h1

Home

நண்பர்களே!

கிறிஸ்துவின் பெயரில் உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்!

சீர்திருத்த காலாண்டு இதழாகிய திருமறைத்தீபம் நியூசிலாந்து சவரின் கிறேஸ் திருச்சபையால் வெளியிடப்படுகிறது. போதகர் ஆர். பாலா இதன் ஆசிரியராக இருந்து வருகிறார். அவரோடிணைந்து பல இறையியலறிஞர்கள் இந்தப் பத்திரிகையில் தரமான ஆக்கங்களை அளித்து வருகின்றனர்.

தமிழ் மொழியில் தரமான கிறிஸ்தவ ஆக்கங்களை அளித்து தமிழ் கிறிஸ்தவ இலக்கியம் தளைக்க உழைப்பதே பத்திரிகையின் தலையாய நோக்கம். இலக்கியம் கிறிஸ்தவ இலக்கியமாக இருக்க அது வேதத்தை அடிப்படையாகக் கொண்டு, அதைச் சார்ந்து மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். தேவ பயத்தோடு அந்தப் பணியைச் செய்வதையே ஆசிரியர் குழு குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.

அத்தோடு தமிழுலகம் பெரிதும் அறிந்திராதிருக்கும் சீர்திருத்த கிறிஸ்தவ வரலாற்றையும், சீர்திருத்த கிறிஸ்தவ பெரியவர்களையும், சீர்திருத்த கிறிஸ்தவ இலக்கியங்களையும், இறையியலையும் அறிமுகப்படுத்தி தமிழுலகில் சீர்திருத்த கிறிஸ்தவம் கர்த்தரின் கிருபையால் வளர உழைப்பதும் பத்திரிகையின் நோக்கமாக இருக்கிறது.

திருமறைத்தீபத்தை இலவசமாக அனைவரும் வாசிக்கும்படி வழங்குவது மட்டுமல்லாமல் இந்தப் பகுதியில் தொடர்ந்து வேறு புதிய அம்சங்களையும், ஆக்கங்களையும் அறிமுகப்படுத்துவதும் எமது நோக்கமாக இருக்கிறது. ஆசிரியர் தமிழில் வழங்கியுள்ள பிரசங்க செய்திகளையும் இதில் தரவிருக்கிறோம்.

திருமறைத்தீபத்தைக் கையில் பெற்று வாசித்துப் பயனடைய முடியாத பலர் இணைய தளத்தில் இப்போது அதை வாசித்துப் பயனடையலாம். இந்தத் தளத்தை மேலும் வளர்க்கவும், உங்களுக்கு உதவியாக இருக்கவும் அவசியமான உங்கள் கருத்துக்களையும் எங்களுக்கு அறியத் தாருங்கள். கர்த்தரின் ஆசீர்வாதம் உங்களோடு எப்போதும் இருக்கட்டும்.

அன்புடன்,

ஆர். பாலா
ஆசிரியர்

Follow

Get every new post delivered to your Inbox.