு, திருமறையின் போதனைகளைத்தான் தன்நூலில் விளக்கியிருப்பார், வள்ளுவர் புலால் உண்ணலையும் வன்மையாகக் கண்டிக்கிறார். வேதம் அதைத் தடைசெய்வதில்லை (ரோமர் 14:1-4).

திராவிட சமயங்கள்

திராவிட சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம் ஆகிய ஆறு சமயங்களும் கிறிஸ்தவ திருமறையின் அடிப்படையில் எழுந்த இந்தியத் திராவிட சமயங்கள் என்பது டாக்டர் மு. தெய்வநாயகத்தின் வாதம். கிறிஸ்தவத்திற்கே உரித்தான திரித்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் பிதா, குமாரன், ஆவியாகிய அதே தேவனைத்தான் திராவிட சமயங்களும் வேறு பெயர்களில், தமிழகத்திற்கேற்ற முறையில் பயன்படுத்தின என்று இவர் எழுதியுள்ளார். ஆனால் இது திருமறைக்கே புறம்பான ஒரு விளக்கம். எந்த ஒரு மனிதனும் திருமறையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள கர்த்தரைப்பற்றிய திரித்துவ விளக்கங்களைத் தாம் நினைத்த விதத்தில் எந்தவொரு இனம் அல்லது விளக்கங் கொடுக்க முடியாது. அது நம் பார்வைக்கு எவ்வளவுதான் கவர்ச்சியுள்ளதாகவும் நன்மை அளிக்கும் காரியமாகவும் தென்பட்டாலும் அது திருமறைக்கு விரோதமான காரியம். அதேநேரம் இவர்கள் கூறுவதுபோல் பரிசுத்த ஆவியைப் பெண்ணாக உருவகப்படுத்தி ‘அம்மையாக‘ அழைக்க திருமறை எவ்விதத்திலும் இடங்கொடுக்காது. இத்தகைய விளக்கங்கள் திருமறையைத் தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் காரியங்களே தவிர, கர்த்தருடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து அவரை மேன்மைப்படுத்தும் செயல்களல்ல.

திருமறை, திருக்குறள், சைவசித்தாந்தம்

திருக்குறள், சைவசித்தாந்தம் போன்ற சாதாரண மனிதர்களால் எழுதப்பட்ட நூல்களைக் கர்த்தருடைய வார்த்தையோடு ஒப்பிடுவது வேதத்திற்குப்புறம்பான காரியமாகும். திருமறை தேவ ஆவியினால் அருளப்பட்ட திருவசனமாக இருக்கின்றது. அதன் சத்தியங்களிலும், போதனைகளிலும் எந்தவித தவறிற்கும் இடமேயில்லை. அதை உலக நூல்களோடு ஒப்பிட்டு சமப்படுத்திப் பார்க்கக்கூடாது. டாக்டர் மு. தெய்வநாயகமும் மற்றவர்களும் இதைத்தான் செய்துள்ளார்கள். அதேநேரம், திருக்குறள், சைவசித்தாந்தம் போன்றவற்றில் சில நல்ல கருத்துக்களும், போதனைகளும் காணப்படலாம். அவற்றை மட்டும் வைத்து, திருமறைக்கு சமமாக இப்புத்தகங்களை நாம் மதிப்பிடக்கூடாது. திருமறையைப் பொறுத்தவரையில் அதற்கு சமமான நூல்கள் உலகில் ஒன்றுமேயில்லை. கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும், கிறிஸ்தவ வாழ்க்கையை வாழவும் ஒருவனுக்கு சத்திய வசனமாகிய திருமறை மட்டுமே தேவையே தவிர, வேறு எந்தப்புத்தகத்தின் உதவியும் தேவையில்லை. ஆகவே திருமறையின் விளக்கத்தைத்தான் நாமனைவரும் நாடவேண்டும் வேறு சமயக் கோட்பாடுகளையோ சித்தாந்தங்களையோ அல்ல.

கிறிஸ்தவமும் இனப்பாகுபாடும்

திருமறையில் இனப்பாகுபாட்டிற்கு இடமில்லை. அப்படியிருக்க, திருமறை வழிவந்த சமயங்களாக திராவிட சமயங்கள் இருக்குமானால் அவை ஆரிய, பிரமாண வெறுப்புள்ளவைகளாக இருப்பதெப்படி? திருமறை எல்லா இனமக்களுக்கும் உரித்தானது. அதன் போதனைகளனைத்தையும் எல்லா இனமக்கள் மத்தியிலும், எந்தவிதப் பாகுபாடுமின்றி அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியும். நம் இனத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்றவிதத்தில் நாம் திருமறையை மாற்றமுடியாது. ஆனால், நமது கலாச்சாரத்தில் இருந்து, தேவனுக்கும், திருமறைக்கும் பொருந்தாது காணப்படும் அம்சங்களைக் களைந்தெடுக்க வேண்டியது நமது கடமை. ஆகவே, ஓர் இனத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்த திராவிட சமயங்களுக்கும், எல்லா இனங்களுக்கும் சொந்தமானதும் எல்லா இனங்களையும் பாவத்திலிருந்து விடுவிக்கும் வல்லமையுள்ள திருமறையின் அடிப்படையிலான கிறிஸ்தவத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

கிறிஸ்தவத்தைத் திராவிட சமயங்களோடு ஒப்பிட்டுக் காட்டும் செயலின் பல்வேறு தவறுகளை நாம் அடையாளம் காணமுடிந்தாலும் முடிவாக சில உண்மைகளை மட்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களும் அதை ஆதரிப்பவர்களும் பரந்த கொள்கையுடையவர்கள் (Liberal). இவர்கள் கர்த்தருடைய வார்த்தையின் பூரணத்துவத்திலும் அதன் போதுமான தன்மையிலும் நம்பிக்கையுள்ளவர்களல்ல. ‘தம்முடைய மகிமையினாலும், காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளியுள்ளது‘ என்ற பேதுருவின் வார்த்தைகளை இவர்கள் விசுவாசிப்பதில்லை. கல்வாரிச் சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரக்கத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள இரட்சிப்பின் வழிமுறைகளிலும் இவர்களுக்கு ஆர்வமில்லை. புற சமயங்களோடு கிறிஸ்தவத்தை சமப்படுத்தி கிறிஸ்துவின் பெயருக்கே இவர்கள் களங்கம் தேடித்தருகிறார்கள். இவர்களின் வார்த்தையில் மயங்கி, இப்போதனை மற்றவர்களை இலகுவாக கிறிஸ்துவிடம் கொண்டுவர உதவுமே என்று எண்ணிச் செயல்படுவது கர்த்தருடைய வார்த்தையை நம் காலில் போட்டு மிதிப்பதற்கு சமம். எரிச்சலுள்ள தேவன் இப்பேராபத்திலிருந்து நம்மைக் காப்பாராக.

கண்கள் திறக்க. . .!
அன்புள்ள வாசகர்களுக்கு,

கிறிஸ்துவின் நாமத்தில் என் நல்வாழ்த்துக்கள். கர்த்தருடைய கிருபையின் உதவியால் நாம் ஆரம்பித்துள்ள இச்சிறிய முயற்சிக்குக் கிடைத்து வரும் ஆதரவிற்குத் தலை வணங்குகிறோம். உங்களுடைய அன்பான ஆதரவும், கருத்துக்களும் இவ்வூழியத்திற்குப் பேருதவியாக அமையும், பலவிதமான சபை ஊழியங்களுக்கு மத்தியில் இப்பத்திரிகைக்கும் நேரம் ஒதுக்க அனுமதித்து, ஆதரவளித்து ஜெபத்தோடு என்னை ஊக்குவித்து வரும் என் சபை மக்களுக்கு என் நன்றி என்றும் உரித்தாகும். அவர்களுடைய உதவியில்லாமல் இதை நான் ஆரம்பித்திருக்கவே முடியாது. முதலாவது இதழுக்குக் கிடைத்துள்ள ஆதரவு எமக்கு அதிக ஊக்கத்தை அளிக்கிறது. சந்தா எதுவும் இல்லாமல், பலரும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை வெளியிடுகிறோம். ஆகவே, இதைப் பெறும் வாசகர்கள் மற்றவர்களுக்கு இதனை அறிமுகப்படுத்தி இவ்வூழியத்தில் பங்கு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இவ்விதழில் ‘கெரிஸ்மெட்டிக் இயக்கம்‘ கட்டுரையில், இரண்டாம் பாகம் வெளிவருகிறது. அநேகர் முதல் பகுதியை வாசித்துப் பயடைந்ததாக எழுதியுள்ளார்கள். எந்தவொரு இயக்கத்தையும் சாடுவது எமது நோக்கமல்ல. ஆனால், போலித்தனமானதும். திருமறைக்குப் புறம்பானதுமான இவ்வியக்கப் போதனைகள் கிறிஸ்தவத்தின் அத்திவாரத்தையே அசைக்க முயற்சிப்பதால் மகுடியின் நாதத்தில் மயங்கி நிற்கும் நாகத்தைப்போல, இவ்வியக்கத்தின் பிடியில் அகப்பட்டுத் தள்ளாடிக் கொண்டிருக்கும் அநேகருடைய கண்கள் இக்கட்டுரை மூலம் திறக்கப்பட வேண்டுமென்பதுதான் எமது ஜெபம். இது சம்பந்தமான கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்தும் இப்பத்திரிக்கையில் எதிர்பார்க்கலாம்.

நம்மைத் தீண்டி வரும் இன்னுமொரு விஷம் போன்ற போதனைதான் கிறிஸ்தவமும், திராவிட சமயங்களும் ஒன்றே என்பது. எப்படியாவது கிறிஸ்துவிற்கு ஆள் சேர்க்க வேண்டும் என்று அலைவோருக்கு இச்செய்தி சர்க்கரைபோல் இனிக்கலாம். ஆனால், இது கிறிஸ்துவின் பெயருக்கே இழிவு தேடித்தரும் செயல். இதைக்குறித்து “கேள்வி – பதில்” பகுதி ஆராய்கிறது. இதுபற்றி அதிக தகவல் அறிந்த வாசகர்கள் எமக்கு எழுதலாம்.

தேவகிருபை அல்ல, சுயமுயற்சியே ஒருவர் கர்த்தரை அறிந்துகொள்ள உதவும் பேராயுதம் என்று போதிப்பதோடு, அந்த அடிப்படையிலேயே பெரும்பாலானோர் இன்று கிறிஸ்தவ ஊழியங்களையும் எம்மத்தியில் நடத்தி வருகின்றார்கள். எங்கு தனிமனித வல்லமையும், அதிகாரமும் சர்வ சக்தியாக போற்றப்படுகின்றதோ அங்கே திருமறைக்கு இடமில்லை. பாவத்தால் கறைபடிந்த மனித சித்தத்தின் சுய செயற்பாடல்ல, கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத, சர்வ சுதந்திரமும், வல்லமையுமுள்ள கிருபையே மனிதனைப் பாவத்திலிருந்து கரை சேர்க்கிறது என்ற ‘கிருபையின் போதனை‘களின் அறிமுகக்கட்டுரையும் இவ்விதழில் ஆரம்பமாகின்றது.

படித்துப் பயனடையுங்கள். கர்த்தரைத் துதியுங்கள்.

அன்புடன்,

ஆர். பாலா.

‘கிருபையின் போதனைகள்’ என்றால் என்ன?
‘கிருபையின் போதனைகள்‘ என்ற சொற்றொடர் பலருக்குப் புதிதாக இருக்கலாம். சிலர் அது குறித்துக் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு சிலர் அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தும், அதில் தெரிவில்லாது இருக்கலாம். இக்கட்டுரை இப்போதனைகளை சரித்திர பூர்வமாக ஆராய்ந்து அறிமுகப்படுத்துகிறது.

இதைப்பற்றி நாம் சரிவர அறிந்துகொள்ள வேண்டுமானால் முதலாவது ‘கிருபை‘ என்ற வார்த்தையின் பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும். பழைய, புதிய ஏற்பாட்டிலே காணப்படும் இவ்வார்த்தை, நமக்கு மேல் உள்ள ஒருவர், நாம் அடையத் தகுதியற்ற தயவின் மூலம் நம்மோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பதைக் குறிக்கும். ஆகவே, தேவ கிருபை கர்த்தர் நம்மோடு ஏற்படுத்திக் கொண்டுள்ள ஓர் உடன்படிக்கையையும், தெரிந்து கொள்ளுதலையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. கர்த்தருடைய நேர்பயனுடைய (Effectual) அழைப்பின் மூலம் (கலா. 1:15) பாவியாகிய மனிதன் தன் வாழ்வில் மாறுதல் அடைந்து, இத்தேவகிருபையின் மூலம் மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் அனுபவிக்கிறான் என்று திருமறை கூறுகின்றது (எபே. 2:8-9; 2 தீமோ. 2:25). இக்கிருபையைத் தேவகுமாரனாகிய இயேசு மட்டுமே அளிக்கக் கூடியவராக இருக்கிறார் என்றும் வேதம் போதிக்கின்றது (யோவான் 1:14, 16-17; ரோமர் 5:21; 1 கொரி. 1:4).

கிருபை என்ற வார்த்தையின் உள்ளடக்கம், அதன் மூலம் நாம் பெற்றுக் கொள்ளும் விடுதலையைக் குறிப்பதாக இருக்கின்றது. இவ்விடுதலையை நாம் நமது சுய முயற்சிகளின் மூலமாகவோ, தகுதியின் அடிப்படையிலோ பெற்றுக் கொள்ள முடியாது (எபே. 3:1-10; தீத்து 3:3-7). 2-ம் நூற்றாண்டு காலப்பகுதியில் தேவ கிருபையை அடையும் வழிமுறைகளில் மனிதனுடைய முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் பரிசுத்த ஆவியின் செயற்பாடே நிராகரிக்கப்பட்டது. பாவம் என்ற ஒன்றில்லை என நிராகரித்த பெலேஜியஸ் (Pelagius) என்ற பிரிட்டிஷ் துறவிக்கு எதிராக ஆகஸ்டின்தான் (Augustine) கிருபையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இது இவருடைய சொந்தப் போதனையல்ல. ஆவியின் அருளினால், ஆகஸ்டினால் இவ்வுண்மையைத் திருமறையில் தெளிவாக அவதானிக்க முடிந்தது. மனிதனை சிறைபிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பாவத்திலிருந்து, அவனுக்கு விடுதலை தந்து, மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் அளிக்கக்கூடியது கிருபை மட்டுமே என்று ஆகஸ்டின் போதித்தார். அவரைப் பொறுத்தவரையில் தேவ கிருபையே மனிதனைப் பாவத்தின் அடிமைத்தளையில் இருந்து அகற்றி கர்த்தருடைய சித்தப்படி நடக்கச் செய்யக்கூடியதாக இருக்கிறது.

அதன் பிறகு பல நூற்றாண்டுகள் கிருபையைப்பற்றி பல தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் கடவுளின் காருணியத்தினால் 16-ம் நூற்றாண்டு காலப்பகுதியில்தான் இதைச் சூழ்ந்திருந்த இருள் விலக்கப்பட்டு, தெளிவாக தேவகிருபையின் பொருள் விளக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் ‘சீர்திருத்தவாதிகள்‘ (Reformers) என்று அழைக்கப்படும் கர்த்தரால் எழுப்பப்பட்ட தேவஊழியர்கள் தங்கள் அருளுரைகள் மூலம் கிருபையின் போதனைகளுக்குப் புத்துயிர் கொடுத்தார்கள். இவர்களுடைய போதனையில் தனி மனிதனின் செயலுக்கல்லாது தெய்வீகக் கிருபைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. திருச்சபையின் கைங்கரியத்தினாலும், மதபோதகர்களின் தயவினாலும் மட்டுமே இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இருந்த நிலைமைக்கு சாவுமணியடிக்க கர்த்தரால் எழுப்பப்பட்ட மார்ட்டின் லூதரும், ஜோன் கல்வினும் கிருபையின் மூலமாகவே ஒருவன் கிறிஸ்தவனாக மாறுவது மட்டுமல்லாது, தொடர்ந்தும் அவன் கிறிஸ்தவ வாழ்க்கையையும் வாழ முடியும் என்று ஆணித்தரமாகப் போதித்தார்கள். ஒருவனது சுய முயற்சியாலும், சித்தத்தினாலும் தேவனை அறிந்து கொள்ளலாம் என்று அக்காலத்தில் பொதுவாக நம்பப்பட்ட போதனையின் அடித்தளத்தையே இவர்கள் அசைத்து சுக்குநூறாக்கினார்கள். கிருபையைத் தேவன் தன் திட்டப்படி, தன்னால் தெரிந்து கொள்ளப்பட்ட மனிதனுக்கு இலவசமாக அளிக்கிறார் என்ற போதனைக்குக் கல்வினே முறைபடுத்தி வடிவம் கொடுத்தார். இதன் அடிப்படையில் அமைந்த போதனைகளைத்தான் ‘கிருபையின் போதனைகள்‘ என்று அழைக்கிறோம்.

இதனால், மனிதன் கடவுளை அறிந்து கொள்வதற்கு செய்ய வேண்டிய காரியம் ஒன்றுமே இல்லை; நாம் நினைத்தபடி வாழ்ந்து விடலாம்; அவர் தனக்குத் தேவையான நேரத்தில் நம்மைத் தெரிந்து கொள்வார் என்று எண்ணிவிடக்கூடாது. கிருபையின் போதனைகள், பாவத்தின் பிடியில் இருக்கும் மனிதன் தனது சுயமுயற்சியால் கடவுளை அறிந்து கொள்ள முடியாது என்றுதான் கூறுகின்றதே தவிர, மனிதன் அதற்கான முயற்சிகளில் ஈடுபடமாட்டான், ஈடுபடமுடியாது என்று கூறுவில்லை (ரோமர் 1:18-23). பாவியாகிய மனிதன் என்ன செய்தாலும், எதைச் செய்தாலும் அவனது இருண்டுபோன கண்களுக்கு அவர் தென்படமாட்டார் என்பதுதான் வேதவாக்கு. ஆகையால், ஆவியின் அநுக்கிரகத்தினாலும், தேவகிருபையினாலும் மட்டுமே அவன் அவரை அறிந்து கொள்ள முடியும்.

இக்கிருபையின் அடிப்படையில் அமைந்த போதனைகளை நாம் தெளிவாகப் பார்ப்பதற்கு முன்னால் இப்போதனைகளுக்கு எப்படி, ஏன் எதிர்ப்புத் தோன்றியது, இன்று உலகின் பல பாகங்களிலும் இதற்கெதிரான கொள்கைகளின் வழியில் கிறிஸ்தவர்களும் திருச்சபைகளும் போய்க்கொண்டிருக்கும் காரணம் என்ன என்றும் நாம் ஆராய்தல் அவசியம். அடுத்த இதழில் இதைக்குறித்து நாம் விவரமாகப் பார்ப்போம்.